கோயில் நகரமான பழனிக்கு தென்மேற்கே உள்ள பொருந்தல் என்ற கிராமத்தில் மேற்கொள்ளப் பட்ட அகழ்வாய்வின்போது பெருங்கற்காலத்தைச் சேர்ந்த சவஅடக்கம் செய்யும் தாழிகள் கண்டுடெடுக்கப் பட்டுள்ளன.
இந்த அகழ்வாயினால், தமிழ் பிராமி எழுத்தின் காலம் எதுவாக இருக்கலாம் என்பது பற்றிய ஆர்வம் தரும் சில உண்மைகள் வெளி வந்துள்ளன. புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் முனைவர் கே.ராஜன் அவர்கள் மேற்பார்வையில் இந்த அகழாய்வு 2009, 2010 ஆம் ஆண்டு களில் மேற்கொள்ளப்பட்டது.
கண் டெடுக்கப்பட்டுள்ள இந்த சமஅடக்கம் செய்யப்பட்ட தாழிகள் பல அரிய பொருள்களைத் தந்துள்ளன. இரண்டு கிலோ நெல் உள்ளே வைக்கப்பட்டிருந்த நான்கு கால் கொண்ட ஜாடி ஒன்றும், வா-அய்-ரா என்ற தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட இரண்டு மோதிர தாங்கிகள் ஆகியவை இதில் அடக்கம். அமெரிக்காவின் பிடா பகுத் தாய்வு நிறுவனத்தால் இந்த நெல் கி.மு.490 காலத்தைச் சேர்ந்தது என அக்சலேட்டர் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி முறையில் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த சவஅடக்கம் செய்யப்பட்ட தாழியில் இருந்த மொத்த பொருள்களும் இந்தத் தாழி புதைக்கப்பட்டபோது ஒரே முறை யில் வைத்ததாகத்தான் இருக்க முடியும். இதிலிருந்து அந்த நெல்லிக் காலமும், தாழியில் காணப்பட்ட தமிழ் பிராமி எழுத் துகளின் காலமும் ஒன்றாகத்தான் இருக்க முடியும் என்பதை ஊகித்தறிய முடிகிறது. அந்தத் தாழியில் வைக்கப்பட்டிருந்த எலும்புகளின் சொந்தக்காரரின் பெயராக வா-அய்-ரா என்ற அந்த தமிழ் பிராமி எழுத்துகள் இருக்கக்கூடும்.
திருநெல்வேலி நகரத்துக்குக் கிழக்கே 24 கி.மீ. தொலைவில் உள்ள ஆதிச்ச நல்லூரில் கண்டு பிடிக்கப்பட்ட பெருங் கற்காலத்தைச் சேர்ந்த இடுகாட்டில் நெல்லும் உமியும் கண்டெடுக்கப்பட்டன. அங்கு அகழாய்வை மேற்கொள்ள 100 ஆண்டுகள் கழித்து 2004 பிப்ரவரியில் இந்திய அகழ்வாய்வுத் துறை பரிந் துரைத்தது. அதன்பின் மேற்கொள்ளப் பட்ட அகழாய்வில் 157 தாழிகள் கண்டெ டுக்கப்பட்டன. எலும்புகள் வைக்கப்பட் டிருந்த பெரிய தாழிகளின் உள்ளே வைக்கப்பட்ட சிறிய மண்பானைகளில் நெல்லும் உமியும் வைக்கப்பட்டிருந்தன.
ஒரு உயரமான கம்பீரமான பெண்நின்று கொண்டிருப்பது போன்றதும், அவர் அருகில் வளர்ந்து நிற்கும் நெற்கற்றை வைக்கப்பட்டிருந்தது போன்றதுமான ஓவியம் வரையப்பட்ட மண்பாண்டத்தின் உடைந்த துண்டுகள் ஒரு பெரிய தாழியில் உள்ளே வைக்கப் பட்டிருந்தன. மற்றொரு தாழியினுள் எழுதப்பட்ட ஒரு துண்டு காணப்பட்டது. அது தமிழ் பிராமி எழுத்தின் ஒரு கூறாக இருக்கலாம் என்று பழங்கால எழுத்தாய்வாளர் ஒருவர் கூறினார். கா-ரி-அய-ர-வா(நா)-டா என்ற ஏழு எழுத்துக்கள் அதில் காணப்பட்டன. இந்த வழக்கிலும், இந்த எழுத்துகள் அந்த தாழியில் வைக்கப்பட்டிருந்த எலும்புகளின் உரிமையாளரின் பெயராக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
பொருந்தை அகழாய்வில், தாழியில் வைக்கப்பட்டு இருந்த நெல்லின் காலத்துடன் தொடர்புபடுத்தி அதில் காணப்பட்ட எழுத்துக்களின் காலத்தைக் கண்டு பிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப் பட்டபோது, அந்த எழுத்து கி.மு.490 காலத்தைச் சேர்ந்தது என்று தெரிய வந்துள்ளது. ஆதிச்சநல்லூர் அகழாய் வில், ‘Preliminary thermo-luminescence dating’ முறையில் தாழிகளில் காணப்பட்ட பானைகள் கி.மு. 500 காலத்தைச் சேர்ந்தது என்ற முடிவுக்கு இந்திய தொல்லியல் ஆய்வுக் குழு வந்தது. (தி இந்து 17.2.2005) அந்தத் தாழி யில் இருந்த பொருள்களின் காலத்தை கார்பன் 14 முறையில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாலும், அது போன்றதொரு சோதனையின் முடிவு வெளியிடப்படவில்லை. தமிழ் பிராமி எழுத்துகளில் இருந்த பதிவை களத்தில் உள்ள மற்ற அதிகாரம் பெற்ற கல்வியாளர்கள் பரிசீலனை செய்யாமல் விட்டிருக்கலாம் என்று கருதலாம்.
சிறிய இடுகாட்டுப் பானைகளில் காணப்பட்ட நெல் அங்கு காணப்பட்ட எழுத்துகளின் காலத்துடன் ஒரு தொடர்புடையது. எழுத்துகளின் காலம் பற்றிய ஒரு முடிவை மேற்கொள்வதற்காக நெல்லின் காலம் பற்றி சோதனை மேற்கொள்ளப்பட்டதற்கான சான்று ஏதுமில்லை. பொருந்தல் அகழாய் வின்போது எட்டப்பட்ட இறுதியான முடிவும், ஆதிச்சநல்லூர் கண்டுபிடிப்பு களும் கீழ்க்குறிப்பிடப்பட்டதை மெய்ப் பிக்கின்றன.
1. அசோகருக்கு முந்தைய காலத்திய பண்டைய தமிழகத்தில் தமிழ் பிராமி எழுத்துகள் பயன்படுத்தப் பட்டுள்ளன.
2. கி.மு. 500 காலத்தில் தமிழகத்தில் நெல் சாகுபடி நடந்து வந்துள்ளது.

கே. ரவீந்திரன்
உதவி பொதுக் கணக்காய்வர் (ஓய்வு)
திருவனந்தபுரம்
உதவி பொதுக் கணக்காய்வர் (ஓய்வு)
திருவனந்தபுரம்
No comments:
Post a Comment