Thursday, December 22, 2011

எவரையும் மயக்கவல்ல பத்திரிகையாளர் மறைந்த கிறிஸ்டோபர் ஹிச்சன்ஸ்


தனது இளமைக் காலத்தில் போலந்து, போர்ச்சுகல், செக்கோஸ்லோவேகியா, அர்ஜன்டைனா ஆகிய நாடுகளுக்கு, அந்நாடுகளில் யதேச்சதிகாரத்துக்கு எதிரான போராட்டங்கள் நடந்து கொண் டிருந்தபோது,  சென்ற அவர் தனது சகோ தரத்துவ ஆதரவையும், ஒத்துழைப்பையும் அப்போராட்டங்களுக்கு நல்கினார்.
தனது 62 ஆவது வயதில் உயிர் நீத்த கிறிஸ்டோபர் ஹிச்சன்ஸ் தன் பணிக் காலம் முழுவதிலும் இடதுசாரிகளின் ஒளிமிகுந்த பத்திரிகையாளராகத் திகழ்ந் தார். வேறு எவரையும் பின்பற்றாமல் தனக்கென்று தனித்தன்மையுடன்  ஒரு தனிபாணியை உருவாக்கிக் கொண்டு எழுதியவர், வானொலி, தொலைக் காட்சிகளில் பேசியவர் இவர். அவரைப் போன்ற அரசியல் கருத்து கொண்டி ருந்தவர்களிடையே இத்தகைய பண்புகள் இல்லாமல் இருந்த காலமது.
சுதந்திரம், தாராளத்தன்மை என்று அமெரிக்கர்கள் வெளிப்படையாகக் குறிப்பிட்ட, சமதர்மம் என்று  மறைமுகமாக பொருள் அளிக்கும் கோட்பாட்டைப் பற்றி இவரை விட மிகுந்த நம்பிக்கையுடனும், உணர்ச்சி யுடனும் பேசியவர்கள் வேறு எவரு மில்லை. இவர் தாக்குதலின் இலக்கு அதிகாரத்தைத் தவறாகப் பயன் படுத்துபவர்களே.
குறிப்பாக ஹென்றி கிசிஞ்சரைக் கூறலாம். கம்போடியா நாட்டின்மீது குண்டு வீசச் செய்ததற் காகவும், சிலி நாட்டில் அல்லண்டே ஆட்சியைக் கவிழ்த்ததற்காகவும் கிசிஞ் சரையும், அதிபர் பில் கிளின்டனையும் நீதிமன்றக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முயன்றவர் ஹிச்சன்ஸ். பாலஸ்தீனியர் களின் நியாயமான போராட்டத்துக்கு சளைக்காமல் ஆதரவு அளித்தவர் இவர்.
ஆசியாவிலும், லத்தீன் அமெரிக்காவிலும் செல்வாக்குப் பெற்றிருப்பதாகக் காட்டிக் கொண்ட அமெரிக்காவின் போலித் தனத்தைத் தோலுரித்துக் காட்டியவர் இவர். ஒரு அரசியல் பகுத்தாய்வர் அல்லது அரசியல் சிந்தனையாளர் என்று  கூறுவதை விட,  ஒரு சிறந்த அரசியல் விமர்சகர் என்று இவரைப் பற்றிக் கூறலாம்.
கேம்பிரிட்ஜ் லேஸ் பள்ளியில் இவரது தலைமை ஆசிரியராக இருந்தவர் எதிர்காலத்தில் ஹிச்சன்ஸ் இவ்வாறு தான் விளங்குவார் என்று தொலை நோக்குப் பார்வையுடன் கூறியது போன்றே, மற்ற அனைத்து அரசியல் விமர்சகர்களைப் போலவே, எதையும் மிகவும் நுணுக்கமாகக் கவனிப்பது, அதை மிகச் சிறப்பாக வெளியிடுவது என்ற தனது பணியில் மிகச் சிறந்த ஆற்றலை அவர் வெளிப்படுத்தினார்.
அத்துடன் இடைவிடாது படிப்பவராக இருந்த அவர் மிகச்சிறந்த நினைவாற்றல் கொண்டவராகவும் விளங்கினார். தான் எப்போதோ படித்திருந்த அல்லது கேட்டி ருந்த எந்த ஒரு செய்தியையும் உடனே நினைவுக்குக் கொண்டு வரும் அவரது ஆற்றலை அவரது நண்பர் இயான் மெக் கிவான் கவனித்துக் குறிப்பிட்டுள்ளார்.
உரிச்சொற்களை அதிக அளவில் பயன்படுத்தி,  துணை வாக்கியங்களை யும்,  தங்களுக்குத் தெரிவிக்க அனுமதிக் கவும் என்பது போன்ற தொன்மையான சொல்லாடல்களையும் பொருத்தமாக இணைத்து சில நேரங்களில் அவர் எழுதும்  பாங்கு அனைவரையும் கவரும் ஆற்றல் படைத்ததாக இருக்கும். அவர் பேசியது ஒரு தேசிய சமதர்மக் கோட் பாட்டைப் பற்றியல்ல; அனைத்துலக சமதர்மத்தைப் பற்றியே அவர் பேசினார்.
1966 முதல் 1976 வரை டிராட்ஸ்கியின் அனைத்துலக சமதர்மம் என்ற குழுவில் இடம் பெற்றிருந்த இவர் தொழிற்சாலை யின் வாயிலில் வினியோகம் செய்த சம தர்மப் பிரச்சார வெளியீடுகளை இங்கி லாந்து நாட்டு தொழிலாளிகள் எந்த வித அக்கறையுமின்றி அலட்சியமாக வாங் கியதைக் கண்டு வருந்தினார். சமூகப் பொருளாதாரக் கொள்கைகளில் அவர் அதிக ஆர்வம் கொண்டிருக்க வில்லை. தனது வாழ்வின் பிற்பகுதியில், தனது மூன்று குழந்தைகளின் தனிப்பட்ட கல்வியைப் பற்றி அவர் குழப்பமடைந் திருந்ததாகவே தோன்றியது.
அது போன்ற நாடுகளின் நிலையைப் பற்றி அவர் அதிக அளவில் எழுதினார்.  சில நேரங்களில் கைது செய்யப்படும் சூழ் நிலையும், தாக்கப்படும் சூழ்நிலையும் கூட அவருக்கு ஏற்பட்டுள்ளது. கொடுங் கோன்மைக்கு எதிரான அவரது வெறுப்பு எப்போதும் நீங்காமல் நிலைபெற்றதாக இருந்தது.
1960-ஆம் ஆண்டுகளின் மற்ற தலைமுறையினரைப் போல, மாசேதுங் அல்லது பிடரல் காஸ்ட்ரோ பற்றிய மாயத் தோற்றங்களுக்கு அவர் எப்போதும் இடமளிக்கவில்லை. சில யதேச்சதிகார ஆட்சிகளை இடதுசாரிகள் சகித்துக் கொண்டிருப்பதைப் பற்றிய அவரது கவலைகள் 1983 வாக்கில் வளர்ந்தது. அர்ஜைன்டினா நாட்டின் ஜெனரல்  லியோ போல்டோ கால்டியரிக்கு எதிராக மார்க் கரெட் தாச்சர் மேற்கொண்ட போருக்கு ஆதரவு அளித்ததன் மூலம் தனது கம்யூ னிசத் தோழர்களுடன் அவர் மோதல் போக்கை மேற்கொண்டார்.
ஆனால் அவரது அரசியல் விசுவாசத்திற்கு அவை அச்சுறுத்தல் ஏற்படுத்துபவையாக தொடக் கத்தில் இருக்கவில்லை. 2001 இல் நியூயார்க் மற்றும் வாஷிங் டன் மீது தீவிரவாதத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட பிறகு,  புஷ் தலைமை தாங்கிய உள்நாட்டுப் பாதுகாப்புப் படை விழா ஒன்றில், 25 ஆண்டுகள் அமெரிக் காவில் வாழ்ந்த பிறகு, அமெரிக்கக் குடியுரிமையை அவர் பெற்றுக் கொண்டார்.
ஆங்கிலோ-அமெரிக்க இடதுசாரிகளான நோயம் சோம்ஸ்கி, டாரிக் அலி, அலெக் சாண்டர் காக்பர்ன், எட்வர்ட் சையத் ஆகிய பணக்காரர்களு டன் அவர் கொண்டிருந்த நீண்ட கால நட்பு கடுமையான வாதப் பிரதிவாதங் களுக்குப் பின் முடிவுக்கு வந்தது. 2010 இல் வெளியிடப்பட்ட அவரது ஹிச் நினைவுகள் -22 என்ற நூலின் மேலட்டையில் இது பற்றிய குறிப்பு வெளி யாகி உள்ளது.
போர்ஸ்மவுத்தில் பிறந்த ஹிச்சன்சின் பெற்றோர் நடுத்தரப் பிரிவினரில் கீழ் நிலையில் இருந்து மேல் நிலைக்குச் சென் றவர்கள். டோரிக் கட்சியின் கொள்கை களில் பிடிவாதமான பற்று கொண்டிருந்த அவரது தந்தை கப்பற்படைத் தலைவராக இருந்தார். ஹிச்சன்ஸ் எப்போதும் தன் தந்தையுடனோ அல்லது தனது தம்பி பீடருடனோ நெருக்கமாக இருந்ததில்லை.
அவர் அதிகமாக நேசித்தது தனது தாயைத்தான். இந்த நாட்டில் மேல்பிரிவு மக்கள் உருவாகப் போகிறார்கள் என்றால், ஹிச்சன்சும் அவர்களில் ஒருவராக இருக்க வேண்டும் என்பதால், அவரை விடுதியுடன் கூடிய பள்ளியில் பயிலச் செல்ல அவரது தாய் வலியுறுத்தினார்.
(தொடரும்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...