Sunday, December 25, 2011

வரலாற்றின் மணிமகுடத்தில் பொறிக்கப்பட்ட வைரக்கல்! 50,036 விடுதலை சந்தாக்கள் தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்டன


வரலாற்றின் மணிமகுடத்தில் பொறிக்கப்பட்ட வைரக்கல்! 50,036 விடுதலை சந்தாக்கள் தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்டன
சென்னை பெரியார் திடலில் 24.12.2011 அன்று இரவு தமிழர் தலைவரிடம் தோழர்கள், தோழியர்கள் 50,036 விடுதலை சந்தாக்களை பலத்த கரவொலிக்கிடையே வழங்கினர்.
சென்னை, டிச.25- விடுதலைக்கு ஆசிரியர் பொறுப் பேற்று 50 ஆண்டுகள் ஆனதையொட்டி 50 ஆயிரத்து 36 சந்தாக்கள் விடுதலை ஆசிரியரிடம்  வழங்கப்பட்டன.
திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் கே.சி. எழிலரசன் ரூ.11,49,800 வழங்கினார். தந்தை பெரியார் 38ஆம் ஆண்டு நினைவு நாளில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுதலை ஏட்டிற்கு ஆசிரியர் பொறுப்பை ஏற்று 50 ஆண்டுகள் ஆனதையொட்டி கழக குடும்பத்தவர் களால் தமிழினத்தால் 50 ஆயிரம் விடுதலை சந்தாக்கள் அளிப்பு மாபெரும் விழா வரலாற்றில் மணி மகுடத்தில் மாணிக்கக் கற்கள் - ஒளிவிடும் விழாவாக கோலாகலமாக, மிகுந்த எழுச்சியோடு சென்னை பெரியார் திடலில் நேற்று (24.12.2011) மாலை நடைபெற்றது.
வரலாற்றுக் காட்சிகள் திரையிடல்
இரவு 7.10 மணிக்கு விழா துவங்கியது. நிகழ்ச்சியில் பெரியார் வலைக்காட்சி சார்பாக தந்தை பெரியார் உயிரோட்டமாக இருக்கும் திரைப்படக்காட்சி வெளியிடப்பட்டது. தந்தை பெரியார், தமிழர் தலைவர் பற்றிய படத் தொகுப்பு, விடுதலைக்கு  ஆசிரியராக பணி புரிந்தவர்கள் பற்றிய படத் தொகுப்பு, தற்பொழுது 50 ஆயிரம் சந்தாக்களைத் திரட்டிட பாடுபட்ட தலைமைக் கழக பொறுப் பாளர்கள் ஆற்றிய அரும்பணிகள் குறும்படமாக மேடையில் காட்டப்பட்டு அனைவரது கரவொ லியைப் பெற்றது. அடுத்து விடுதலை பற்றிய பாடல் ஒலிபரப்பப்பட்டது.  கழக பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார்.
முன்னிலை
கழக செயலவை தலைவர் ராஜகிரி கோ. தங்கராசு, கலைச்செல்வி அமர்சிங், ஆ. நாகலிங்கம், இரா.ஜெயக்குமார், திராவிட எழில், க. பார்வதி, திருமகள், மு.அ. கிரிதரன் ஆகியோர் விழாவிற்கு முன்னிலை வகித்தனர்.
கலி. பூங்குன்றன் உரை
அடுத்து கழக பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் வரவேற்புரையாற்றினார். அவர் தமதுரையில், திருச்சியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கூடிய பொதுக் குழுவில் தமிழர் தலைவர் அவர்கள் விடுதலைக்குப் பொறுப்பேற்று 50 ஆண்டுகள் ஆனதையொட்டி 50 ஆயிரம் சந்தாக்கள் அளிக்க முடிவு செய்தோம். அய்யா காலத்தில் விடுதலை ஆசிரியராக நமது தமிழர் தலைவர் அய்யா அவர்களால் நாற்காலியால் அமர வைக்கப்பட்டார். அப்பொழுது அய்யா அவர்கள் நமது ஆசிரியர் அவர்களிடம் வைத்த வேண்டுகோள் இன்னும் இரண்டு மாதத்தில் 2500 சந்தாக்கள் சேர்க்க வேண்டும் என்பது. ஆசிரியர் அவர்களுக்கு கொடுத்த அவகாசம் இரண்டு மாதம். நமக்குக் கிடைத்த அவகாசம் 3 மாதம் அதற்குள் 50,000 சந்தா வழங்கி விட்டோம் என்று வெற்றிக் களிப்புடன் கூறிய அவர் தமிழர் தலைவர் - விடுதலை ஆசிரியர் பொறுப்பு (1962) ஏற்பதற்கு முன்பே 1960 இல் தமிழர் தலை வரைப் பாராட்டி அய்யா கூறிய செய்தியை விளக் கினார்.
இரா.குணசேகரன்
அடுத்து கழக துணைப் பொதுச் செயலாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் அறிமுக உரையாற்றினார். விடுதலை சந்தா சேர்ப்பில் எத்தகைய ஆர்வத்துடன் கழகத் தோழர்கள் ஈடுபட்டார்கள். அய்யா அவர்கள் ஆயுள் நீள பாடுபடுவதுதான் நமது நோக்கம் என்றார்.
கோ.சாமிதுரை
கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை தமது உரையில், தமிழர் தலைவர்க்கு 50 ஆயிரம் சந்தா என்ன? ஒரு லட்சம் சந்தா நம்மால் தரமுடியும் என்றார். 31 சி சட்டத்தை தமிழக அரசுக்குத் தந்தார் தமிழர் தலைவர். அதில் வெற்றி பெற்றார். மண்டல் கமிசன் அறிக்கைக்காக டில்லி சென்று தலைவர்களை சந்தித்து அதிலும் வெற்றி பெற்றார்.
இப்பொழுது உலக தலைவர்களை சந்திக்க பறந்து கொண்டிருக்கிறார். பெரியார் கொள்கைகளை உலகு தொழும் என்கின்ற அளவுக்கு பணியாற்றி வருகிறார் என்று பாராட்டினர்
வீ. அன்புராஜ்
அடுத்து அனைவருடைய கரவொலிக்கிடையே மாநிலக் கழகப் பொறுப்பாளர்கள்  50 ஆயிரத்து 36 சந்தாக்களை  தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர்.  கழக பொதுச் செயலாளர் சு. அறிவுக்கரசு தமிழர் தலைவருக்கு ஆடை அணிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ரூ 11,49,800
திருப்பத்தூர் மாவட்டம் சார்பாக அதன் தலைவர் கே.சி.எழிலரசன் மாவட்டத் தோழர்கள் புடைசூழ பலத்த கரவொலிக்கிடையே ரூ 11,49,800-க்கான காசோலையினை முதல் தவணையாக தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார்.
பெரியார் கல்வி நிறுவனங்கள்
அடுத்து பெரியார் கல்வி நிறுவனங்கள் சார்பாக தமிழர் தலைவரிடம் சந்தாக்கள் வழங்கப்பட்டன.
தஞ்சை விடுதலை வாசகர் வட்ட தலைவர் கே.ஆர்.பன்னீர்செல்வம் உரையாற்றினார்.
விடுதலை சந்தா சேர்ப்பிற்காக அயராது பாடுபட்டவர்களுக்கு  பாராட்டு - நன்றி தெரிவிப்பு நினைவுப் பரிசுகளை வரிசையாக மேடையில் தமிழர் தலைவர் கி.வீரமணி வழங்கினார்.
விடுதலை தேனீ (தனி நபர்கள்)
விடுதலை தேன்கூடு (மாவட்டத் தோழர்கள்)
விடுதலைப் புரவலர்கள் (பெரியார் கல்வி நிறு வனங்கள்)
விடுதலை வேர்கள் (தலைமைக் கழகப் பொறுப் பாளர்கள்)
தமிழர் தலைவரால் பாராட்டப்பட்டனர்.
சந்தா வழங்குவதில் தஞ்சை மாவட்டம் 1002 சந்தாக்களை தமிழர் தலைவரிடம் வழங்கியது.
திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே.சி. எழிலரசன் கழக தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு சால்வை அணிவித்தார்.
மாநில ப.க. துணைத்தலைவர் கோ.ஒளிவண் ணன், தென் மாவட்ட பிரச்சாரக் குழுத் தலைவர் தே. எடிசன் ராசா ஆகியோர் உரையாற்றினர்.
தமிழர் தலைவர்
நிகழ்ச்சியின் நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
இறுதியாக கழக தலைமை நிலையச் செயலாளர் வீ. அன்புராஜ் நன்றி கூறினார்.
மண்டபம் நிரம்பி வழிந்தது கழகக் குடும்பத் தாரால்.
கோலாகல விழா!
இரவு 10 மணிக்கு நிகழ்ச்சி முடிவடைந்தது. பெரியார் திடல் கருஞ்சட்டைக் கடலாகக் காட்சி அளித்தது.

குடிஅரசு  வெளியீடு
விழாவில் 1945-46 ஆம் ஆண்டுக்கான  பெரியார் களஞ்சியம் குடிஅரசு தொகுதிகள் 33, 34, 35, 36 ஆகியவை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், பெரியார் மணியம்மை பல்கலைக் கழக துணைவேந்தர் நல். இராமச் சந்திரன், ப.க. துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...