Thursday, December 22, 2011

பணமும் தேவையும்!

பணத்திற்கு - பணம் சேர்ப்பதற்கு - எதிராக அலெக்சாண்டர் வாழ்வு போன்ற நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டி எழுதி யுள்ளீர்கள்; அப்படியானால் பணம் இல்லாமல், பணத்தை வெறுத்து மாந்தர் தம் வாழ்க்கையை நடத்திட இயலுமா? என்று கேட்கிறார் எனது மதிப்பிற்குரிய நண்பர் ஒருவர்.
நான் எழுதியதை அவர் எப்படிப் புரிந்து கொண்டாரோ தெரியவில்லை.
பணத்தை அறவே வெறுத்து வாழ்வு வாழுங்கள் என்று ஒரு போதும் சொல்லவில்லை நான்.
யாருமே சொல்லிவிடவும் முடியாது; சொன்னால் அதை விடப் போலித்தனம் வேறு இருக்கவே முடியாது!
மண்ணாசை, பொன்னாசை, பெண் ணாசை ஆகிய அம்மூவாசைகளையும் துறந்தவர்களாக காட்டி, வெகு மக்களையும், அறியாமையில் உழலும் பல அப்பாவி பக்தர்களையும் ஏமாற்றி, ராஜபோக வாழ்க்கை வாழும் காவியர்கள் எப்படி இப்போது ஹை-டெக் சாமியார் களாக மாறி பகல் கொள்ளையை பவிசுடன் நடத்திடவும், இதற்கு ஆதரவாக கூலி பலமொழி எழுத்தாளர் களையும், பேய்எழுத்தாளர்களையும் (ழுடிளவ - றுசவைநசள- என்ற வாடகை எழுத் தாளர்களை இப்படி அழைப்பது தவறல் லவே) பிடித்து, தங்கள் பெருமைகளை எப்படி மார்க்கெட்டிங் செய்வது என்று ஓர் ஆராய்ச்சிக் குழுவை வைத்து பல கோடி, தங்கம், சொத்து - அசையும் சொத்து - (உடல் வியாபாரிகளான, சல்லாபிகள் உட்பட) - பல அசையும் சொத்துக்களையும் பெற்று - கடவுளுக் குப்  போட்டியான கோடி-ஈஸ்வரர் களாக அல்லவா காட்சி அளிக் கிறார்கள்!
மூவாசைகளையும் ஒருங்கே தங்க ளிடத்தில் கொண்டுள்ள பாபாக்கள், ஆச்சாரிகள், ஆனந்தாக்களுக்கு என்ன பஞ்சம்?
பணம் இன்றி உலகில்லை. நீரின்றி உலகமையாது என்ற வள்ளுவரின் கூற்று போல, அவன் (பணம்) இன்றி ஓரணு வும் அசையாது!
நம்ம கடவுள்களேகூட வசதி படைத்த பக்தர்களுக்கு உடனடியாகத் தரிசனம்  தருவதும், பணம் தராதவர்களுக்கு தர்மதரிசனம் 72 மணி நேரம் கழித்து தானே தருகின்றன!
எனவே பணத்தைச் சம்பாதிப்பது அவசியம். ஆனால் நியாய வழியில் சம்பாதிக்கும் பணமாக்கி அதனைச் சேர்த்து வைத்தால், அவ்வப்போது வேளா வேளைக்குப் பசி எடுக்கும்; படுத்தவுடன் தூக்கம் வரும்! உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற மூதுரை எவ்வளவு அருமையானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் அதீத வழியில் - பேராசைப் பெருந்தலைகளாகி, பெரும் கோடீசுவரப் பிரபுக்களாகி உலகக் கோடீசுவரர்களின் பட்டியலில் நம் பெயர் எப்போது வெளிவருகிறது என்று வெந்தணலின் ஜ்வாலைக்கு மயங்கி விழுந்த புழு படும்பாடு போன்றவர்களது இறுதி முடிவு எப்படி என்பதை உலகம் பார்க்கவே செய்கிறது! ஆனால் பாடம் பெறத்தான் மறுக்கிறது!
சிலர் மருத்துவமனைகளில் - மற்றும் சிலர் சிறைச் சாலைகளில் - சிறைச்சாலை என்பது தண்டிக்கப்பட்ட சிறைச்சாலைகள் மட்டுமல்ல; தண்டிக்கப்படாத மனச் சாட்சிச் சிறைகளில் சிக்கி ஆயுள் கைதிகளாக மாறாத மன உளைச்சலுக்கு ஆளாகுபவர்களையும் இணைத்தே கூறுகிறேன்.
சம்பாதிப்பவர்கள் மும்மடங்கு சேர்க்கலாம் -
ஒரு மடங்கு - அவர்கள் வசதியாக, பிறரிடம் கையேந்தாமல், நியாயமான தன்தேவை, தன் குடும்பத் தேவை, தனது பிள்ளை குட்டிகளுக்கு நல்ல கல்வி கொடுக்கத் தேவையான அளவு.
மற்றொரு மடங்கு - அறப்பணிகளுக்கு, தொண்டறத்திற்கு, தன்னை ஆளாக்கிய சமுதாயத்திற்கு, தான் பட்ட கடனைத் திருப்பித் தருவதற்கு என்ற பங்கு - அதில்தான் எத்தனை மகிழ்ச்சியும், மன நிறைவும் ஏற்படும்!
மூன்றாவது - திடீர் நெருக்கடி - தொழிலில் எதிர்பாராத நட்டம், திடீர் மருத்துவச் செலவு முதலிவைகளுக்கு - வாழ்க்கை சுனாமிகளுக்குப் பின் எல்லாம் வருமான வரி கட்டியேதான்! புரிகிறதா?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...