Saturday, December 17, 2011

வேண்டாம் வீண் பிடிவாதம்!


வேண்டாம் வீண் பிடிவாதம்!



சென்னை கோட்டூர்புரத்தில் உலகத் தரத்தில் கட்டப்பட்ட அண்ணாவின் பெயரால் திகழும் நூல கத்தை, நுங்கம்பாக்கத்திற்கு மாற்றும் தமிழ்நாடு அரசின் முடிவு வெகு மக்கள் கருத்துக்கு எதிரானது மட்டுமல்ல, ஆட்சி முறைக்கும்கூட உகந்ததே அல்ல.
தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங் களை மாற்றியே தீருவது என்பதுதான் அண்ணா தி.மு.க. ஆட்சியின் ஒரே குறிக்கோள் என்ற எண்ணம் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியிலும் உருவாகிவிட்டது; இது இந்த ஆட்சிக்கு நல்லதல்ல.
நாட்டு மக்களுக்குச் செய்யப்பட வேண்டிய எத்தனை எத்தனையோ திட்டங்கள் இருக்கின்றன. அவற்றில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, இந்த வீண் வேலையில் ஈடுபடுவது சிறுபிள்ளைத் தனமே!
தமிழ்நாடு அரசின் முயற்சிக்கு, சென்னை உயர்நீதிமன்றம்  இடைக்காலத் தடை ஆணையைப் பிறப்பித்துள்ளது. அந்தத் தடையை விலக்கக்கோரி தமிழ்நாடு அரசு நேற்று மனு செய்திருந்தது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு இடைக்காலத் தடையை விலக்கிக் கொள்ள மறுத்துவிட்டதோடு, வேறு எந்த இடத்திலும் இந்த நூலகத்தை மாற்றுவதற்கான கட்டடம் கட்டும் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று ஆணை பிறப்பித்துவிட்டது.
பொதுநலவழக்குத் தொடர்ந்த வழக்குரைஞர் களின் சார்பில் வாதாடிய வழக்குரைஞர்கள் எடுத்து வைத்த கருத்துகள் கருத்தூன்றிக் கவனிக்கப்பட வேண்டியவையே!
(1) இப்பொழுது நூலகம் அமைந்திருக்கும் இடத்தைச் சுற்றி முக்கிய கல்வி நிறுவனங்கள் இருந்து வருகின்றன. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நூலகத்தைப் பயன்படுத்தி வரு கின்றனர்.
(2) பிரதமருக்கு ஆலோசனை கூறும் தேசிய அறிவுசார் ஆணையம் இந்த நூலகத்தைப் பாராட்டிக் கூறியிருக்கிறது என்றெல்லாம் எடுத்துச் சொன்னதோடு, அதிர்ச்சி தரத்தக்க சில தகவல் களையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள் ளனர்.
(3) நூலகத்திற்குச் சந்தா சேர்ப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் ஆட்குறைப்பும் நடந்துள்ளது. இதனால் நூலகம் சரிவர இயங்க முடியாத நிலை. இது நீதிமன்ற அவமதிப்பு என்று எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
அரசு சார்பில் எடுத்து வைக்கப்பட்ட கருத்துகள் உப்பு சப்பு அற்றவையாக உள்ளன.
நூலக இட மாற்றத் துக்கு அனைத்துத் தரப்பு மக்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்; இந்தப் பிரச்சினையில் அரசு ஏன் தன்னிச்சையாக முடிவு எடுக்கிறது என்றும் கேட்டுள்ளார் தலைமை நீதிபதி இக்பால்.
நூலகப் பணிகள் சரிவர நடைபெறவேண்டும், நூலகத்தை இடம் மாற்றச் செய்வதற்கு எந்தவிதக் கட்டடப் பணிகளும் நடைபெறக்கூடாது - இடைக்காலத் தடை நீடிக்கும் என்று தெளிவாக நீதிமன்றத்தால் கூறப்பட்டுள்ளது.
இதற்குப் பிறகும், தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் எனும் மனப்பான்மையோடு நடந்து கொள்ளக்கூடாது ஓர் அரசு.
அறிவு சார்ந்த பிரச்சினையில் கைவைப்பது பிற்போக்குத்தனமாகவே கருதப்படும்.
இந்தப் பிரச்சினையில் நீதிபதிகள் கூறியிருக் கும் கருத்துகளையும், போக்கினையும் அரசு தரப்பு வழக்கறிஞர் புரிந்து கொண்டிருக்க முடியும்.
இந்த நூலக இடமாற்றுப் பிரச்சினையில் மேற் கொண்டு அரசு முயற்சிகளை மேற்கொள்வது வீண் வேலை, வெகுமக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொள்ளும் முயற்சி என்று இந்த அரசுக்கு, அரசு வழக்கறிஞர் எடுத்துச் சொல்லி,  வழக்கை முடித்துக் கொள்வது நல்லது.
கோபதாப போக்குகள், அரசு என்ற நிலையில் இருக்கவே கூடாது என்பது பால பாடமாகும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...