Friday, January 20, 2012

மோடியின் பகுத்தறிவற்ற, தவறான தன்உணர்வு! குஜராத் உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!


நீதியரசர் ஆர்.ஏ.மெஹ்தாவை லோக ஆயுக்தாவாக நியமித்த குஜராத் ஆளு நரின் அதிகாரத்தைப் பற்றி கேள்வி எழுப் பியிருந்த குஜராத் அரசின் மனுவை தள்ளுபடி செய்த குஜராத் உயர்நீதிமன்றம், ஊழலுக்கு எதிரான இந்த அமைப்புக்கான நியமனத்தைத் தடுத்து நிறுத்த முதல் அமைச்சர் நரேந்திர மோடி மேற்கொண்ட முயற்சிகளுக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்து உள்ளது. அவரது செயல் மிகுந்த வெறுப்பால் விளைந்தது என்றும், எவருமே தன்னை எதிர்க்க முடியாது என்ற தவறான உணர்வை அவர் கொண்டிருப் பதை வெளிப்படுத்துவது ஆகும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்தை ஏற்றுக் கொள்ள முதல மைச்சர் தெளிவாக மறுத்துள்ளது. மக் களாட்சியின் சாரமான சட்டத்தின் ஆட்சி யில் உள்ள நம்பிக்கையையும், லோகாயுக்தா அமைப்பின் நேர்மையையும் சுக்கு நூறாக நொறுக்கியுள்ளது என்று நீதியரசர் வி.எம்.சகாய் 18 ஆம் தேதியன்று தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
முதல் அமைச்சரின் தலைமையிலான அமைச்சரவை பகுத்தறிவுக்குப் புறம்பாக இவ்வாறு துணிவுடன் நடந்து கொண் டிருப்பதைப் பார்க்கும்போது, ஆளுநர் கம்லா பேனிவால் அரசமைப்பு சட்டத்தின் 163 ஆவது பிரிவின்படி தனது அளிக்கப் பட்டுள்ள, தனது முடிவின்படி செயல்படும் அதிகாரத்தின் கீழ் ஓய்வு பெற்ற நீதிபதி மேதாவை லோகாயுக்தாவாக நியமித்தது சரிதான் என்று தான் கருதுவதாக தனது தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.
யதேச்சதிகார செயல்!
யதேச்சதிகாரமாக செயல் பட்டதன் மூலம் முதல் அமைச் சர் ஒரு சிறிய அரசமைப்பு சட்ட நெருக்கடியை ஏற்படுத்தி விட்டார் என்று கூறிய நீதி பதி சஹாய்  அமைச்சரவை யின் ஆலோசனையுடனோ, இல்லாமலோ நீதிபதி மேதாவை லோகாக்யுக்தாக நியமித்த ஆளுநரின் செயல், நமது மக் களாட்சி முற்றுகையிடப்படா மல் இருக்கவும், கொடுங்கோ லாட்சியைத் தடுக்கவும்  மேற்கொள்ளப்பட் டதே ஆகும் என்று நீதிபதி சஹாய் கூறினார்.

நீதிபதி மேதா லோகாயுக்தாக நியமிக் கப்படுவது தனக்கு ஏற்புடையது அல்ல என் பதால் வேறொரு பெயரை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பரிந்துரைக்கக் கேட்டு முதலமைச்சர் நரேந்திர மோடி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், குஜராத் ஆளுநருக்கும் 2011 ஆகஸ்ட் 18 ஆம் தேதி கடிதம் எழுதியதை அவர் ஒப்புக் கொண் டுள்ளது, சட்டத்தின் ஆட்சி முழுமையாக செயல் இழந்து போகும் ஒரு நிலையை ஏற்படுத்துவதும், மக்களாட்சிக் கொள் கைகளை அழிப்பதும் ஆகும் என்று நீதிபதி சஹாய் கூறினார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதியன்று இரண்டு நீதிபதிகள் இருவேறு விதமான தீர்ப்பினை வழக்கியிருந்த நிலை யில், லோகாயுக்தாவாக நியமிக்கப்படுவ தற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் பரிந்துரைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதையும், அரசுக்கோ எதிர்கட்சித் தலைவருக்கோ புதியதாக மற்றொரு பெயரைப் பரிந்துரைக்க வேண்டும் என்று  கூறும் வீடோ அதி காரம் இல்லை என்பதையும்,  நீதிபதி சஹாயின் உத்தரவு நிலை நிறுத்திவிட்டது.
நீதிபதி சஹாயின் கருத்து கேட்கப்பட்ட, இரு நீதிபதி களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட மூன்று விஷயங்களில் முதல் அமைச் சர் மற்றும் தலைமை நீதிபதி ஆகியோருக்கிடையேயான கலந்தாலோ சித்தல் முடிவுக்கு வந்துவிட்டதா என்பதும்,  ஆளுநர் தன்னிச்சையாக நீதிபதி மேதாவை நியமனம் செய்ததால் இந்த விவகாரத்தில் முட்டுக்கட்டை ஏற்பட்டதா என்பதும், அமைச்சரவையின் உதவியும் ஆலோசனை யும் இல்லாமல் லோகாயுக்தா நியமன அறிவிப்பை வெளியிட ஆளுநர் அதிகாரம் பெற்றுள்ளாரா என்பதும், அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டுமா என்பதும் அடங்கும். தலைமை நீதிபதியின் முடிவு
தலைமை நீதிபதி ஒரு முறை பரிசீலனை செய்து, ஆட்சேபணைகளை நிராகரித்து விட்டு, ஒரு முடிவை மேற்கொண்ட பிறகு, தலைமை நீதிபதியின் முடிவை ஏற்றுக் கொள்வதைத் தவிர முதல் அமைச்சருக்கு வேறு வழியில்லை என்பதால், நீதிபதி மேதாவின் பெயரை முறைப்படி ஆளுநருக் குப் பரிந்துரைத்திருக்க வேண்டும்.
எதிர்கட்சித் தலைவரும் ஏற்றுக் கொண்டு விட்ட நீதிபதி மேதாவின் பரிந்துரைக்கும் முறையான கருத்துருக்களை அனுப்புமாறு முதல்வரைக் கேட்டு ஆளுநர் கடிதம் கூட எழுதியிருக்கிறார்.  ஆனால், குஜராத் லோகாயுக்தா சட்டத்தின் 3 ஆவது பிரிவின் படியும், அரசமைப்புச் சட்டத்தின் 163 ஆவது பிரிவின்படியும், தனது கட மையை நிறைவேற்றுவதற்கு மாறாக, புதிய பெயர் ஒன்றைப் பரிந்துரைக்குமாறு தலைமை நீதிபதிக்கு முதல் அமைச்சர் கடிதம் எழுதி விட்டு, தலைமை நீதிபதியின் பரிந்துரையை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்று ஆளுநருக்கும் கடிதம் எழுதிவிட்டார்.
1980 ஆண்டு முதல் உள்ள அனைத்து லஞ்ச ஊழல் குற்றச்சாற்றுகள் பற்றி விசாரிக்க நீதிபதி எம்.ஆர்.ஷா ஆணையம் நியமிக்கப்பட்டதும், அதைத் தொடர்ந்து தலைமை நீதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் ஆளுநரின் கையெழுத் திற்காக அனுப்பப்பட்ட அவசரச் சட்டங் களும், முதல் அமைச்சர் ஏற்றுக் கொள்ளும் கடமை கொண்டுள்ள,  தலைமை நீதிபதி யின் கருத்து பெற்றிருக்கும் உயர் அதிகாரத் தையும், முதன்மைத் தன்மையையும் ஏற்றுக் கொள்ளாமல் தான் நிராகரிக்கலாம் என்ற தவறான எண்ணத்தை முதல் அமைச்சர் கொண்டிருப்பதையே காட்டுகிறது என்று நீதிபதி சஹாய் தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.
தற்போது எழுந்துள்ள இந்த வழக்கு தனித் தன்மை வாய்ந்த வழக்காகும். அசாதாரணமான சூழ்நிலைகளில் அசாதா ரணமான தீர்வுகள் தேவைப்படுகின்றன. தலைமை நீதிபதியின் கருத்தின் முதன் மைத் தன்மையை  ஏற்றுக் கொள்ளாமல்முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை வெளிப்படையாக எதிர்த்தது ஒரு நெருக்கடியான சூடிநநிலையை உருவாக்கியுள்ளது என்று அந்த தீர்ப்பு கூறுகிறது. இந்த நியமனத்திற்கு நீதிபதி ஜே.ஆர்.வோராவின் பெயரைப் பரிந்து ரைக்க வேண்டும் என்று தலைமை நீதிபதியை திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்ட முதல் அமைச்சரின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால், அது ஒரு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதுடன், லோகாயுக்தாவின் பரிசீலனைக்கு உள்ளாகக் கூடிய பொதுப்பதவிகளில் இருப்பவர்களை மனநிறை வடையச் செய்வதாகவும், சட்டத்தில் கூறப்பட்டுள்ள இந்த அமைப்பின் நேர்மையை அழிப்பதாகவும் அமைந்திருக்கும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

முதல் அமைச்சரின் கோபமூட்டும் கருத்துகள்

நீதிபதி மேதாவுக்கு எதிரான முதலமைச்சரின் ஆட்சேபணைகள் தகுதி நிறைந்த ஆதாரங்களின் அடிப்படையில் நிராகரிக்கப்பட்ட பிறகு அதற்கு முதல் அமைச்சர் தெரிவித்த கோபமூட்டும் கருத்துகள் அவரது இணக்கமற்ற அணுகுமுறையைக் காட்டுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் குறும்புச் செயல்கள் நமது மக்களாட்சியை அழிக்கும் நோக்கத்தை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருந்தன. நீதிபதி மேதாலோகாயுக்தாவாக நியமிக்கப்பட்டதைத் தடுத்து நிறுத்திய கேள்விக்குரிய செயல்சட்டத்தின் ஆட்சியையே அச்சுறுத்துவதாகும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டப்படியான தனது அரசமைப்புச்சட்ட கடமைகளை நிறைவேற்ற முதலமைச்சர் மறுத்ததும், லோகாயுக்தா சட்டத்தைத் திருத்த அவசர சட்டம் பிறப்பித்து,நீதிதிபதி மேதா லோகாயுக்தாவாக நியமிக்கப் பட்டதைத் தடுத்து நிறுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளும் ஒழுக்கக்கேடான, கொடுங் கோன்மையான செயல்களாகும். மேற்கூறப்பட்ட அசாதாரணமான உண்மைகள் மக்களாட்சியை சிதைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டிருந்தது என்பதை நிலை நாட்டுகின்றன.முதலமைச்சரின் செயலால் உருவாக்கப்பட்டுள்ள தவறான எண்ணம் போக்கப்படவேண்டியதும், மக்களாட்சி சிறப்பாக
செயல்படுவதற்காக பொறுப்பு நிறைந்த அரசமைப்பு சட்ட முடிவை ஆளுநர் மேற்கொள்ள வேண்டியதும் அவசியமானதாகும்.முதல் அமைச்சர் மற்றும் அமைச்சரவையின் செயல்களும் நடத்தையும் நமது மக்களாட்சிக்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் கேடு விளைவிப்பதாக இருந்தகாரணத்தால் முற்றுகையிடப்படுவதில் இருந்து நமது மக்களாட்சி காப்பாற்றப்படுவதற்கும், கொடுங் கோலாட்சியைத்தடுத்து நிறுத்தவும், முதல் அமைச்சரின் தலைமையிலான அமைச்சரவையின் பரிந்துரை அல்லது ஆலோசனைக்கு
மாறாக, நீதிபதி மேதாவை லோகாயுக்தாவாக நியமிக்க தனது உசிதம் போல் முடிவெடுக்கும் அரசமைப்பு சட்டத்தின் 163 ஆவது பிரிவில் அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை ஆளுநர் பயன்படுத்தவேண்டியது தவிர்க்க இயலாதபடிமுற்றிலும் இன்றியமையாததாக ஆகிவிட்டது என்று நீதிபதி சஹாய் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
(நன்றி: தி ஹிந்து 20-1-2012,
மனாஸ் தாஸ்குப்தா - தமிழில்: த.க.
பாலகிருட்டிணன்.

1 comment:

suvanappiriyan said...

சிறந்த பதிவு. பகிர்வுக்கு நன்றி தோழரே!

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...