Monday, November 21, 2011

அமெரிக்காவுக்கு முதல் குடியரசுத் தலைவர் யார்?


தெரிந்துகொள்வோம்
இன்று ஒரு புதிய தகவல்:

அமெரிக்காவுக்கு முதல் குடியரசுத் தலைவர் யார்?
பெய்டன் ரண்டால்ஃப் என்பவர்தான் அமெரிக் காவின் முதல் குடியரசுத் தலைவர் (ஜனாதிபதி) ஆவார். வாஷிங்டனுக்கு முன்னர்  கண்ட காங்கிரஸ் (Continental Congress) அல்லது அய்க்கிய மாகாணங் களின் காங்கிரஸ் சபையில் ((United States in Congress Assembled)  இருந்த பதினான்கு குடியரசுத் தலைவர்களில் முதலாவது குடியரசுத் தலைவராக  இருந்தவர் இந்த பெய்டன் ரண்டால்ஃப் ஆவார்.
பிரிட்டிஷ் பேரரசருக்குத் தங்களின் குறைகளைத் தெரிவிப்பது பற்றி விவாதித்து முடிவெடுக்க  வடஅமெரிக்காவில் இருந்த பதின்மூன்று குடியேற்ற நாடுகள் இணைந்து உருவாக்கிய விவாதம் மேற்கொள்ளும் ஓர் அமைப்புதான் இந்த கண்ட காங்கிரஸ் (Continental Congress). ரண்டால்ஃப் தலைமையின் கீழ் நடைபெற்ற இந்த அமைப்பின் இரண்டாவது கூட்டத்தில், இங்கிலாந்து காலனி நாடுகள் மீது போர் அறிவித்துவிட்டதால், அதனை எதிர் கொள்வதற்காக கண்ட போர்ப்படை (Continental Army)  ஒன்றை உருவாக்குவது என்றும் அதன் தலைமைத் தளபதியாக ஜார்ஜ் வாஷிங்டனை நியமிப்பது என்றும் முடிவு செய்யப் பட்டது. ரண்டால்ஃப்புக்குப் பின்னர் ஜான் ஹாங்காக் தலைமையில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலிருந்து இந்த பதின்மூன்று குடியேற்ற நாடுகளும் சுதந்திரம் பெற்றுவிட்டதாக அறிவிக்கும் சுதந்திர பிரகடனத்தை இந்த அமைப்பு வெளியிட்டது. இந்த பதின்மூன்று குடியேற்ற நாடுகளையும் ஆட்சி செய்யும் உரிமை தங்களுக்கே உண்டு என்று இந்த காங்கிரஸ் அந்த பிரகடனத்தில் அறிவித்து இருந்தது. ஆங்கிலேயே சாம்ராஜ்யத்துடன் நடைபெற்ற சுதந்திரப் போரில் வெற்றி பெற்ற படைத் தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன் சுதந்திர அமெரிக்க அய்க்கிய நாடுகளின் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படுவதற்கு முன்பு, பெய்டன் ரண்டால்ஃப்புக்குப் பிறகு பதின்மூன்று ஜனாதிபதிகள் இருந்தனர்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’  பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...