Monday, December 5, 2011

பரிகாரம்!

எந்த குடி கெட்டாலும், எந்த கேடு ஏற்பட்டாலும் பார்ப்பனக் காட்டில் மட்டும் சோவென மழையோ மழை தான்.

குருவாயூரப்பன் கோவில் வளாகத்தில் நாய் நுழைந்ததா, கிறிஸ்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் நுழைந்தாரா? உடனே பிராயச்சித்தம் - யாகங்கள் - பார்ப்பனப் புரோகிதர் களுக்குத் தானங்கள், வருவாய் தடபுடல்!

காளஹஸ்தி கோவில் கோபுரம் இடிந்து விழுந் ததா? அய்யய்யோ, ஆபத்து!  ஆபத்து!! யாருக்கு? கடவு ளுக்குத்தானே - கடவுள் சக்தி மீதான நம்பிக்கைக் குத்தானே உண்மையில் ஆபத்து.

அப்படியெல்லாம் ஒப்புக் கொள்வார்களா? புத் தியைப் பயன்படுத்து வார்களா?

நாட்டுக்கு ஏதோ ஆபத்து! பிராயச்சித்தங்கள் செய்ய வேண்டும் - நேர்த்திக் கடன்கள் கழிக்க வேண்டும் என்று கூறி புரோகித தொப்பைகள் நிரம்பிட ஏற்பாடுகள்.

இப்பொழுது காஞ்சி புரம் ஏகாம்பரநாதர் கோவில் கோபுரக் கலசம் கீழே விழுந்து நொறுங்கிவிட் டது. உடனே மயிலை பிரபல சோதிடர் தயாராகி விட்டார். நாட்டுக்குக் கஷ்ட காலம், அதுவும் குடும்பத் தலைவர் களின் உயிருக்குத்தான் ஆபத்தாம்!

அப்படி சொன்னால் தானே பெண்கள் கிளம்பு வார்கள். மிகச் சுலபமாகப் பக்தி தீ பற்றும் பஞ்சாகப் பெண்கள் இருப்பதாக ஒரு கணக்கு - அதற்குத்தான் இந்தத் திரியில்  வத்தி வைக்கிறார். வெள்ளிக் கிழமை விளக்கேற்றுங்கள் என்று வேண்டுகோள் - அப்படியே அய்யரையும் கவனிக்கவேண்டும்.

காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்ட போதே காஞ்சி சங்கராச்சாரியார் திருவாளர் சந்திரசேகரேந் திர சரஸ்வதி என்ன கூறினார்?

காந்திஜி மரணத் திற்கு ஒரு ஹிந்துவே காரணமாயிருப்பது ஹிந்து சமூகத்திற்கே ஏற்பட்ட பேரவமானம். அத்தகைய மகானைச் சுட்டுக் கொன்ற பாவம் நம் ஹிந்து சமூ கத்தையே சூழ்ந்துள்ளது. தோஷங்களுக்கெல்லாம் பரிகாரம் ஸ்நானம்தான் - என்றாரே!

ஒரு மகானைச் சுட்டுக் கொன்றுவிட்டு ஒரு முழுக்கு போட்டு விட்டாலே போதும் - பாவங்கள் எல் லாம் பஞ்சாய்ப் பறந்து விடும்! இதுதான் அர்த்த முள்ள ஹிந்து மதம் உஷார்!
 
கோவில் கோபுரம் குப்புற விழுந்தாலோ, கலசம் விழுந்து நொறுங் கினாலோ, எங்கே கடவுள் சக்தியின் மீது மக்களுக்குப் பக்தி குறைந்துவிடுமோ என்ற பயத்தில் (பிழைப்பு நடக்க வேண்டும் அல் லவா?) அதனைத் திசை மாற்றத்தான் இந்தப் பரிகார யுக்திகள்! இந்தப் பார்ப்பனப் படுமோசங்களைத் தெரிந்து கொள்ள ஈரோட் டுக் கண்ணாடி தேவை.
- மயிலாடன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...