நிலநடுக்கங்கள் எவ்வாறு அளக்கப்படுகின்றன?
தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
நிலநடுக்கங்கள் எவ்வாறு அளக்கப்படுகின்றன?
நிலநடுக்கங்கள் எவ்வாறு அளக்கப்படுகின்றன?
நிலநடுக்கங்களின் தீவிரம் பற்றி Movement Magnitude Scale or MMS எம்எம்எஸ் அளவுகோளின்படி அளக்கப்பட்டு வருகிறது.
ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்த ரிக்டர் அளவுகோலுக்கு பதிலாக இந்தMMS அளவுகோல் இப்போது இடம் பிடித்திருந்தது. இந்த MMS என்ற அளவுகோல் 1979 ஆம் ஆண்டில் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நில நடுக்கம் பற்றிய அறிவியல் ஆய்வாளர்கள் ஹிரூ கனாமோரி மற்றும் டாம் ஹாங்க்ஸ் என்ற இரு தனிப்பட்ட நபர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. ரிக்டர் அளவுகோல் அதிர்வு அலைகளின் பலத்தை மட்டுமே அளக்க உபயோக மாயிருந்தது. ஆனால், ஒரு நிலநடுக்கத்தின் பாதிப்பு பற்றி முழுமையாக அதனால் விவரிக்க முடியாமல் இருந்ததால், ரிக்டர் அளவுகோல் திருப்தி அளிப்பதாக இல்லை என்று அவர்கள் கண்டனர். ரிக்டர் அளவுகோலில் பெரிய நிலநடுக்கங்களின் தீவிரம் ஒன்று போலவே இருந்தாலும், அந்நிலநடுக்கங்கள் முற்றிலும் மாறுபட்ட அளவில் அழிவினை உண்டாக்கியுள்ளன.
600 கி.மீ. (373 மைல்) தொலைவில் ஏற்படும் நில அதிர்வு அலைகளை அல்லது நடுக்கத்தை ரிக்டர் அளவுகோல் அளவிடுகிறது. 1935 இல் சார்லஸ் ரிக்டர் என்ற நில அதிர்வு ஆய்வு இயலாளரால் ரிக்டர் அளவுமுறை கண்டு பிடிக்கப்பட்டது. பூமியின் மையத்தின் ஆரத்தை மிகத் துல்லியமாக முதன் முதலாக அளந்தவரான பெனோ குண்டன்பெர்க் என்பவருடன் சேர்ந்து இந்த அளவை முறையை ரிக்டர் மேம்படுத்தினார். சிலி நாட்டில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்படும் முன்பே 1960 இல் பெனோ குண்டன்பெர்க் ஃப்ளூ காய்ச்சலால் உயிரிழந்தார். அவர் இறந்து நான்கு மாதங்கள் கழிந்த பிறகு நடந்த சிலி நில நடுக்கம்தான் இதுவரை உலகில் நிகழ்ந்த நில நடுக்கங்களிலேயே மிகப் பெரியதாகும்.
ஆனால் இந்த MMS அளவை முறை இதற்கு முற்றிலும் மாறுபட்ட முறையில் ஒரு நிலநடுக்கத்தால் வெளியிடப்படும் ஆற்றலை விவரிப்பதாகும். பாதிக்கப்பட்ட நிலப்பரப்பின் இரு முனைகளிடையே உள்ள தூரத்தைப் பெருக்கி நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மொத்த நிலப் பரப்பை அது கணக்கிடும். ரிக்டர் அளவுகோலுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் அர்த்தம் தரக்கூடிய மதிப்பீடுகளை அளிக்கும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு அளவுமுறைகளுமே லோகிர்தமுறையில் அமைந்தவையாகும். நிலநடுக்கத்தின் அளவு இரண்டு குறியீடு அதிகரித்துள்ளது என்றால் அது 100 மடங்கு ஆற்றல் அதிகம் பெற்றதாகப் பொருள்படும். ஒரு கையெறி குண்டினால் ஏற்படும் அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 0.5 அளவில் பதிவாகும். நாகசாகி மீது வீசப்பட்ட அணுகுண்டினால் ஏற்பட்ட அதிர்வு 5.0 ஆகும். 3.5 ரிக்டர் அளவுக்கு மேல் அதிர்வு ஏற்படுத்தும் நிலநடுக்கங்களை அளக்க மட்டுமே இந்த MMS முறை பயன்படுத்தப்படுகிறது. வடஅமெரிக்காவில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கங்கள், சிறிதளவே வெளி உலகுக்குத் தெரிந்த, 1811-12 ஆம் ஆண்டுகளில் நேர்ந்த மிசிசிபி நதிப் பள்ளத்தாக்கு நிலநடுக்கங்கள் ஆகும். இதனால் பாதிக்கப்பட்ட நிலப்பரப்பு 600,000 சதுர கிமீ. அல்து 231,660 சதுர மைல்களாகும். அந்த நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதியின் அளவு 5,000,000 சதுரகி.மீ. அல்லது 1,930,502 மைல்களாகும். இந்த விவரங்களை அமெரிக்க நிலவியல் ஆய்வு அமைப்பு தெரிவிக்கிறது. அந்த நிலநடுக்கம் புதிய ஏரிகளை உருவாக்கியதுடன், மிசிசிபி நதி பாயும் வழியையே முற்றிலுமாக மாற்றிவிட்டது. 1906 இல் சான்பிரான்சிஸ் கோவில் ஏற்பட்ட நிலநடுக்கம், அதைப் போல பத்து மடங்கு பரப்பில் பலமான அதிர்வை ஏற்படுத்தியது. அப்போது தேவலாயங்களின் எச்சரிக்கை மணிகள் மாசாசூசெட் வரையில் ஒலித்துக் கொண்டிருந்தன. எப்போது நிலநடுக்கம் ஏற்படும் என்று எதிர்பார்த்து, ஊகித்து எவராலும் கூறமுடியாது. ஒரு பகுதியில் இருக்கும் பூனைகளும், நாய்களும் அப்பகுதியை விட்டு வெளியேறுவதை கவனித்து நிலநடுக்கம் வருவதை முன் கூட்டியே அறியலாம் என்று ஒரு நிபுணர் கூறுகிறார்.
இங்கிலாந்து நாட்டில் ஆண்டுக்கு 300 முறை நில அதிர்வுகள் ஏற்படுகின்றன. ஆனால் அவை மிகமிகச் சிறியவையாகும். அவற்றில் 10 விழுக்காடு அதிர்வுகளையே மக்கள் உணர்கின்றனர்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General
Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)
Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)
No comments:
Post a Comment