Monday, November 14, 2011

சமச்சீர் கல்வியும் இந்திய வரலாறும்


பொறியாளர் பி.கோவிந்தராசன்

1. சமச்சீர்கல்வி

சமச்சீர் கல்வி என்றதுமே நினை வுக்கு வருவது பாடப் புத்தகங்களில் சில பக்கங்களைக் கிழித்ததும், சில பக்கங்களை மறைத்ததும்தான். இதில் முக்கியமாக பாதிப்பு அடைந்தது செம்மொழி மாநாடும், திருவள்ளுவரும், திராவிட இயக்க வரலாறும் ஆகும். இவ்வாறு திருவள்ளுவர் திருவுருவம் மறைக்கப்பட்டது.

இப்பொழுதுதான் நடைபெற்ற முதல் நிகழ்ச்சி இல்லை. திராவிட முன்னேற்றக் கழகம் பதவி ஏற்றவுடனே, திருவள்ளுவரின் திருஉருவ ஓவியத்தை எல்லா அரசு அலுவலகங் களிலும் வைப்பதற்கு ஆணையிட்டது. அப்போது திருவள்ளுவரின் உருவப் படத்தை அரசு அங்கீகாரம் செய்ய நேரிட்டது. அப்போது வரையப்பட்ட படத்தில் திருவள்ளுவர் பூணூல் அணிந்திருக்கவில்லை.

எனவே பூணூல் அணிந்த முதல் வருணத்தினர் பலர் திருவள்ளுவர் பூணூல் அணிந்தி ருக்குமாறு படத்தை உருவாக்கக் கோரிக்கை வைத்தனர். இது பூதா காரமாக வெடித்தது. அரசு இந்த சர்ச்சையில் இருந்து வெளிவர ஒரு தந்திரமான முடிவு செய்தது.

அதன்படி திருவள்ளுவர் பூணூல் பகுதியில் மேல் துண்டினால் மறைத்திருக்கும்படி வரையப்பட்டது. இது வருணா சிரமத்தினர், கற்றோர் களுக்கும், சான்றோர்களுக்கும், தெய்வங்களுக்கும் பூணூல் அணிவித்தது இந்துமதத்தில்  சேர்த்துக் கொண்ட செய்திகளுக்கு எல்லாம் ஒரு சான்றாக அமைகின்றது. இத்தகைய ஆரிய பண்பாட்டுப் படையெடுப்பில் இருந்து தப்பித்தவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் ஆகும். ஏனென்றால் பதவி, பட்டம், ஓட்டு, செல்வம் முதலியனவற்றை அவர் நாடவில்லை.

2. பாடபுத்தகங்கள்

பாடபுத்தகங்கள் எப்படி உண்மை பேசுதல், பிற உயிருக்கு தீங்கு செய்யாதிருத்தல், நன்றி மறவாமை போன்ற நல்ல குணங்களை வலியுறுத் துகின்றனவோ, அதே அளவில் பொய் பேசுதல், நன்றி மறத்தல் ஆகியவற்றைக் கண்டிக்கிறது. அதே போல் இந்திய வரலாற்று நூல்கள் வரலாறுகளை ஆதாரமின்றி வெறும் கதைகளையும், புராணங்களையும் வரலாறாகச் சொல்லுவதைக் கண்டிக்க வேண்டும். அதுவே உண்மையான வரலாற்று நூல். அப்படிப்பட்ட பாடப் புத்தகம் ஜான் கிளார்க் மார்ஷ்மேன் என்பவரால் 1863 இல் எழுதப்பட்டு கல்கத்தா பல்கலைக் கழகத்தில் பாடநூலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதில் காணப்படும் சில சுவையான இந்தியர்/ திராவிடர் வரலாறு குறித்த பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன.

2.1. இந்துஸ்தான் எங்கே உள்ளது?

இந்துஸ்தான் என்ற பெயர் இந்தியா முழுமைக்கும் குறிக்கின்ற பெயர் இல்லை. கங்கை நதியின் சமவெளி பகுதி, சிந்து நதியின் சமவெளி பகுதி, இந்தியாவின் மேற்கே உள்ள சில பாலைவனப் பகுதிகளையும் கொண்டதுதான் இந்துஸ்தான். இதற்கு வட எல்லை இமயமலை; தெற்கு எல்லை விந்தியமலை. விந்திய மலைக்குத் தெற்கே உள்ள நிர்புத்தாநதி (நர்மதா நதி) இருந்து குமரிமுனை வரை உள்ள பகுதி தக்காணம் என்று அழைக்கப்பட்டது. இதற்கு மேற்கு எல்லை அரபிக் கடல்; கிழக்கு எல்லை வங்காளக் கடல். ஆரியர்களின் படையெடுப்பில் திராவிடர்கள் சமவெளிப் பகுதியில் (இந்துஸ்தான்) இருந்து (சுமார் 1400 கி.மு.) வெளியேறி தக்காணத்தில் குடியேறினார்கள்.

2.1. இந்துஸ்தானத்தில் தோன்றிய ஆரியக் கடவுள்கள்

பாலி, சமஸ்கிருத அகராதிகளின்படி சிந்து என்றால் நதி அல்லது கடல்; கங்கை என்றால் ஆறு. கங்கை என்றால் சொல் கங்குகரை என்ற இரு தமிழ் சொற்கள் இணைந்த ஒரு சொல் என்று கருதலாம். இதனை திருவருட்பாவில் வள்ளலார் கங்குவரை காணாத கடலே என்று பல சமயங்களில் காணப்படும் தெய்வத்தைக் குறித்துச் சொல்கின்றார்.

அசோகர் புத்தன் (கோசலன்) பிறந்த கோசல நாட்டைச் சேர்ந்தவர். இவர் தலைநகரம் பாடலிபுத்திரம். பிற்காலத்தில் இது பாட்னா என்று அழைக்கப்பட்டது. பாட்னா என்ற பெயர் பட்டினம் (தமிழில் கடற்கரை நகரம் ஆற்றுக் கரை நகரம்) என்பது என்று விக்கிபீடியா இணையதளம் கூறுகின்றது. இவ்வாறு தமிழ் பெயர்கள் வட மாநிலங்களில் காணப்படுவது திராவிடர்களின் சிறப்பு. இத்தகைய பின்புலத்தில், ஜான் கிளார்க் மார்ஷ் மேன் கூறுவதைக் கீழே காணலாம்.

இந்து மத வேதங்கள் கி.மு. 1400 இல் சிந்து நதிக்கு மேற்கே இருந்து வந்த ஆரிய அர்ச்சகர் சிலரால், பல்வேறு கட் டங்களில் எழுதப்பட்டு வேதவியாசரால் தொகுத்து இந்துக்களுக்கு வழங்கப் பட்டன. வியாசர் ஓர் அரசனுக்கும் செம்படவப் பெண்ணுக்கும் பிறந்தவர். வேதங்களின்படி கடவுள் உண்மை யானது.

ஆனால் போற்றுவதற்கு உரியவர்கள் அல்ல.  வேதங்களில் சிவன் அல்லது விஷ்ணு பற்றிய கதைகள் குறிப்பிடப்படவில்லை. வேதகாலத்தில் உருவங்கள் இல்லை; வழிபாடு அல்லது பூசனை முறைகள் அப்போது இல்லை. வேதத்தில் சொல்லப்படும் சடங்குகள் வழக்கு ஒழிந்தன.

2.3 மனுநீதி

கி.மு. 900 இல் தோன்றியது இது வானுலகில் உள்ளகிரகங்களை, பஞ்ச பூதங்களை வணங்குவதை ஆதரிக் கின்றது. சிவன், விஷ்ணு பெயர்கள் குறிப் பிடப்படவில்லை. உருவ வழிபாட்டை வலியுறுத்தவில்லை. பிராமணர்களை தெய்வங்களுக்கு இணையாகக் கருதியது. பிராமணர்கள் யாகங்களில் கிடைக்கும் மாமிசம், மாட்டுக் கறி உண்ணுவதை அனுமதித்தது.

2.4 புராணங்கள்

சூரிய குடும்பத்தைச் சேர்ந்த பிரா மணர்களுக்கும், சந்திர குலத்தைச் சேர்ந்த சத்திரியர்களுக்கும் இடையே பல யுத்தங்கள் நடந்தன. சூரியகுலத்தைச் சேர்ந்த பரசுராமர் சத்திரிய அரசர்களை அழித்தார். பிராமணர்கள் வளர்ந்தார் கள். இதுவே புராணங்களின் நோக்கம்.

2.4.1. இராமன்

இவன் கி.மு.1200இல் வாழ்ந்த மன்னன். ஆனால் இராமன் வாழ்ந்த காலம் கி.மு. 1200 என்பதனை கணக் கீடுகளின்படி ஏற்றுக் கொள்ள முடி யாது என பாடநூலில் உள்ளது. வால்மீகி எழுதிய நூலின்படி இராமன் காவிரியைத் தாண்டி சிலோனுக்குச் சென்று இராவணனைக் கொன்று சீதையை மீட்டார். பின்னர் இராமன் இலக்குவனுடைய மரணத்திற்குக் காரணமாக இருந்ததினால் ஆற்றில் இறங்கி இறந்தார்.

2.5 வால்மீகி

இவரது காலம் கி.மு. 200.

2.6 வியாசர்

இவர் அலெக்சாண்டர் படையெடுப் புக்குப் பின் மகாபாரதத்தை இயற்றினார்.

2.7 புத்த மதம்

சந்திர குலத்தைச் சேர்ந்த 56 மன்னர் களும், கவுதம் புத்தரைப் பின்பற்றி னார்கள். பவுத்த மதத்தினர் பிராமணர் களின் ஆண், பெண், கடவுள்களை மறுத்தனர். ஜாதி வேறுபாடுகளை எதிர்த்தனர். இதில் அர்ச்சகர்கள் பிரா மணர்களைப் போல பரம்பரையாகத் தெரிவு செய்யப் படவில்லை. புத்த துறவிகளில் மூத்தவர்களை தெரிவு செய்தனர். கவுதம புத்தர் கி.மு. 550 க்கு முன்னர் இறந்தார். ஏறக்குறைய கி.மு.65 க்குள் சீனா, சிலோன் போன்ற நாடு களுக்கு புத்த மதம் பரவியது. புத்தமதம் பிராமாணர்களின் எதிர்ப்பால் கி.பி. 500 இல் பலவீனமடைந்து கி.பி. 1000 இல் இந்தியாவில் இருந்து வெளியேறியது.
2.8 அலெக்ஸாண்டர்

கிரேக்க நாட்டு மாவீரன்; தனது 33-ஆவது வயதில் (கி.மு.331) பாரசீக மன்னன் டைரியஸை வீழ்த்தி, சிந்து நதிக்கரையை அட்டாக் நகருக்கு (இஸ்லாமாபாத்)அருகே கடந்து, சிந்து சமவெளி மற்றும் கங்கைச் சமவெளியை ஆண்ட சுமார் 118 மன்னர்களை வென்றார். அவரது படையினர் பலம் 1,20,000 வீரர்கள் பின்னர் பாடலி புத்திரம் நோக்கிச் சென்றார். படை யினர் கங்கை வெள்ளத்தை சமாளிக்க முடியாமல் திரும்பினர். பின் சிந்து சமவெளியில் பெரிய படகு  கட்டி சிந்து நதியில் பயணித்தார். இந்த மாவீரன் அலெக்ஸான்டரைப் பற்றி இந்து மத நூல்கள் எதுவுமே தெரிவிக்கவில்லை என்பது ஒரு புதிர்.

2.9 மவுரியர்கள்

(கி.மு. 350 முதல் கி.பி. 450 = 800 ஆண்டுகள்) இந்த வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள் சூத்திரர்களாக இருந்தனர். இவர்கள் ஆட்சிக் காலத்தில் கடல் வாணிகம் செழித்தது. கங்கை நதி வழியாக வங்கக்கடல் சென்று ஜாவா, இலங்கை ஆகியநாடுகளுடன் வாணிபம் நடந்தது. பாடலிபுத்திரத்திலிருந்து இராஜபாட்டை எனப்படும் சாலைகள் குஜராத் மாநிலத்தில் உள்ள வணிக நகரமான புரோச் வரை சென்றன. மற்றுமொரு சாலை சிந்து சமவெளி வரை சென்றது. இராமாயணம், மகா பாரதம் ஆகிய காவியங்கள் வளர்ந்தன. மூன்று கலிங்கங்களை (அரக்கான் கடற்கரை, கோரமண்டல கடற்கரை, சிட்டகாங்க்) வென்றார்கள். கல்வி, சாதாரண மக்களுக்கும், பிராகிருத மற் றும் பாலி மொழியில் வழங்கப்பட்டது.

2.10 பிராமணர்களின் எழுச்சி

இவர்கள் புத்தமதத்தினருடன் போர் புரிந்தார்கள். பரசுராமரால் கொல்லப் பட்ட சத்திரியர்களை திரும்பவும் படைத்தார்கள்; பல உபகடவுள்களை உருவாக்கினார்கள். யாகங்கள் மூலம் இராஜபுத்திரர்களை உருவாக்கினார் கள். பவுத்தர்கள் காலத்திற்குப் பின் பிராமணர்கள் தக்காணத்தில் குமரி முனை வரை பரவினார்கள்.

2.11 விக்கிரமாதித்தன் ஆட்சி


இவன் ஆட்சியில் பவுத்தர்கள் வீழ்த்தப்பட்டார்கள். கல்வியறிவுள்ள பிராமணர்கள் நாட்டின் பல பகுதி களில் இருந்து உஜ்ஜயினி (தலைநகர்) க்கு வந்தனர். பரிசுகள் பெற்றனர்.

2.12 ஆந்திரர்கள்

கி.பி. முதலாம் நூற்றாண்டில் ஆந் திரர்கள் கங்கைக் கரை வரை பரவி னார்கள். இவர்கள் புகழ் ரோம் நகர் வரை பரவியது. இவர்கள் கி.பி. 436 வரை ஆண்டார்கள்.

2.13 தக்காணம்

ஆரம்ப காலத்தில் இவர்கள் இந்து மதத்தைப் பின்றபற்றவில்லை. ஆரிய நூல்கள் தக்காணத்தில் வாழ்ந்த மனிதர் களை குரங்குகள் காட்டு வாசிகள், அரக்கர்கள் என்று குறிப்பிட்டாலும், தென்னிந்தியர்கள் மிகவும் முற்பட்ட காலத்திலேயே, உயர்ந்த நாகரிகத்தை உடையவர்களாக விளங்கினார்கள்.

இராவணன் சிலோனை மட்டும் ஆளவில்லை. தக்காணத்தையும் ஆண் டான். நாகரிகமான, இலக்கிய வளம் மிகுந்த நாட்டை ஆண்டான். அதே சமயத்தில் குரங்குகளின் நட்பைப் பெற்று, குரங்குகளைக் கொண்டு இராவணனை, நாகரிக நாட்டினை ஆண்ட மன்னனை இராமன் வீழ்த்தி னான். இராமன் நாட்டில் இருந்த இலக்கியங்களை விட இராவணன் நாட்டில் இருந்த இலக்கியங்கள் சிறந்தவை.

2.14 தமிழ் இலக்கியங்கள்

ஆரியர் வருகைக்கு முன்பே சிறப்பு அடைந்து இருந்தன. நாகரிக வாழ்க்கை வாழ்ந்த பரையர் இனத்தவர்களை வீழ்த்தி பிராமணர்கள் தங்கள் அடிமை ஆக்கினார்கள். இது முந்தைய தெலுங்கானா, கேரளா, திராவிட   பகுதிகளில் நடந்தது.

தமிழ்ச்சங்கம் / பாண்டியஅரசு இரண்டு முறை கடல் கோள்களால் அழிக்கப்பட்டது. இறுதியாக தற்போதைய மதுரையில் அமைந்தது. கி.பி. 75 இல் தாலமி இந்தி யாவுக்கு வந்தபோது மதுரையில் பாண்டிய அரசு நடந்தது; மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.

2.15 சூத்திரர்கள் யார்?

ஆரியர்கள் வருகைக்கு முன் இந்தி யாவில் இருந்த பூர்வீகக் குடிமக்கள் - பீலர்கள்,    கோலர்கள் ,  கோண்டுகள் , மீனாக்கள் (இவர்களில் சிலர் இன்று  அய்.ஏ.எஸ். அதிகாரிகளாக உள்ளனர்)   மீனாஸ் மற்றும்  சூவர்கள்  ஆகும்.  இவர்களில் சிலர் இன்றும் சோனி நதி, நர்மதா நதி, மகாநதி ஆகியவற்றைச் சார்ந்த மலைப் பகுதிகளில் (சர்கூஜா, சோட்டா நாக்பூர்) வசிக்கிறார்கள். இவர்களது மொழி சமஸ்கிருதத் தொடர்பற்றது. இந்தியாவில் நடந்துள்ள கலாச்சாரங் களில் ஏற்பட்ட மாற்றங்கள் அவர் களைப் பாதிக்கவில்லை. அவர்கள் சிறிதும் மாறவில்லை.

எளிமையான வாழ்க்கை வாழ்கின்றார்கள். பழக்க வழக்கங்கள் பேச்சு, செயல்கள் எளிமையானவை. புதியவர்களின் குடியிருப்பு பகுதியில் இருந்து ஊருக்கு வெளியே அனுப்பப் பட்டார்கள். படையெடுத்து வந்த ஆரியர்கள் பூர்வீகக் குடிமக்களை அடிமையாக்கினார்கள். சிந்து சமவெளி முதல் குமரி வரை உள்ளஅடிமைகளை சூத்திரர்கள் என்று அழைத்தார்கள். வேதம், சூத்திரர் தவிர மூன்று வருணத் தினருக்கு பூணூல் அணிவிக்க அனுமதித் ததாலும் தற்போது பிராமணர்கள் மட்டும் ஏகபோகமாக பூணூல் அணிந்து கொள்கிறார்கள்.

2.16 மூடநம்பிக்கைகளைக் கண்டித்தல்

1) இந்து மதம் கடைப்பிடிக்கும் யுகக் கணக்குகளுக்கு நம்பத் தகுந்த ஆதாரங்கள் எதுவும் இல்லை. கற்பனை வளம் கொண்ட புலவர்கள் யுகங்களின் கால அளவை நிர்ணயித்தார்கள். பின்னாளில் வந்த இந்திய வானவியலார், யுகக் கணக்கீட்டைக் கோள்களின் இயக்கத்துடன் பொருத்தினார்கள். உலகத்தின் வயதை நான்கு யுகங்களாகப் பிரித்தார்கள்.

(1) கிரேத யுகம் ( 17.28 இலட்சம் ஆண்டுகள்) (2) திரேதயுகம் 12.96 லட்சம் ஆண்டுகள் (3) துவா பரயுகம் 8.64 இலட்சம் ஆண்டுகள் (4) கலியுகம் 4.32,000 லட்சம் ஆண்டுகள்.  மொத்தம் 43.20 இலட்சம் ஆண்டுகள். இது மிகவும் கற்பனையானது. இதைவிடக் கற்பனையைக் கொண்டது பர்மியர்கள் கணக்கீடு. உலகத்தின் வயது 3 ஆண்டுகளில் உலக மொத்த பரப்பில் விழும் மழைத் துளிகளின் எண்ணிக் கைகளை எண்ண வேண்டும். அதுவே உலகின் வயது என்று பாடநூலில் குறிப்பிடப்பட்டுளள்து.

2) இந்தியா முழுமையும் பாரத வம்சத்தைச் சேர்ந்த பரத மன்னரால் சுமார் 10,000 ஆண்டுகள் ஆளப்பட்டது. இதனால் இந்தியாவை பரத கண்டம் என்று ஆரியர்கள் தெரிவிக்கின்றனர். இறப்புக்குப் பின் மானாக மாறினான் பரதமன்னன். இந்தக் கதை நம்பும்படி யாக இல்லை என்று அந்த பாடநூலில் கூறப்பட்டுள்ளது.

2.17 முடிவுரை:

ஜான் கிளர்க் மார்ஷ்மேன் எழுதிய வரலாற்றுப் பாட நூலை இந்தியா சுதந்திரமடைவதற்கு முன் சிப்பாய் கலகத்துக்குப் (1857) பின், கி.பி. 1863 இல் எழுதினார். அவர் படம் பிடித்துக் காட்டிய இந்து மத ஆதிக்க சக்திகள் 2011 இல் முறியடிக்கப்பட்டனவா? இந்த கேள்விக்குப் பதிலளிக்க வேண்டியவர் கள், மக்களாட்சி தந்தஅரசியல் மேதை கள், நீதியை நிலைநாட்டும் சட்ட மேதைகள்,கடவுள் சித்தாந்தங்களைப் பரப்பும் ஆன்மீக வாதிகள், கம்யூனிச சித்தாந்தவாதிகள், சந்தை பொருளா தாரத்தை மேம்படுத்தும் பொருளாதார மேதைகளும், மனிதர்களைப் பற்றி கவலைப்படாமல் மரங்களையும், காடுகளையும் பராமரிக்கப் போராடும் சுற்றுச்சூழல் ஆர்வலருந்தான்.


.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

உங்கள் கருத்துக்கள்




1000 எழுத்துகள் மீதமுள்ளன



Security code
Refresh


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...