Sunday, December 18, 2011

பூமியின் வடிவம் எது போன்றது என்று கொலம்பஸ் கருதினார்?


பூமி உருண்டையாக இருப்பது என்று கொலம்பஸ் கூறவே இல்லை. அது கூம்பு வடிவம் கொண்டதாக இருக்கலாம் என்றும் அதன் உண்மையான அளவில் கால் பங்காக அது இருக்கலாம் என்றும் அவர் நினைத்திருந்தார்.
பிற்காலத்தில் புகழ் பெற்றதாக ஆனபோதிலும், 1492 இல் அவர் மேற்கொண்ட பயணம், மற்றவர்கள் கருதிக் கொண்டிருப்பதை விட ஆசியா மிக அருகில் உள்ளது என்பதை மெய்ப்பிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதல்ல. ஆனால் அவரது அக்கருத்து தவறானது.
உண்மையான அமெரிக்க கண்டத்தின் மீது அவர் கால் பதிக்கவேயில்லை. அமெரிக்காவுக்கு அருகில் உள்ள பஹாமாஸ் என்னும் ஒரு சிறிய தீவு வரைதான் அவர் வந்தார். ஆனால், யாராவது கேட்டால் தாங்கள் இந்தியாவை அடைந்துவிட்டோம் என்று கூறுவோம் என்று தனது சகபயணிகளை ஒரு பிரமாணத்தை எடுத்துக் கொள்ளச் செய்தார்.  1506 இல் வல்லடோலிட் என்ற இடத்தில் அவர் இறந்து போனார்.  தான் ஆசியாவின் கடற்கரையை அடைந்து விட்டதாகவே இறுதி வரை அவர் உறுதியாக நம்பிக் கொண்டிருந்தார். கொலம்பஸ் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் நிச்சயமற்றவையாகவே இருந்தன. ஜெனோவாவைச் சேர்ந்த ஒரு நெசவாளியான டொமென்சியோ கொலம்போ என்பவரின் மகன் அவர் என்பதையே அவரைப் பற்றிய  பெரும்பாலான குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவர் ஒரு யூத ஆட்டிடையன் என்றும், ஸ்பானியர், கார்சிகர், போத்துகீசியர், காடலான் அல்லது கிரேக்கர் என்று பலபடக் கூறும் கூற்றுகளும் நிலவுகின்றன.  ஜெனோவிய மொழியையே (இத்தாலிய மொழியை அல்ல)  தன் தாய்மொழியாக பேசிய அவர், ஸ்பானிய மொழியை எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டார். அதை போர்த்துகீசிய மொழி உச்சரிப்பில் பேசவும் செய்தார். அவர் ரகசியமாக கிரேக்க மொழி நாள்குறிப்பு ஒன்றையும் எழுதி வந்தார்.
அவரைப் பற்றிய அதிகாரபூர்வமான ஓவியம் எதுவும் கிடைக்காததால், அவர் பார்ப்பதற்கு எப்படி இருப்பார் என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், அவர் தனது 30 ஆவது வயது வரை கரிய தலைமுடி கொண்டவராக இருந்தார் என்றும், அதன்பின் அவர் தலை முடி முழுவதுமாக நரைத்துப் போயிற்று என்றும் அவரது மகன் கூறியுள்ளார்.
அவரது உடல் எங்கே அடக்கம் செய்யப்பட்டது என்பதையும் நாமறியோம்.  16 ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற மாமனிதர்களுக்குச் செய்வது போல அவரது சடலத்தில் இருந்த சதைப் பகுதிகளை நீக்கிவிட்டு அவரது எலும்புக் கூடு முதலில் வல்லடோலிடில் வைக்கப்பட்டிருந்தது என்றும், பின்னர் செவில்லியில் உள்ள கார்தூசியன் துறவிகளின் மடத்தில் வைக்கப்பட்டிருந்தது என்றும், பின்னர் கியூபா நாட்டின் சான்டா டோமிங்கோவிலும், ஹவானாவிலும், இறுதியில் செவில்லி தேவாலயத்தில் 1898 இலும் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
என்றாலும், அவரது பெயர் பொறித்த சவப்பெட்டி ஒன்று சான்டா டோமிங்கோவில் இன்றும் உள்ளது.  இப்ப்து ஜெனோவா மற்றும் பவியா நாட்டினரும் தங்களிடமும் கொலம்பசின் எலும்புகளின் சில பகுதிகள் இருப்பதாகக் கூறிக் கொள்கின்றனர். இது பற்றிய மரபணு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. என்றாலும், கொலம்பஸ் (அவர் கொலம்போ, கொலான் என்று எப்படி அழைக்கப்பட்ட போதிலும்) இறுதியாக எங்கு அடக்கம் செய்யப்பட்டார் என்பதும், அவரது எஞ்சிய வாழ்க்கை மற்றும் சாதனைகளைப் போலவே கேள்விக்குறியாகவே விளங்குகிறது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...