Saturday, December 17, 2011

ஜனநாயகம்!


ஜனநாயகம்!


இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விவசாயி கள் பிரச்சினைகள் தலை தூக்கி நிற்கின்றன. கடன் தொல்லையிலோ பெரும் அவதி - தற்கொலைகளுக் கும் பஞ்சமில்லை; இவை குறித்தெல்லாம் நாடாளு மன்றத்தில் பேசுவதற்கு நாளும், நேரமும் ஒதுக்கப் பட்டிருந்தது.
மாநிலங்களவையில் நேற்று இதுபற்றி விவாதங் கள் தொடங்கப்பட்டபோது அவைக்கு வந்திருந்த உறுப்பினர்கள் வெறும் அய்ம்பதே அய்ம்பது பேர் கள்தானாம்!
இந்தியாவில் 72.2. விழுக் காடு மக்கள் 8,38,000 கிராமங்களில் ஏதோ வாழ் கின்றனர் - பல்லைக் கடித் துக்கொண்டு. அவற்றில் வாழும் மக்கள் பெரும் பாலும் விவசாயிகள். இந்தி யாவில் 5  பேர் கொண்ட - இரு மாடுகள் வைத்திருக் கும் ஒரு விவசாயக் குடும் பத்தின் சராசரி வருமானம் மாதம் ரூ. 2115 பைசா. 10
ஒவ்வொரு மணி நேரத்திலும் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை மூன்று. 1993 முதல் 2006 வரை இந்தியா வில் தற்கொலை செய்து  கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை ஒன்றரை லட்சம்.
இவற்றையெல்லாம் சொன் னவர் யார் தெரியுமா? இந் தியாவின் விவசாயத்துறை அமைச்சர் சாட்சாத் சரத் பவார்தான்.
இந்தியாவின் ஒட்டு மொத்தமான பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காடு என்றால் விவசாய வளர்ச் சியோ வெறும் ஒரு சத விகிதம்தான்.
ஆனால் இந்த விவ சாயிகள்தான் நாட்டின் பெரும்பான்மையான மக் கள் (60 விழுக்காட்டுக்கும் மேல்).
பெரும்பான்மையான இந்த மக்கள் வாக்களித் தால்தான் சட்டமன்றத் திற்கோ, நாடாளுமன்றத் திற்கோ செல்ல முடியும்.
இப்படிப்பட்ட மக்களின் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கவும் அக்கறை யோடு கருத்துக்களை எடுத் துக் கூறவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இல்லை. 241 உறுப்பினர் களைக் கொண்ட மாநிலங் கள் அவையில் இந்த முக் கிய பிரச்சினைகள் பற்றி வலியுறுத்தும் கூட்டத்தில் வெறும் 50 பேர்களே கலந்து கொண்டனர்.
இவ்வளவுக்கும் இந்த நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு மாதம் ஒன்றுக்கு மக்கள் வரிப் பணத்தில் அளிக்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? மாத சம்பளம் ரூ. 50 ஆயிரம், நாடாளுமன்றம் நடக்கும் பொழுது நாள் ஒன்றுக்கு ரூ. ஓராயிரம், தொகுதிப்படி ரூ 20 ஆயிரம், அலுவல கப்படி ரூ 20 ஆயிரம்.
உறுப்பினருக்கு மட்டு மல்ல; அவர் துணைவியா ருக்கும் கூட இலவசப் பயண வசதிகள்.
இவ்வளவும் பெறுவதற் குக் காரணமாக இருக்கக் கூடிய ஏழை விவசாயப் பாட் டாளி மக்களின் பிரச்சினை கள் குறித்து அவைக்கு வந்து நாலு வார்த்தை பேச மனம் இல்லையே! என்னே ஜனநாயகம்!
விவசாயம் பாவத் தொழில் என்று மனுதர்மம் கூறியிருப்பதும் ஒரு காரணமோ!
- மயிலாடன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...