Wednesday, December 21, 2011

டால்ஃபின்கள் என்ன அருந்துகின்றன?


அவை எதையுமே அருந்துவ தில்லை. பாலைவனங்களில் வாழும் விலங்குகளைப் போன்று, நன்னீரைப் பெற முடியாத நிலையில் இருப்பவை டால்ஃபின்கள். தங்கள் உணவி லிருந்து, பெரும்பாலும் (மீன்களே அவற்றின் உணவாகும்) தங்களுக்கு வேண்டிய நீர்ச்சத்தை, தங்களின் உடலில் உள்ள கொழுப்பை எரிப்பதன் மூலம்  அவை பெறுகின்றன.
டால்ஃபின் குடும்பத்தைச் சேர்ந்ததுதான் மிகப் பெரிய உருவம் கொண்ட கொலைகார திமிங்கிலமாகும். கொலைகார திமிங்கிலம் (Ciller Whale)   என்ற பொருள் கொண்ட asesina-ballenas என்ற ஸ்பானிஷ் சொல்லில் இருந்து பிறந்தது இதன் பெயர். இத்திமிங்கிலக் கூட்டங்கள் ஒன்று சேர்ந்து கொண்டு சிலநேரங்களில் தங்களைவிடப் பெரிய திமிங்கிலங்களை வேட்டையாடுவதால், இப்பெயரில் அவை அழைக்கப்படுகின்றன.
பேரச்சம் தரத்தக்க பற்களைக் கொண்ட ஒரு பெரிய மாமிச மலை என்பதைத் தவிர வேறு சொற்களால் திமிங்கிலங்களை விவரிக்க இயலாது.
டால்ஃபினுக்கு 260 பற்கள் வரை இருக்கும். இது வேறு எந்த பாலூட்டி உயிரினத்திற்கும் இல்லாதது ஆகும். அப்படி இருந்தும் அவை மீன்களை முழுமையாக விழுங்குகின்றன. அவற்றின் பற்களை இரையைப் பிடித்துக் கொள்ள மட்டுமே பயன்படுத்துகின்றன.
தனது மூளையின் ஒரு பகுதியும், அதற்கு எதிர்ப் பக்கத்தில் உள்ள கண்ணையும் ஒரே நேரத்தில் மூடிக்கொண்டு டால்ஃபின் தூங்கும். மூளையின் எஞ்சிய பகுதி விழித்துக் கொண்டிருக்கும். அதே நேரத்தில் அதன் மற்றொரு கண் எதிரிகளையும், தடைகளையும் கண்காணித்துக் கொண்டிருக்கும்; அத்துடன் மூச்சு விடுவதற்கு நீரின் மேல்மட்டத்திற்குச் செல்ல நினைவு படுத்தவும் செய்யும். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு இந்த வேலையை மூளையின் மற்ற பாதியும், மற்றொரு கண்ணும் தொடர்கின்றன. இந்த நடைமுறை மரமறுத்தல்(logging) என்று அழைக்கப்படுகிறது.
வியட்நாம் போர்க் காலத்திலிருந்து டால்ஃபின்கள் அமெரிக்கக் கப்பற்படைக் காக மிகப் பரந்த முறையிலும், சிறந்த முறையிலும் பணியாற்றுகின்றன. தற்போது அமெரிக்க கடற்படை ஒரு நூறு டால்ஃபின்களையும், 30 வகையான கடல் பாலூட்டிகளையும்  பணியில் நியமித்து வைத்துள்ளது. ஈராக் படைக்கு ஆறு கடல் சிங்கங்கள் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளன.
சூறாவளி கேத்ரினாவுக்குப் பிறகு, அமெரிக்கக் கடற்படை தாக்குதல் பயிற்சி அளித்திருந்த 36 டால்ஃபின்கள் தப்பிச் சென்று, நச்சு அம்பு துப்பாக்கிகளுடன் தற்போது கடல்பரப்பில் சுற்றித்திரிவதாக ஒரு கதை வதந்தியாகச் சுற்றி வருகிறது. இந்தக் கதையில் ஒரு புரளியும் உள்ளது. ஏனெனில் ராணுவ டால்ஃபின்களுக்கு தாக்குதல் பயிற்சி அளிக்கப்படுவதில்லை; பொருள்களைக் கண்டுபிடிப்பதற்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

1 comment:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

// பாலைவனங்களில் வாழும் விலங்குகளைப் போன்று, நன்னீரைப் பெற முடியாத நிலையில் இருப்பவை//

பாலைவனத்தில் வாழும் நடக்கக்கூடிய, பறக்கக்கூடிய விலங்குகள் யாவும் நன்னீர் தேடிச் சென்று பருகுகின்றன.
பாம்பு, பல்லி, எறும்பு போன்ற ஊர்வன யாவும் இரவு கடும் குளிரால் காற்றில் உள்ள நீராவி நீராக ஒடுங்கி
பாலைநிலத்தில் அங்காங்கே காணப்படும் இராவணன் மீசை போன்ற தாவரங்களில் பட்டு வடியும் நீரை அருந்துவதை நான் விபரணச் சித்திரங்களில் பார்த்துள்ளேன்.
ஆனால் ஒன்று இவை மிகச் சொற்ப நீருடனே நாள் பூராகவும் வாழும் தன்மை மிக்கவை!

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...