Monday, December 5, 2011

பெரியார் கொள்கையை உயர்த்திப் பிடித்து பரப்பி வருகிறார் கி.வீரமணி தி.மு.க.பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் பாராட்டுரை

பிரபல எழுத்தாளர் சோலை எழுதிய வீரமணி ஒரு விமர்சனம் என்ற புத்தகத்தை பேராசிரியர் க. அன்பழகன் வெளியிட பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன், நீதியரசர் பி.ஆர். கோகுலகிருஷ்ணன் மற்றும் பிரமுகர்கள் பெற்றுக் கொண்டனர். உடன் திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன், கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை, பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழக பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோர் உள்ளனர். (2.12.2011 - சென்னை )

பெரியார் கொள்கையை உயர்த்திப் பிடித்து பரப்பி வருகிறார் கி.வீரமணி
தி.மு.க.பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் பாராட்டுரை

சென்னை, டிச.3 : சென்னை பெரியார் திடலில் 2-12-2011 அன்று இரவு 7 மணிக்கு திரா விடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்களின் 79 ஆம் ஆண்டு பிறந்த நாளை ஒட்டி  எழுத்தாளர் சோலை எழுதிய வீரமணி ஒரு விமர் சனம் எனும் நூல் வெளி யீட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செய லாளர் பேராசிரியர் க.அன்பழகன், குஜராத் மாநில உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கோகுல கிருஷ்ணன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செய லாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகி யோர் பங்கேற்று உரை யாற்றினர்.

விழாவில் பங்கேற்று உரையாற்றிய தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்ப ழகன் அவர்கள் பெரி யாரின் இலட்சியங் களை, கொள்கைகளை வீரமணி அவர்கள் மேலும் உயர்த்திப் பிடித் துப் பரப்பி வருகிறார் என்ற பாராட்டு தெரி வித்து உரையாற்றினார்.

பேராசிரியர் க.அன்பழகன்

தி.மு.க.பொதுச் செய லாளர் பேராசிரியர் க.அன்பழகன் தமது உரையில் கூறியதாவது: நம்முடைய ஆசிரியர் வீரமணி திராவிடர் கழ கத் தலைவர் வீரமணி தந்தை பெரியாரின் பெருந் தொண்டர்  வீரமணி, பெரியாருடைய கொள்கையைக் காப் பாற்றிப் பரப்பி வரு கின்ற வீரமணி அவர் களுடைய 79 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு அவரைப் பாராட்டுகின்ற ஒரு நல்ல வாய்ப்பு கிடைத் தமைக்க உங்கள் அனை வருக்கும் எனது நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வீரமணியை வாழ்த்த நானும் வாழவேண்டும்

வீரமணி அவர் களுக்கு 79 ஆம் ஆண்டு பிறந்த நாள் என்றாலும் அவர் இன்னும் 20, 30 ஆண்டுகள் நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டும். அதற்கு ஒரு சுயநலமும்  உண்டு.  அதுவரை நானும் வாழ வேண்டும். அப்பொழுது தான் அவரை வாழ்த்தி நான் பேசமுடியும். எனவே அந்த வகையிலே அவர் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்ற வாழ்த்துகிறேன்.

சோலையின் வீரமணி ஒரு விமர்சனம்

நம்முடைய வீரமணி அவர்களைப் பற்றி புரிந்து கொள்ள வேண் டும் என்பதற்காக எழுத்தாளர் சோலை அவர் கள் வீரமணி ஒரு விமர் சனம் என்ற நூலை எழுதியிருக்கின்றார். சோலை அவர்கள் அடித்தளத்திலே ஒரு தேசிய வாதியாக இருந்தாலும், இலட்சியத்தில் பொதுஉடைமைக் கொள்கையை ஏற்றவர். வாழ்க்கையில் சுயமரி யாதையோடு வாழ வேண்டும் என்ற உணர் வோடு வாழ்ந்து வருகின்றவர். பெரியாரிடம் அவர் அதிகமாகப் பழகியி ருக்கா விட்டாலும், பெரியாரை அறிந்தவர். அதே போல கலை ஞரைப் புரிந்தவர். ஒரு படம் எடுப்பவர்கள் எப்படி பல்வேறு கோணங்களில் படம் எடுப்பார்களோ அது போல வீரமணி ஒரு விமர்சனம் என்ற நூலை - வீரமணி அவர்களைப் பற்றி பல கோணங்களில் எழுதி இருக்கின்றார்.

கத்திரி வெட்டுவது போல் எழுதுவார்

சோலை அவர்கள் பட்டுக்கு கத்தரிப்பது போல் எழுதுவார். அவர் எழுதுவதில் கருத்துக்கள் மட்டும்தான் வரும். சோலை பட்டறிவு மிக்கவர். எதை எப்படிச்  சொல்ல வேண்டுமோ, அவரு டைய அனுபவத்திலிருந்தே தனது கருத்துக்களை சொல்லக் கூடியவர்.  கல்கிகிருஷ்ணமூர்த்தி ஒரு முறை சொன்னார். பெரி யாருடைய பேச்சை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டிருக்கலாம் என்ற சொன்னார். காரணம் வீணாக ஒரு வார்த்தைகூட பெரியார் அவர்கள் பேச மாட்டார். புராணம் பாடுகிற வர்கள் வேண்டுமானால் வீணாக வார்த் தைகளைப் பயன்படுத்து வார் கள். பகுத்தறிவுவாதிகள், சிந் தித்துப் பேசக்கூடியவர்கள். ஒரு சொல்லைக் கூட வீணாகப் பயன்படுத்தமாட்டார்கள். சோலை அவர்கள் வீரமணி ஒரு விமர்சனம் என்ற நூலில் ஒரு இடத்தில் சொல்லுகிறார்.

கலைஞர்

மிருக உணர்ச்சியுள்ள மனி தர்களுக்கு ரத்தப் பசி என்று குறிப்பிட்டுள்ளார். புதுச்சேரி யில் கலைஞர் அவர்களை ஒரு காலிக்கூட்டம் அடித்து உதைத்து சாக்கடை ஒரத்தில் தள்ளிவிட்டுப் போய்விட்டது. அதற்க ஒரு அம்மையார் கலை ஞர் அவர்களைக் காப் பாற்றிய தையும், பிறகு பெரியா ரிடம் கலைஞரைக் கொண்டு வந்து சேர்த்ததையும், பெரியார் அவர்களே தன் கையால் மருந் திட்ட செய்திகளையும் கலைஞர் அடிக்கடி நெகிழ்ந்து கூறுவார். அந்த செய்தியை சோலை அவர்கள் எழுதியிருக்கின்றார். கலை ஞர் அவர்களைத் தாக்கியவர் கள் எத்தகைய மிருக உணர் வுள்ள ரத்தப்பசி கொண்ட மனி தர்கள் என்பதை விளக்கியி ருக்கின்றார்.

மகாநாடுகள் ஏணிப்படிகள்


இன்னொரு இடத்திலே மகாநாடுகள் நடைபெறுவது திராவிடர் இயக்க வளர்ச்சிக்கு ஏணிப்படிகள் என்பதை சோலை அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

1945 ஆம் ஆண்டு மதுரையில் கருஞ்சட்டைப் படை மாநாடு. அந்த மாநாட்டில் பெரியார் பட்டுக்கோட்டை அழகிரி நாங்கள் எல்லாம் கலந்து கொண்டு பேசினோம்.

பெரியார் பேசுகிற பொழுது தான் மதுரை கருஞ்சட்டைப் படை மாநாட்டிற்கு எதிரிகள் தீவைத்து மாநாட்டுப் பந்தலையே கொளுத்தி விட்டார்கள். மாநாட்டிற்கு வந்தவர் களை உயிரோடு காப்பாற்றுகின்ற பணியினை நமது கழக முன்ன ணியினர் முன்னின்று செய்தார் கள். அன்று இரவோ அல்லது மறுநாளோ தப்பித்தோம், பிழைத்தோம் என்று சொல்லக் கூடிய சூழ்நிலை உருவானது. மதுரை வழியாகச் சென்றால் ஆபத்து என்று வெவ்வேறு வழியாகப் பிரிந்து செல்லக் கூடிய சூழ்நிலை. பெரியாரை காப்பாற்றி வழியனுப்பப் பட்டது.

மதுரை கலவரம் - காரைக்கடி வரை கல்வீச்சு

நான், காரைக்குடி இராமசுப் பையா, பாவலர் பாலசுந்தரம் ஆகி யோர் மானாமதுரை வழி யாக காரைக் குடிக்கு வந்து நமது சுப.வீரபாண்டியன் அவர்க ளுடைய வீட்டில்தான் தங்கி னோம். காரைக்குடியில் மறு நாள் பொதுக் கூட்டம். அந்த கூட்டத்திலும் கல்வீச்சு. மதுரையில் மகாநாடு எரிக்கப்பட்டதன் தொடர்ச்சி காரைக்குடி பொதுக்கூட்டத்தில் கல்வீச்சு வரை தொடர்ந்தது. நாம் நட மாடுவதற்கே தடை இருந்த காலம்.

இருட்டிலே திருடனைப் பிடிப்பது போல்

இதை எல்லாம் நடைமுறை வாழ்க் கையிலே  பெரியார் பார்த்தார்.  பெரி யாருடைய தொண்டு எப்படிப் பட்டது என்று சொன்னால் இருட் டிலே விளக்கு இல்லாமல் திருடனைப் பிடிக்கின்றதைப் போல அவருடைய பணி அமைந்தது. பெரியார் தனக்கு ஏற்பட்ட எண் ணங்களை, அவருடைய இலட்சி யங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதை மட்டும் பார்த்தாரே தவிர, அதில் வெற்றி ஏற்படுமா? தோல்வி ஏற்படுமா? என்பதைப் பற்றி அவர் கலைப்பட்டதே கிடையாது. மயிரைக் கட்டி மலையை இழுப்போம். வந்தால் மலை. போனால் மயிர் என்றுதான் நினைத்தார்.

திராவிடன் ஏமாளியாக

திராவிட இனத்தவர்கள் இழிந்த நிலையில் இருந்தார்கள். தமிழர்கள் அறியாமையில் சிக்கி ஏமாளியாக இருந்தார்கள். உலகில் மூத்தமொழி தமிழ் மொழியை - தாய் மொழியாம் தமிழ் மொழி  - நீச்ச பாஷை என்று சொன்னார்கள். வட மொழி ஆதிக்கம் ஒரு பக்கம். பார்ப்பனர்கள் ஆதிக்கம் ஒரு பக்கம். மூட நம்பிக்கைகள் ஒரு பக்கம். அதைவிட அதை ஏற்று வாழு கின்ற தமிழர்களின் முட்டாள் தனம் இன்னொரு பக்கம் இருந்தது.

இப்படிப்பட்ட ஒரு சமு தாயத்தை மாற்றி தலை நிமிர்ந்து வாழ வைக்க வேண்டும் என்பதற் காகத்தான் தந்தை பெரியார் 1925 ஆம் ஆண்டே சுயமரி யாதை இயக்கத்தைத் தொடங் கினார். தந்தை பெரியாருடைய கொள்கை களை இன்றைக்கு வீரமணி அவர்கள் உயர்த்திப் பிடித்துப் பரப்பி வருகின் றார்.

அந்த காலத்திலே சுயமரி யாதை பஞ்சாங்கம் என்றே ஒன்று இருந்தது.

பார்ப்பானைப் பார்க்காதே
பூநூலை மதிக்காதே
உச்சிக் குடுமியை வணங்காதே

என்ற இந்த அரிச்சுவடி கள்தான் நான் எனது அய்ந் தாவது வயதில் படித்த முதல் அரிச்சுவடி. ஒருவன் உயர்ந்த வன், இன்னொருவன் தாழ்ந்த வன் என்று எவன் சொல்லு கின்றானோ அவன்தான் எனக்கு முதல் எதிரி. சூத்தி ரனுக்குத் திருமணம் பண்ணு கின்ற உரிமையே கிடையாது என்ற பார்ப்பனர்கள் மனுதர்மத்திலே எழுதி வைத்தார்கள். நாமெல்லாம் மனிதர்கள் என்று நமக்கு வாதாடுவ தற்கு வல்லமை கொடுத்தவரே பெரியார்தான்.


தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் குரலிலேயே உருவாக்கி தொகுக்கப்பட்ட  வாழ்வியல் சிந்தனைகள் என்ற உரை தொகுப்புகள் அடங்கிய குறுந்தகட்டினை குஜராத் முன்னாள் தலைமை நீதியரசர் பி.ஆர். கோகுலகிருஷ்ணன் வெளியிட முதல் பிரதியினை தொழில் அதிபர் எமரால்டு கோ. ஒளிவண்ணன் பெற்றுக் கொண்டார். பெரியார் நூல்கள்: உண்மை தொழிலாளர் யார்?, மேல்நாடும் கீழ்நாடும், பெண்கள் அலங்காரப் பொம்மைகளா? என்ற புத்தகங்களை திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் வெளியிட பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர் மயிலை நா. கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். உடன் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர். (2.12.2011 - சென்னை)


பெரியார் பற்றி அண்ணா

பேரறிஞர் அண்ணா அவர் கள்  ஒரு முறை சொன்னார். நான் கண்ட, கொண்ட ஒரே தலைவர் பெரியார் தான் என்று சொன்னார்.

இன்னொரு முறை தந்தை பெரியார் இல்லை என்றால் நாம் எல்லாம் இல்லை என்று அண்ணா சொன்னார். அத்தகைய தந்தை பெரியார் தந்த இலட்சியங்களைக் காப் பாற்றப் போராடிக் கொண்டி ருப்பவர்தான் வீரமணி அவர் கள்.

கலைஞரைப் போல, ஒரு தலைவரைப் பார்க்க முடியாது. அவர் தமிழன் என்பதால் வெறுப்புக் கண்ணோட்டதோடு பார்க்கின் றார்கள். கப்பல் ஓட்டிய வ.உ.சி. , செக்கிழுத்த வ.உ.சி.யின் தியாகத்தை மாலை போட்டு வரவேற்க ஆள் இல்லை. படிக்காத சாதாரண சவுண்டிப் பார்ப்பனருக்கு இருந்த மரியாதை இப்படிப்பட்ட தமிழர்களின் தலைவர்களுக்கு இல்லை.

பெரியார் கொள்கைக்கு வலு சேர்க்கிறார்

ஆனால் இன்றைக்கு பெரியா ருடைய தத்துவங்களை, இலட் சியங்களை வீரமணி அவர்கள் இடைவிடாமல் பரப்பி வருகிறார். பெரியாருடைய கொள்கைக்கு  வலுசேர்த்து வருகிறார். பெரியார் கொள்கை வெற்றி பெறட்டும். -இவ்வாறு தமது உரையில் குறிப்பிட்டார் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...