Monday, December 19, 2011

பார்ப்பன, மலையாளிகளின் கூட்டு ஆதிக்கத்தில் சிக்கியுள்ள ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம்!


தாழ்த்தப்பட்டோர், தமிழர்கள், கருப்பு நிறமுடையோர் புறக்கணிக்கப்படும் வன்கொடுமை அம்பலத்திற்கு வருகிறது!
மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் என்றாலே அங்கே ஒடுக்கப்பட்ட, பிற்படுத் தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் புறக்கணிக்கப்படுவதும், அவமதிக்கப்படுவதும், இல்லாதொழிக்கப் படுவதும் தொடர்கதையாக நடந்து வருகின்றன. உயர்ஜாதி பேராசிரியர் களின் தொல்லையால் தொடர்ந்து மாணவர்கள் தற்கொலையை நோக்கித் தள்ளப்படுவதும், அறிவார்ந்த ஆய்வாளர் கள் பதவி உயர்வு வழங்கப்படாமல் இருட்டடிக்கப்படுவதும் அய்.அய்.டிக்களில் நடந்துவருகிறது. ஒடுக்கப்பட்ட மாணவர் களை உள்ளேயே நுழைய விடாதபடி கட் ஆஃப் மதிப்பெண்களில் தில்லுமுல்லுகளில் ஈடுபடும் கூட்டம் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்! இப்படி ஒவ்வொரு மத்திய அரசு கல்வி நிறுவனத்துக்கும் ஒவ்வொரு பாணி! இதில் சென்னையை அடுத்த சிறீபெரும்புதூரில் இயங்கும் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின்(Rajiv Gandhi National Insti- tute for Youth Development) பாணி தனி!
தமிழ்நாட்டில் இயங்கும் இந்நிறுவனத் தில் பார்ப்பன, உயர்ஜாதி மனப்போக் கோடு தாழ்த்தப்பட்டோர், தமிழர்கள் திட்டமிட்டு ஒழிக்கப்படுவது, நிறத்தின் அடிப்படையில் புறக்கணிக்கப்படுவது போன்ற வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்துவருகின்றன என்னும் செய்தி வெளியாகியுள்ளது. இந்திய அரசின் இளைஞர் நலன் துறையின் பிரச்சாரங் களில் ஆர்.எஸ்.எஸ். விஷம் கலக்கப்பட் டிருப்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அங்கு பணியாற்றிய தாழ்த்தப் பட்டவரான பேராசிரியர் டாக்டர் அன் பழகன் எழுதியுள்ள கடிதம் எண்ணற்ற செய்திகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. மேலும் நமது விசாரணையில் நமக்குக் கிடைத்த ராஜீவ்காந்தி தேசிய நிறுவனம் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இதோ:
இளைஞர் நலன் சார்ந்த ஆராய்ச்சி, வளர்ச்சி, பயிற்சி ஆகிய காரணங்களுக் காக தொடங்கப்பட்ட இந்தியாவிலேயே தனித்தன்மை வாய்ந்த இந்த பயிற்சி நிறுவனம் மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இதன் இயக்குநராக அய்.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படு கின்றனர். பேராசிரியர், பயிற்றுநர், துறைத்தலைவர் போன்ற பணிகளுக்கு பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் உரிய தகுதி உடையவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பணியில் அமர்த்தப்படுவர். அதன் பின் மீண்டும் அவர்கள் தாங்கள் பணியாற்றிய இடத்துக்கே திரும்பி விடுவர்.
ஆனால் அப்படிப்பட்ட முறையான நேர்காணல்களில் (இருமுறை) தேறாமல், பின்வாயில் வழியாக நுழைந்தவரான டாக்டர் ராதாகிருஷ்ணன் நாயர் என்ற மலையாளி ஒருவரின் ஆதிக்கத்தில் தத்தளிக்கிறது ராஜீவ்காந்தி நிறுவனம். இவருடைய செயல்பாடுகளால் திட்டமிட்டு தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதும், தாழ்த்தப்பட்டோர் மீதான வெறுப்புகளும் அரங்கேறியிருக்கின்றன. அதே வேளை யில் மலையாளிகளை அதிகளவில் நுழைத் திருப்பதும் இவருடைய பணியேயாகும்.
கேரள பல்கலைக்கழகத்தில் இடை நீக்கம் செய்யப்பட்ட தற்காலிகப் பணியாள ரான டாக்டர் ரகு என்பவர் முறையான விளம்பரமோ, நேர்காணலோ இன்றி துறைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட் டார். இவர் மாற்றுப்பணியில் வந்திருப்பதாக வெளியில் பேசினர். ஆனால் தற்காலிகப் பணியாளர் மாற்றுப் பணியில் செல்ல முடியாது என்பதை அவர்கள் மறைத்தே வந்தனர். இவர்கள் இருவரும் டாக்டர் கீரே சன் என்பவரை (இவரும் மலையாளியே) விரிவுரையாளராக உள்நுழைத்தனர். இவர் இந்நிறுவனத்துக்குத் தேர்ந்தெடுக் கப்படும்போது ஓர் அரசு சாரா தொண்டு நிறுவனத்தில் (NGO) பணியாற்றிக் கொண் டிருந்தார். அடுத்தடுத்து இவருக்கு முக்கியப் பொறுப்புகளும் வழங்கப்பட்டன.
2006 முதல் 2009 வரை நான்காண் டுகள் மாற்றுப்பணியில் (deputation) தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனத்திலிருந்து வந்து ராஜீவ்காந்தி நிறுவனத்தில் சிறப்பாகப் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் சாருமதி, டாக்டர் வசந்தி ராஜேந் திரன் என்ற இரு பெண் பேராசிரியர்கள் தங்களது பணி நீட்டிப்புக்காக காத்திருந் தனர். இந்நிலையில் கடைசிநாள் 3 மணிக்கு அவசர அவசரமாக வந்த நீட் டிப்பு மறுப்பு ஆணையை வைத்து, அன் றைக்கே 5 மணிக்கு அவர்களுக்கு பிரிவு பசார விழா நடத்தப்பட்டு வெளியேற்றப்பட் டனர். 2010ஆம் ஆண்டில் மொத்தம் 5 பதவி களுக்கான அறிவிக்கை வழங்கப்பட்டு நேர்காணல் நடத்தப்பட்டது. அதற்கு விண்ணப்பித்திருந்த மேற்கண்ட இரு பேராசிரியர்களுக்கும் பணி வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் டாக்டர் கீரேசன் துறைத்தலைவராக தேர்ந்தெடுக் கப்பட்டார். இவருடைய பணியமர்த்தல் மத்திய அரசின் விதிமுறைகளுக்குப் புறம்பானது என்று வழக்கு இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் பொதுப் பிரிவின் கீழ் ஒருவரும், பிற்படுத் தப்பட்டோர் பிரிவில் இருவரும் தேர்ந் தெடுக்கப்பட்டனர். மற்றொருவர் தாழ்த்தப் பட்டோர் இடஒதுக்கீட்டின் கீழ் தேர்வான தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் அன்பழகன். இவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத் திலிருந்து மாற்றுப்பணியில் சென்றவர்.  இதுகுறித்து அவர் எழுதியிருக்கும் கடிதம் இந்நிறுவனத்தில் நடக்கும் வன்கொடுமைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. பணியில் சேர்ந்த ஒரு மாதம் எனக்கு அறையே வழங்கப்படவில்லை. எந்தத் துறைக்கு நான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் சொல்லப்படவில்லை. அந்நேரத்தில் இரண்டு துறைகள் முழுநேரத் தலைவர்கள் இல்லாமல் இருந்தன.  ஆனால் எனக்கு என்ன பணி, பொறுப்பு என்பது  தெரிவிக்கப்படவில்லை. மற்றொரு துறைக்கு பொறுப்பேற்றிருந்த டாக்டர் கொட்டுசேகர் என்பவரின் அறையில் அமருமாறு எனக்குத் தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே ஒரு துறைக்குத் தலைவராயிருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் நாயர் இரண்டாவதாக இன்னொரு துறைக்கும் தலைவராக இருந்தார். இரண்டாவது துறையை விட்டு வெளியேறுமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டும் அதற்கு அவர் மறுத்து வந்தார். இரண்டு மாதங்களுக்குப் பின்னர் இரண்டு துறைகளுக்கு நான் இழுத்தடிக்கப்பட்டேன். இது குறித்து இயக்குநர் மைக்கேல் வேத சிரான்மணி அய்.ஏ.எஸ். இடம் நான் தெரிவித்தபோது, துறைத்தலைவர்கள் என்போர் பெரிய ஆட்கள் இல்லையென்றும், எப்படி சமாளித் துக்கொள்வது என்பதை தெரிந்து கொள்ளுமாறும் பதில் தந்தார். ஆனால் என்னோடு தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் கீரேசனுக்கு உடனடியாக பொறுப்புகளும் துறையும் தரப்பட்டது. இவற்றாலெல்லாம் இந்நிறுவனம் எனக்கு ஒத்துவராது என்று முடிவு செய்து மாற்றுப்பணியிலிருந்து விடுபட்டு, மீண்டும் பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கே செல்ல நான் முடிவெடுத்தேன். அதற்காக பணிவிடுவிப்புக்காக விண்ணப்பிக்கவும் செய்தேன். அது முதல் எப்போது நிறுவ னத்தை விட்டு வெளியேறுகிறீர்கள் என்று குறைந்தது 100 முறையாவது என்னிடம் இயக்குநர் மைக்கேல் வேத சிரோன்மணி கேட்டிருப்பார். அப்போது டாக்டர் ரகு என்னிடம், இத்தகைய இடையூறுகளை யெல்லாம் நீ பொறுத்துக் கொண்டே ஆக வேண்டும்? என்று சொன்னார். இவை யெல்லாவற்றையும் கூட நான் ஜாதி ரீதி யிலானதாகப் பார்க்கவில்லை. ஆனால் அதன் பின்னர் கடந்த 2010 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் வருகையின் போது நடந்த நிகழ்வுகள் இவர்களது ஜாதி வெறியை அப்பட்டமாகக் காட்டியது. டாக்டர் அப்துல் கலாம் கலந்து கொண்ட பொது நிகழ்வுக்குப் பின்னர் அவருடன் துறைத் தலைவர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொள்ளும் தனி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் அளவில் அங்கே அய்ந்து பெண் பணியாளர்கள் மட்டுமே அனும திக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 4 பேர் பார்ப்பன மகளிர்; மற்றொருவர் கேரளா வின் நாயர் பெண்மணி. அய்ந்து பேரும் வெள்ளைத் தோல் கொண்டவர்கள். ஆனால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பார்ப்பனரல்லாத பிற பெண் பணியாளர் கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. காரணம் அவர்கள் வெள்ளைத் தோல் உடையவர்கள் இல்லை என்பது தான். கலாம் அவர்களைச் சந்திக்கும் இவ்வரிய வாய்ப்பினைத் தவறவிட்ட அவர்கள் புறக்கணிக்கப்பட்டது ஜாதி, நிறம் ஆகிய வற்றின் காரணமாக! இதற்கு இயக்குநர் மைக்கேல் வேத சிரோன்மணியும், நிறுவ னத்தின் துணைத் தலைவர் கேசவன் என்பவரும்தான் முக்கியக் காரண மானவர்கள். நான் 2011 மார்ச் 8ஆம் தேதி ராஜி னாமா செய்தபோது, வழக்கமாக தற் காலிகப் பணியாளர்களுக்குக் கூட நடத்தப்படும் விடைபெறும் விழா, துறைத்தலைவராகப் பணியாற்றிய எனக்கு நடத்தப்படவில்லை.
இந்த வரிசையில் கடந்த மே மாதம் மூன்று பணியிடங்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. இவற்றில் ஒன்று தாழ்த் தப்பட்டோருக்கென ஒதுக்கப்பட்டதாகும். நேர்காணலுக்குப் பின் இருவர் (பொதுப்பிரிவு-1, தாழ்த்தப்பட்டோர்-1) தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப் பட்டது குறித்து அவர்களுக்குத் தகவலும் தரப்பட்டது. ஆனால் பணிநியமன ஆணை இதுவரை தரப்படவில்லை. காரணம் கேட்டால் நிருவாக வசதியின்மை என்று கூறப்பட்டது. இவர்களில் ஒருவர் தாழ்த்தப் பட்டவரான தமிழராவார். இவர் ராதா கிருஷ்ணன் நாயர், கீரேசன் ஆகியோரை விட பன்மடங்கு தகுதியானவர் என்பதே இத்தாமதத்திற்கான காரணமாகும் என்று தனது கடிதத்தில் குறிப்பிட் டுள்ளார் டாக்டர் அன்பழகன்.
இந்நிறுவனத்தின் துணைத்தலைவர் பொறுப்பில் நியமிக்கப்பட்ட கேசவன் என்பவர் ராஜாஜியின் கொள்ளுப் பேரன் ஆவார். இத்துறைக்குத் தொடர்பில்லாத மென்பொருள் நிறுவனத்தவரான கேசவனின் நியமனம் அரசியல் சார்ந்த தாகும். இவர் வகிக்கும் துணைத் தலைவர் பதவிக்கு நிறுவனத்தின் நிருவாகத்தில் எவ்வித பொறுப்புகளும் கிடையாது. ஆனால் அவருடைய மேற்பார்வை மற்றும் ஆதிக்கத்தில் தான் நிறுவனம் நடைபெற்றுவருகிறது. தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி டில்லி வரை சென்று, நிறுவனத்தின் செயல்பாடுகளில் தனது பார்ப்பன ஆதிக்கத்தை இவர் நிறுவிவருகிறார். நிறுவனத்தின் தலைவராக இருக்கும் மைக்கேல் வேத சிரோன்மணி அய்.ஏ.எஸ்., தமிழகத்தில் நாகர்கோவிலில் பிறந்தவர். ஆனால் கேரளா பின்புலத்தில் அய்.ஏ.எஸ் ஆனவர். இவரது நடவடிக்கைகள் அனைத்தும் மலையாளிகளை உயர்த் தியும், தமிழர்களைத் தாழ்த்தியுமே இருக்கும். வழக்கமாகப் பேசும்போதும் மலையாளிகள் திறமையானவர்கள் என்றும், தான் மறுபிறவியில் மலையாளி யாகப் பிறக்க விரும்புவதாகவும் என்ற தொனியிலுமே இருக்கும். தமிழர்கள் எல்லோரும் கள்ளர்கள் (திருடர்கள்) என்பது இவர் அடிக்கடி உதிர்க்கும் திருவாய்மொழிகளில் ஒன்றாகும். (இந்த வாசகத்தை ஒரு புன்னகையோடு வரவேற் பாராம் ராஜாஜியின் கொள்ளுப்பேரன் திரு.கேசவன்) இப்படி ஒரு முறை இவர் மேடையிலேயே மலையாளப் பெருமை பேசிவிட, அதே மேடையில் மத்திய அமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்து பேசினார் என்பது மைக்கேல் வேத சிரோன்மணியின் நடவடிக்கைகள் எத்தகையன என்பதை வெளிப்படுத்தும். நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவதோ, தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் களை விழாவுக்கு அழைப்பது என்பதோ இந்நிறுவனத்தில் நடந்ததேயில்லை. வெளியிலிருந்து சிறப்பு அழைப்பாளர்களா கவும், வருகை விரிவுரையாளர்களாகவும் துறை சார்ந்தோர் அழைக்கப்படும்போதும் சென்னையில் இருக்கும் தகுதிவாய்ந்த எந்த நிறுவனத்தவரும் அழைக்கப்படுவ தில்லை. இவர்களின் ஊழல்களை அம்பலப்படுத்திய கணக்கு ஆய்வாளர் திரு.சிவக்குமார் என்பவருக்கும் பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை.
டாக்டர் ரகு என்பவரின் யோசனை யிலேயே இந்நிறுவனத்தில் எம்.ஏ. வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதற்காக இவர்கள் பெற்ற நிகர்நிலை அந்தஸ்து இப்போது ரத்து ஆகியிருப்பதுடன், எம்.ஏ முதுகலை பயின்றவர்களுக்கு இதுவரை பட்டமும் வழங்கப்படவில்லை. மொத்த முள்ள எட்டு துறைகளுக்கு இப்போது உள்ள நான்கு துறைத் தலைவர்களில் இரண்டு பேர் மலையாளிகள் என்பதே இந்நிறுவனம் எப்படிப்பட்டது என்பதை விளக்கும். இதுதவிர முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில் கிட்டத்தட்ட அனைத்தி லும் மலையாளிகளும், பார்ப்பனர்களுமே அமர்த்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு படிப்பை முடித்து இன்னும் பட்டம் கூடப் பெறாத 3 மலை யாளிகளுக்கு விரிவுரையாளர் பணி வழங்கப்பட்டிருக்கிறது. இது தற்காலிப் பணிதான் என்றாலும் நாளை இவர்கள் தான் நிரந்தரப் பணியாளர்கள் ஆக்கப் படுவார்கள் என்பதுதான் முக்கியமானது. இப்படி தொடர்ச்சியான மலையாளிகளின் ஆதிக்கத்தைக் கண்டு எதிர்ப்பு தெரிவித்த துறைத் தலைவர் ஒருவர் அண்மையில் பணி இடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதும் இப்போது தெரிய வந்துள்ளது.
இப்படி தொடரும் இந்த வன்கொடுமை களுடன் மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக உள்ளது மற்றொரு செய்தி! மத்திய அரசின் இந்த நிறுவனம் தயாரிக் கும் குறிப்புகள், துண்டறிக்கைகள், விளக்க ஏடுகள்தான் இந்தியா முழு மைக்கும் இளைஞர் நலத்துறையினரால் விநியோகிக்கப்படுகிறது. இளைஞர் வளர்ச்சிக்கு என அமைக்கப்படும் குழுவி னருக்கான பயிற்சி ஏடுகளையும் இந் நிறுவனமே தயாரிக்கிறது. இவை எல்லாவற்றிலும் ஆர்.எஸ்.எஸ். மதவாத நஞ்சு கலக்கப்படுகிறது என்பது தான் அந்த அதிர்ச்சி செய்தியாகும். மதச்சார்பின்மை பற்றிப் பேச, மதச் சார்பின்மைக்கு எதிராகத் தொடர்ந்து எழுதிவரும்  தீவிர இந்துத்துவவாதியான முன்னாள் அய்.ஏ.எஸ் அதிகாரி சுந்தரம் போன்றவர்கள் அழைக்கப்படுவது போன்ற நகைப்புக்கிடமான செயல்களுக்கும் இங்கு பஞ்சமில்லை. ஆனால் இவை நகைப்புக்கிடமானவை மட்டுமல்ல.. ஆபத் தானவையும் கூட என்கிறார்கள் இந்நிறு வனத்தில் பணியாற்றும் முற்போக்குச் சிந்தனையாளர்கள். இந்நிறுவனம் கையேடுகள் தயாரிப்பதற்கான பணியை ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர்களிடம் வழங் குவதும், அவர்கள் இந்துத்துவ பாணியில் தாஜ்மகால் இருந்த இடத்தில் முன்பு வேறு ஒரு கட்டடம்  இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது  என்பது போன்ற அடிப் படையற்ற தகவல்களோடு உருவாக்கி மத்திய அரசின் மூலமாகவே விநியோ கிக்க வைத்திருப்பதும் உச்சகட்டமான தாகும். (இதைதான் ஆர்.எஸ்.எஸ்., கோயிலை இடித்து தாஜ்மகால் கட்டப் பட்டதாக சொல்லி வருகிறது.)
ராதாகிருஷ்ணன் நாயர் இன்னொரு வருடன் இணைந்து எழுதிய நூல் ஒன்று அண்மையில் இந்நிறுவனம் சார்பில் மத்திய அமைச்சர் அஜய் மாக்கானால் வெளியிடப்பட்டது. அந்த இன்னொரு எழுத்தாளரான பி.கவுதமன் என்பவர் தீவிர இந்துத்துவ பிரச்சாரகர். ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களை நடத்துபவர்.  இப்படி ஒரு மத்திய அரசு நிறுவனம் முழுக்க கேசவன், ராதாகிருஷ்ணன் நாயர், மைக்கேல் வேத சிரோன்மணி, ரகு, கீரேசன் என்று பார்ப்பன, மலையாளி ஆதிக்கத்தோடு தமிழ்நாட்டில் நடைபெற்று வருவது முழுவீச்சில் எதிர்க்கப்பட வேண் டிய ஒன்றாகும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...