பிரிட்டீஷாரின் பேச்சாளர் ராஜாஜி!
1942ஆம் ஆண்டு ஆகஸ்டுப் புரட்சியில் கைதான தலைவர்களெல்லாம் 1945ஆம் ஆண்டில் ஒருவர் பின் ஒருவராய் விடுதலை செய்யப்பட்டு வந்தனர். வைஸிராய் லார்டு வேவல் காங்கிரஸ் தலைவர்களையெல்லாம் அழைத்து சமரசம் பேசினார். முன்னாள் முதலமைச்சர் என்ற முறையில், காங்கிரசை விட்டு விலகியிருந்த ராஜாஜியையும் அழைத்துப் பேசினார்.
இதே சமயத்தில் ராஜாஜி மீண்டும் காங்கிரசில் சேர்ந்துவிட வேண்டும் என்று விரும்பி அதற்காக முயன்று வந்தார். ஆனால், ஆகஸ்டுப் போராட்டத்திற்கு எதிராகவும், நாட்டுப் பிரிவினைக்கு ஆதரவாகவும் அறிக்கை விட்டு காங்கிரசை விட்டு விலகிய அவரை மீண்டும் காங்கிரசில் சேர்ப்பதை பெரும்பான்மையான காங்கிரஸ்காரர்கள் எதிர்த்தனர்.
1942 மே மாதத்தில் அலகாபாத் நகரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் பாகிஸ்தானைப் பிரித்துக் கொடுப்பதை ஆதரித்து ராஜாஜி ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். அதற்கு ஆதரவாக 15 வாக்குகளும், எதிராக 120 வாக்குகளும் கிடைத்தன. அதைத் தொடர்ந்து ராஜாஜி காரியக் கமிட்டியிலிருந்தும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியிலிருந்தும் விலகினார்.
தன்னுடைய (பாகிஸ்தான்) தீர்மானம் தோற்றாலும், தாம் தொடர்ந்து போராடப் போவதாகவும் அறிவித்தார் ராஜாஜி. இதனால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து நோட்டீஸ் அனுப்பியது. இது மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியிலிருந்தும், சட்டசபை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகும்படி அவருக்கு மகாத்மா காந்திஜியே கடிதம் எழுதினார்.
வல்லபாய் பட்டேல் வற்புறுத்தியதால் தான் ராஜாஜிக்கு காந்திஜி இப்படி ஒரு கடிதத்தை எழுதினார் என்று பட்டாபி சீத்தாராமையா குறிப்பிட்டிருக்கிறார். இதன்படி காங்கிரசிலிருந்து விலகிய ராஜாஜி, ஆகஸ்டுப் போராட்டத்தையும் கடுமையாக எதிர்த்தார். பாகிஸ்தான் பிரிவினையையும் தீவிரமாக ஆதரித்துப் பிரச்சாரம் செய்து வந்தார்.
1942 முதல் 1945ஆம் ஆண்டு வரை அவரது சொல்லும் செயலும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ஆதரவானதாகவே இருந்தன. பிரிட்டிஷாரின் பேச்சாளரைப் போலவே ராஜாஜி பேசி வந்தார். இது காங்கிரஸ் தொண்டர்களை மிகுந்த ஆத்திரத்திற்கு உள்ளாக்கியது.
இவ்வளவு நடந்த பிறகு 1945ஆம் ஆண்டில் ராஜாஜி வைஸிராயுடன் சமரசப் பேச்சில் ஈடுபட்டதும், மறுபடியும் காங்கிரசில் சேர முயன்றதும் காங்கிரஸ்காரர்களுக்கு எரிச்சலூட்டியது. குறிப்பாக ஆகஸ்டுப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் செய்து வந்த தேசபக்தர்களுக்கு வேதனை அளித்தது.

(நூல்: சரித்திர நாயகன் காமராஜர்! - சிவலை இளமதி)
No comments:
Post a Comment