Monday, December 19, 2011

சமதர்மவாதிகளுக்கோர் நற்செய்தி ருசியாவில் கீதைக்குத் தடை! இந்தியாவும் பின் தொடருமா?


மாஸ்கோ, டிச.18- வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று கூறும் தத்துவ நூல் என்று உலகெங்கும் திட்டமிட்டுப் பரப்பப்படும் இந்து மதத்தின்  பகவத் கீதை ரஷ்ய நாட்டில் தடை செய்யப் படவுள்ளது. இது தீவிரவாத உணர்வைத் தூண்டும் ஓர் இலக்கியமா என்பதைப் பற்றிய தீர்ப்பை சைபீரிய நீதிமன்றம் ஒன்று நாளை (19.12.2011) வழங்க உள்ளது.
இஸ்கான் என்றழைக்கப்படும் ஹரே கிருஷ்ணா இயக்கத்தைத் தோற்றுவித்த பக்திவேதாந்தசாமி என்பவர்  உள்ளபடியே பகவத் கீதை என்ற தலைப்பில்  எழுதி யுள்ள நூலின் ரஷ்ய மொழிபெயர்ப்புக்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரும் வழக்கு ஒன்று டோமாஸ்க் நகரில் கடந்த ஜூன் மாதம் முதல் நடைபெற்று வருகிறது.
சமூக நல்லிணக்கமின்மையைப் பரப்பும்  இலக்கியம் என்று அறிவித்து அதை ரஷ்ய நாட்டில் வெளியிடுவதற்குத்   தடை  விதிக்க வேண்டும் என்றும் பிராசிகியூஷன் தரப்பில் கோரப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் வாழும் இந்திய சமூகத் திரிடையே உள்ள இஸ்கான் அமைப்பைச் சேர்ந்தவர்கள், கீதையைத் தடை செய்யும் முயற்சியைக் கைவிட ரஷ்யா நாட்டை இந்திய அரசு ராஜதந்திர உறவு மூலம் வலியுறுத்தவேண்டும் என்று கோரியுள் ளனர்.  ரஷ்யாவில் வாழும் இந்துக்களின் மத உரிமைகளைப் பாதுகாக்க இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற் கொள்ளவேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
கீதையைப் பற்றிய டோமாஸ்க் பல்கலைக் கழக நிபுணர் குழுவின்  கருத்தை இந்த வழக்கில் நீதிமன்றம் அக் டோபர் 25 அன்று கேட்டுள்ளது. போர்க் களத்தில் கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு போதனை அளிப்பது இந்த பகவத் கீதை. கீதையைத் தடை செய்வது மட்டுமன்றி,  இஸ்கான்சின் மத நம்பிக்கைகள் பற்றிய பிரபுபாதாவின் பிரச்சாரத்தையும் தடை செய்யவேண்டும் என்று கேட்கப் பட் டுள்ளது. இது தீவிரவாத உணர்வைத் தூண்டுவதாக உள்ளது என்றும், மற்ற மதநம்பிக்கைகள் மீது வெறுப்பை ஏற்படுத்துவதாகவும் உள்ளது என்பதே இதன் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...