Wednesday, January 18, 2012

நம்முள், இதோ ஓர் எதிரி!

நம் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக் கும் இடையூறு செய்யும் எதிரிகள் எங்கே உள்ளனர் என்று வெளியே தேடிக் கொண்டிருக்காதீர்கள்.



மாறாக, நம்முடன் உள்ள எதிரிகள் மறைந்துள்ளனரே அவர்களைத் தேடிக் கண்டுபிடியுங்கள். அப்படியானால் நீங்கள் யாரைக் கண்டுபிடிக்கச் சொல்லு கிறீர்கள்? நம்மோடு பழகும் நயவஞ்சக வேடதாரிகளான நண்பர்களையா? என்று நீங்கள் கேட்பது என் காதுகளில் விழுகிறது.

அவர்கள் தங்களை இன்றைக்கு உடனடியாக இல்லாவிட்டாலும் என்றைக் காவது ஒரு நாள் தங்களைத் தாங்களே அடையாளம் காட்டிக் கொள்ளத் தவற மாட்டார்கள்.

அவர்களைப் பற்றிக் குறிப்பிட வில்லை. நம்முள்ளே ஒளிந்து கொண் டுள்ள எதிரியைக் கண்டுபிடியுங்கள் என்றுதான் கூறுகிறேன்.

நம்முள்ளே உள்ள ஓர் எதிரிப் பட்டாளத்தில் முன் வரிசையில் உள்ள ஒரு முழு எதிரியின் பெயர்தான் திருவாளர் சுயநலம்!

மனிதர்களாக உள்ள நம்மில் எல்லோ ருக்குமே சுயநலம் - சுய பாதுகாப்பு - உண்டு என்றாலும் அது தன்னைக் கட்டறுத்துக் கொண்டு காட்டாற்று வெள்ளமெனப் பாய்ந்து ஓடும்போது, அது தனக்கு அடைக்கலம் கொடுத்து வைத்த மனிதர்களையேகூட வீழ்த்தி வேதனைக்கு உள்ளாக்கிவிடுகிறது!

கட்டுக்குள் இருக்கும்போது அதனால் கேடு எதுவும் இல்லை; ஆனால் அது எல்லை தாண்டி ஏகாதிகாரத்தின் உச்சத்திற்குச் செல்லும்போது, எத் தனையோ சொல்லொணா கேடுகளைச் செய்து விடுகிறது!

சுயபாதுகாப்பு மனிதர்களுக்கு இருக்க வேண்டிய ஒன்றுதான். ஆனால் சுயநலம் - பொது நலத்தையே புறந் தள்ளி முந்தும்போது அது நிர்வாண நடனம் ஆடத் தொடங்கி அருவருப்பை ஏற்படுத்துகிறது.

1930-களில் அமெரிக்க அறிஞர் டேல்கார்னிஜி பலவகை முன்னேற்றங்கள் குறித்து பல புத்தகங்களை எழுதிய போது, ஒரு தகவலைக் கோடிட்டு ஒரு புத்தகத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார்!

தொலைப்பேசி உரையாடல்களை நியூயார்க் தொலைப்பேசி கம்பெனி ஒன்றிலிருந்து பதிவு செய்து, ஆய்வு செய்தார்; அதில் அதிகமாகப் பயன்படுத் தப்பட்ட சொல் எது என்று ஆய்வு செய் தால் நான்( I ) என்ற சொல்தான், 500 தொலைப்பேசி உரையாடல்களில் 3,900 தடவை பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கண்டறிந்தார் நமது சுயநல வெளிச்சத் தின் வெளிப்பாடு அது!

பொதுவாகவே ஓர் உரையாடலின் போது, பல நிறுவனங்களில், இயக்கங் களில், அமைப்புகளில் பொறுப்பில் உள்ளவர்கள் கூட திரும்பத் திரும்ப நான் செய்தேன்; நான் சொன்னேன் என்று கூறுவது, சொல்பவருக்குப் பெருமையாக இருந்த போதிலும், கேட்பவர்களுக்கு மிகவும் வெறுப்பாகவும் அமைந்துவிடக் கூடும்.

உலக மானுடத்தில் தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு, வீடு இவையுண்டு தானுண்டு என்போன் சின்னதோர் கடுகு போல் உள்ளங்கொண்டோன் என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சுட்டிக் காட்டி, தொல்லுலக மக்கள் எல்லாம் ஒன்றே என்னும் தாயுள்ளம் தனிலன்றோ இன்பம் என்று கூறினார்!

குழந்தைக்காக தங்களது வாழ் வினையே தியாகம் செய்யும் உள்ளம் மனித உள்ளங்களிலேயே உயர்ந்த உள்ளம் தாயுள்ளம்தான் என்று பலரும் நமக்கு - கவிஞரைப் போலவே - அறிவுறுத்தி யுள்ளனர்!

ஒரு குழுவில் விளையாடும் ஒரு தனி விளையாட்டு வீரரோ, வீராங்கனையோ ஊக்க மருந்தினை உட்கொண்டு (சுயநலத் தின் உச்சம் அது) அக்குழுவின் வெற்றியே கேள்விக் குறியாகி, கேலிக்குரியதாகி விடுவதில்லையா?

தன்னைத் தாழ்த்திக் கொள்வோன் பிறரால் உயர்த்தப்படுவான்; பிறர்முன் தன்னை மட்டும் உயர்த்திக் கொண்டு வளர நினைப்பவன் பிறரால் மட்டமாக மதிக்கப்படுவான் என்பது அனுபவ முது மொழி அல்லவா?

தன்னல மறுப்பு என்பது ஒரு தகைமை சால் பண்பு. பிறர் நலம் பேணுதல் மூலம் எவரும் தன்னை சுயநலம் அளவுக் கதிகமாகத் தாக்காமல் காத்துக் கொள் கிறார் என்பதே பொருள்.

பரிந்துரைக்கு வருவோரில் கூட கிடைத்து அதற்காக நன்றி சொல்ல வருப வர்களை விட பரிந்துரைத்தும் கிடைக்காத போது, அதைப் பொருட்படுத்தாது, அப்போதும் வந்து நன்றி அய்யா. தாங்கள் முயற்சி செய்தும் எனக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அதற்காக நான் வருந்த வில்லை. உங்கள் உதவியும், அன்பும் எனக்குக் கிட்டும் அளவுக்கு நான் தகுதியாகி விட்டதே போதும் என்று கூறிடும்போது அவர் உயர்ந்து நிற்கிறார்!

சுயநல நோய் நம்மைத் தாக்காமல் காக்க! காக்க!!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...