Tuesday, December 27, 2011

இன்னுமா அரிஜன்?


புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கிசெல்லும் சாலையில் கத்தக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட இடத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்புக்குச் செல்லும் வழிகாட்டிக் கல்லில் அரிஜன காலனி என்று எழுதப்பட்டுள்ள காட்சி

புதுக்கோட்டை டிச. 27- புதுக்கோட்டை மாவட் டத்தில் சாந்தி என்றால் அனைவரும் கேள்விப்பட்ட நபர் கத்தக்குறிச்சி சாந்தி. இந்திய அளவில் சாந்தி என்றால் விளையாட்டுத்துறையில் தோகாவில் போய் பரிசு வாங்கி இந்திய மானத்தை உலக அளவில் காத்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது. 

அந்தப் பரிசை சாந்தியிடமிருந்து பார்ப்பனக் கூட்டம் திருப்பிப் பறித்து விடத்துடித்து அடங்கிப் போய் விட்டது.

சாந்தியின் வறுமையைக் கேட்டறிந்த அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் சுமார் 20 லட்ச ரூபாய் அளவிற்கு நலத்திட்டங்களும் செய்திருந்தார். அதன் பின்னர் இப்பொழுது விளையாட்டுப் பயிற்சியாளராக இருந்து வருகிறார். ஆனால் அவர் வசித்து வரும் கத்தக்குறிச்சியில் அந்தக் குடியிருப்பு இன்னமும் அரிஜன காலனி என்றே அழைக்கப்பட்டு வருகிறது. 

கத்தக்குறிச்சி என்கிற பெயரை உலக அரங்கில் பதிவு செய்தமைக்காக வேண்டியாவது ஊராட்சி நிருவாகமோ மாவட்ட நிருவாகமோ இந்த அரிஜன காலனி என்கிற பெயரை மாற்றம் செய்யலாமே. தாழ்த்தப் பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு பெரியார் நகர், காந்தி நகர் அண்ணா நகர், அம்பேத்கர் நகர், கலைஞர் நகர், எம்.ஜி.ஆர். நகர் என்று தலைவர்களின் பெயர்களைச் சூட்டி அழைத்து வரும்போது இந்தப் பெயரையும் மாற்றலாமே. ஹரிசன் என்ற சொல்லை தமிழ்நாடு அரசு கைவிட்டு எவ்வளவோ நாள்களாகி விட்டனவே!

ஹரிஜனம் என்ற சொல்லைப் பயன்படுத்தியவர் காந்தியார். ஹரி என்றால் விஷ்ணு - விஷ்ணுவின் மக்களாம் இந்தத் தாழ்த்தப்பட்டவர்கள் - அப்படியானால் ஹரன் - சிவன் என்ன ஆனான்? காந்தியாரைப் பிடித்த மதக் கிறுக்கு இந்த அளவுக்குப் பாதித்துள்ளது.

சரி.. கடவுளின் புத்திரர்கள் எப்படி தீண்டப்படாத மக்களாக ஆனார்களாம்? இதற்குப் பதில் உண்டா?

ஒருக்கால் இன்னொன்றும் இதற்குக் காரணமாக இருக்கலாமோ இந்தத் தீண்டாமை என்பது கடவுள் சம்ம தத்துடன் நடைபெற்று வருகிறது. இதனை மாற்றிய மைக்கக் கூடாது என்பதுதான் இதன் உள்நோக்கமாக?  இருக்குமோ! காந்தியாரின் இன்னொரு பக்கம் மிகவும் பிற்போக்குத்தனமானது. இதனைத் தந்தை பெரியார் தோலுரித்துக் காட்டியதுண்டு.

1 comment:

சசிகலா said...

சிந்திக்க வேண்டிய சிறந்த பதிவு . நன்றி

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...