Saturday, December 17, 2011

மீனாட்சி பட்டாபிராமன் பேசுகிறாராம்


செய்தியும் - சிந்தனையும்!
மீனாட்சி பட்டாபிராமன் பேசுகிறாராம்

தினமலரில் வெளிவரும் இது உங்கள் இடம் பகுதி என்பது கற்பனையாக இட்டுக்கட்டி எழுதப்படும் பகுதி என்பதை தக்க ஆதாரத்துடன் விடுதலை முகத்திரையைக் கிழித்ததுண்டு. அதற்குப் பிறகாவது அதன் பார்ப்பனப் புத்தி மாறவில்லை - மாற்றிக் கொள்ளவும் மாட்டார்கள்; காரணம் அவர்கள் மறையவர்கள். மறைந்து இருந்து சூழ்ச்சி செய்யும் பார்ப்பனர்களாயிற்றே!
யாரோ மீனாட்சி பட்டாபிராமனாம் - மதுரையில் இருந்து எழுதியிருக்கிறார் (தினமலர் 16.12.2011 பக்கம்8)
என்ன எழுதுகிறார்? சிறீரங்கத்தில் பார்ப்பன அர்ச்சகர்களைத் தூக்கிச் செல்லுவது மனித உரிமை மீறல் என்று திராவிடர் கழகத் தலைவர் அறிக்கை வெளியிட்டுவிட்டாராம்.
அத்திரிபாட்சா கொழுக்கட்டை என்று துள்ளிக் குதிக்கிறது தினமலர்.
மகிழ்ச்சியாக - பல்லக்கைத் தூக்குகிறார்களாம் - இறைத் தொண்டாக செய்பவர்களின் உரிமையில் வீரமணி குறுக்கிட்டுவிட்டாராம்.
அடேயப்பா!
பல்லக்கில் பவனி வருவதும், பல்லக்கைத் தூக்குவதும் அவர்களின் உரிமைப் பிரச்சினையாம்.
சிறீரங்கத்தில் பல்லக்கைத் தூக்குபவர்களே எதிர்க் குரல் கொடுத்துள்ளார்களே, அதனை வசதியாக மறந்து விட்டு அக்கிரகார ஏடு வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளுகிறதே. இதற்குப் பெயர்தான் பார்ப்பனப் புத்தி.
அது என்ன சுமப்பவர்கள் எல்லாம் சூத்திராள். பவனி வருபவர்கள் எல்லாம் பிராமணாள். எங்காவது ஒரு சூத்திரன் பல்லக்கை ஒரு பார்ப்பானாவது சுமந்திருப்பானா?
சமயக் குரவர் மூவரில் கூட வயது முதிர்ந்த திருநாவுக்கரசர் (அப்பர்) தானே பொடிப்பையனான திருஞானசம்பந்தனை - அவன் பார்ப்பான் என்கிற காரணத்தால் பொதி சுமந்து இருக்கிறார்.
கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்த ஈ.வெ.ரா. இதைச் சொல்லியிருந்தால் ஏற்றுக் கொள்ளலாமாம். வீரமணி சொன்னால் ஏற்றுக் கொள்ளக்கூடாதாம். என்னே முரண்பாடு?
சங்கராச்சாரியார் பல்லக்கில் சென்றதையே பெரியார் கண்டிக்கவில்லையா?
பெரியார் சொன்னதை எல்லாம் அவர் காலத்தில் இந்தக் கூட்டம் ஏற்றுக் கொண்டதா?
தந்தை பெரியார்- சீடருக்கிடையே கூட மித்திரபேதம் செய்ய முயலும் இந்த வேலை ஏன்?
அது இங்கு நடக்காதம்மா, நடக்காது.
இறந்தவர்களுக்கு சூடம், சாம்பிராணி போடலாமா  என்று கேள்வி வேறு. திராவிடர் கழகத்தவர்கள் யாரும் அப்படி செய்வதில்லை என்பது கூடத் தெரிந்து கொள்ளாமல் உளறலாமா?
அடேயப்பா, அடுத்த அணுகுண்டைப் பாருங்கப்பா!
பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்பதே உண்மை. பிறக்கும்போது மனிதர்களாகப் பிறப்பவர்கள்தான் பின் பார்ப்பார், ஆகின்றனராம்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருவள்ளுவரின் கொள்கையும் பெரியார் கொள்கைதானே?
அதை ஏற்றுக் கொள்ளாததால்தானே பிரச்னையே!
பிறப்பில் எதுவோ அதுவேதான் கடைசி வரை என்பதுதானே இந்து மதம்!
பிறக்கும்பொழுது மனிதனாகப் பிறந்தவன், பிறகு எப்படி பார்ப்பான் ஆனானாம்? விளக்கம் இல்லையே.
பார்ப்பனத்தி வயிற்றில் பிறந்த காரணத்தால்தானே அவன் பார்ப்பான்.
பார்ப்பனத்தி வயிற்றில் பிறந்தவனுக்குத்தானே பூணூல் கல்யாணம் நடத்தப்படுகிறது - பிராமணாள் என்று நாமகரணம் சூட்டப்படுகிறது.
எந்தக் கவுண்டர், எந்தத் தேவர் பிராமணாள் ஆகிறான்?
தினமலரே - திரிநூலே - திராணி இருந்தால் பதில் சொல் பார்க்கலாம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...