Sunday, December 25, 2011

மீண்டும் இராமாயணக் கட்டுரை


இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துகிறது என்ற காரணம் காட்டி தனது பட்டப்படிப்பில் பாடமாக இருந்ததை டில்லி பல்கலைக் கழகம் நீக்கியதற்கு எதிராக கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித் ததையடுத்து, அதற்கு மதிப்பளித்து, அண் மையில் பெரும் பிரச்சினைக்கு உள்ளான, பேராசிரியர் ராமானுஜன் அவர்கள் எழுதிய இராமாயணம் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பையும்,  பவுலா ரிச் மேன் எழுதிய பல இராமாயணங்கள் - தெற்கு ஆசிய பாரம்பரியத்தில் நிலவும் பல்வேறுபட்ட இராமாயணக்கதைகள் என்ற நூலையும், மறு படியும் பதிப்பித்து வெளி யிடுவது என்று லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழக அச்சகம் முடிவு செய்துள்ளது.
அடிப்படைமதவாதக் குழுக்களுடன் சமரசம் செய்து  கொள்வதற்கான ஒரு முயற்சியாக இந்த இரண்டு புத்தகங் களை இனி வெளியிடாமல் இருப்பது என்ற தனது முடிவின் மூலம்,  ஆக்ஸ்ஃ போர்டு பல்கலைக் கழகம் தான் பதிப் பிக்கும் நூல்களைத் தணிக்கை செய்கிறது என்று முன்னணி கல்வியாளர்களும், பதிப்பகத்தின் ஆசிரியர்களும் உலகின் புகழ்மிக்க பதிப்பகத்தின் மீது எழுப்பிய  கசப்பு மிகுந்த குற்றச்சாற்று, இவ்விரு நூல்களை வெளியிடுவது என்ற பதிப்பகத்தின் முடிவின்  மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
ஓர் அறிக்கையில் இப்பதிப்பகம் தெரிவித்துள்ளது: கற்றறிந்தோர் சமூகத்தின் உறுப்பினர்கள் அண்மையில் இந்த இரு நூல்கள் கிடைக்காதது பற்றி வெளிப் படுத்தியுள்ள கவலைகளுக்கு மதிப் பளிக்கும் வகையில், இந்த இரண்டு நூல் களும், இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் கிடைக்கும் வண்ணம் அவற்றை  மீண்டும் அச்சிட்டு வெளியிடும் முடிவை நாங்கள் மேற் கொண்டுள்ளோம். இராமாயணத்தைப் பற்றிய கேள்விகள் என்ற எங்களின் நூலையும் மறுபடியும் பதிப்பித்து வெளியிடுகிறோம். இந்தியா முழுமையிலும் இந்த மூன்று நூல்களும் தாராளமாகக் கிடைக்கும்.
நூல்களை நாங்கள் தணிக்கை செய்கிறோம் என்ற குற்றச்சாற்று பற்றி குறிப்பிட்டுள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழக அச்சகம் கல்வியில் சுதந்திரமான நிலை நிலவவேண்டும் என்ற கொள்கைக்கு எப்போதும் ஆதரவு அளிப்பவர்களாகவே தாங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. முந்நூறு இராமாய ணங்கள் என்ற நூலை வெளியிட்ட தற்காக தங்கள் மீது வழக்கு தொடரப் போவதாக தெரிவித்த பிற்போக்குவாதக் குழுவிடம் தாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொண்டதாக எழுந்த வதந்தியையும் அது மறுத்துள்ளது.
கொலம்பியா பல்கலைக் கழகத்தின் சமஸ்கிருதப் பேராசிரியரும், இந்திய ஆய்வுத் துறையைச் சேர்ந்தவருமான ஷெல்டன் போலக் எழுதிய  ஒரு எதிர்ப் புக் கடிதத்தில் கையொப்பமிட்டிருந்த 450 கல்வியாளர்களுக்கு பதிப்பகத்தின் இந்த அறிக்கை அனுப்பப்பட்டது பற்றி போலக் கூறியிருப்பதாவது:
மிகச் சிறந்த கல்வியறிவை சுதந் திரமாகப் பல வழிகளில் இருந்தும் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்வதில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்திற்கு ஒரு முக்கியமான பங்கு இருக்கிறது. இந்த மூன்று முக்கியமான நூல்களையும் மறுபடியும் பதிப்பித்து வெளியிடுவதன் மூலம் அச்சகம் இக்கடமையில் தாங்கள் கொண்டிருக்கும் உறுதியை வெளிப் படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். ராமானுஜத்தின் எந்த ஒரு நூலையும் பதிப்பித்தற்காக அச்சகம் எப்போதுமே எவரிடமும் மன்னிப்பு கேட்கவில்லை என்ற உண்மையை மறுபடியும் நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். இத்தகைய மன்னிப்பு கேட்கப்பட்டது என்ற பொருள் அளிக்கும்  ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக அச்சகத்தின் இந்தியக் கிளையின் முந்தைய கடிதங்களுக்கு தவறாக விளக் கங்கள் அளிக்கப்பட்டன. அத்தகைய தவறான விளக்கம் அளிக்கப்பட்டமைக் குப் பொறுப்பானவர்களில் நாங்களும் ஒரு பகுதியினராக உள்ளோம் என்ப தாலும், இத் தவறான கருத்தைப் போக் காமல் இருப்பது கல்வியாளர் சமூகத்தின் நலனுக்கு ஏற்றது அல்ல என்பதாலும், எங்கள் நிலையை மறுபடியும் ஒரு முறை இப்போது நாங்கள் விளக்க முன்வந் துள்ளோம்.
கல்வியாளர்கள் இந்த முடிவை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர்.
மிகச் சிறந்த கல்வியறிவை அளிப்பது, அறிவினை இயன்ற அளவுக்கு மிகப் பரந்த அளவில் பல வழிகளிலும் சேகரித்துப் பெறுவதற்கு உதவுவது, சிந்தனை மற்றும் கருத்தை வெளிப்படுத்துவ தற்கான  கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர் கள் ஆகியோரின் உரி மையைப் போற்றிப் பாது காப்பது என்ற தங்களின் நீண்ட கால லட்சியங்களை ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக அச்சகம்  மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதை நாங்கள் முழு மனதுடன் ஆதரிக்கிறோம்  என்று வாஷிங்டன் இணைய தளத்தில் வெளியிடப்படும் மேல்நிலைக் கல்வி கிரானி கிள் என்ற கல்வி செய்தித் தாளில் இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தானும், தன்னுடன் தனது கடிதத்தில் கையெழுத்து இட்டவர்களும் ஆக்ஸ்ஃ போர்டு பல்கலைக் கழக அச்சகத்தின் இந்த அறிவிப்பைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்; எங்கள் அனை வரது கவலைகளையும் அது போக்கி யுள்ளது என்று நம்புகிறோம் என்று பேராசிரியர் போலக் கூறியதை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நூல்களை மறுபடியும் அச்சிட்டு வெளியிட வேண்டியதன் முக்கியத் துவத்தை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழக அச்சகம் அங்கீகரித்துள்ளது குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் என்று அப் பல்கலைக் கழக மாணவர் சமூகத்தினரும் கூறியுள்ளனர்.
- நன்றி: தி ஹிந்து 11.12.2011

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...