Monday, November 14, 2011

பெரியார் உலகம் முழுவதும் வலம் வந்துகொண்டிருக்கிறார்!


சிங்கப்பூரில் நடைபெற்ற பெரியார் கண்ட வாழ்வியல் விழாவில் சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் தலைவர் வீ.கலைச்செல்வம் அவர்களுக்கு  அமெரிக்க பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில்   அதன் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் அவர்கள் சமூக நீதிக்கான கி. வீரமணி விருது வழங்கினார். (12.11.2011)
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி எழுச்சி முரசம்
ஆரூர் சபாபதி - கே. இராமசாமிக்கு பெரியார் விருது
சிங்கப்பூர் வீ. கலைச்செல்வத்திற்கு சமூகநீதிக்கான கி. வீரமணி விருது ரூ.1 லட்சம்

சிங்கப்பூரில் நடைபெற்ற மாபெரும் விழாவில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி மற்றும் அறிஞர் பெரு மக்கள் பாராட்டினர். கைம்மாறு கருதாமல் மக்களுக்காக உழைக்க பெரியாரும், அவர்தம் கொள்கையும் என்றும் தேவை. உலகம் முழுவதும் பெரியாரின் கொள்கை இன்று வலம் வந்து கொண்டிருக்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி சிறப்புரையாற்றினார்.

சிங்கப்பூரில் நடை பெற்ற பெரியார் பெருந் தொண்டர் விருது, சிங் கப்பூர் பெரியார் சமூக சேவை மாற்றத்தின் தலை வர் வீ. கலைச்செல்வம் அவர்களுக்கு  அமெ ரிக்க பெரியார் பன் னாட்டு அமைப்பின் சார்பில்  சமூக நீதிக் கான கி. வீரமணி விருது வழங்கும் விழா - 12.11.2011 அன்று சிங்கப்பூர் சிராங் கூன் சாலையில் உள்ள காந்தி மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடை பெற்றது.
சிங்கப்பூர் சமூக சேவை மன்றம்

சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் சார்பில் சிங்கப்பூரில் பெரியார் கொள்கை வழியில் தொண்டாற்றி வரும் தமிழர்களைக் கவுரவித்து ஊக்கப் படுத்தும் வகையில் பெரியார் பெருந் தொண்டர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு,  தனது சிறுவயதில் பெரியார் கொள்கை முழக்கங் களைக் கேட்டு சுயமரி யாதை வாழ்வே சுக வாழ்வு என்று இளமை முதல் இன்றுவரை பெரி யாரின் பாதையில் பயணித்து வரும் இன மான நகைச்சுவை நடிகர் ஆரூர் சபாபதி அவர் களுக்கும், 1955 ஆம் ஆண்டில் மலேசியா-அலோஸ்டாரில் பெரி யாரின் சொற்பொழிவு களை பகுத்தறிவு கொள்கைகள் விளக்கங் களைக் கேட்டு இன்று வரை பெரியாரின் கொள்கைகளை பின் பற்றி அவர்வழி வாழும் பெரியார் பெருந்தொண் டர் கே.இராமசாமி அவர்களுக்கும்  பெரி யார் பெருந்தொண்டர் விருதினை அனைவரது கரவொலிக்கிடையே வழங்கினார். சிங்கப்பூர் பெரியார் பெருந்தொண் டர் நினைவில் வாழும் மீ.முருகுசீனிவாசன்- குஞ்சம் மாள் குடும்பத்தார் சார்பில் விருதுபெற்ற இருவருக்கும் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.

தமிழர் தலைவர் உரை

விருது வழங்கி திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய வாழ்த் துரை வருமாறு:

மிகுந்த மகிழ்ச்சியோடும் எழுச்சியோடும் நடைபெறக்கூடிய பெரியார் சமூக சேவை மன்றத்தி னுடைய சார்பிலே பெரியார் கண்ட வாழ்வியல் என்பதனுடைய நிகழ்ச்சியாக இங்கே அற்புதமான நிகழ்ச்சி தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. மிகச்சிறப்பான வகையிலே ஒரு நல்ல அரிய கண்காட்சியை நன்றித்திருவிழா வாக பெரியாருக்கு, பெரியா ருடைய பெருந்தொண்டை இளைய தலைமுறையினருக்கும், இனி வரக்கூடிய தலைமுறையி னருக்கும் நினைவூட்டக்கூடிய வகையிலே அற்புதமாக நடந்து கொண்டிருக்கிற இந்த நிகழ்ச்சிக்கு காரணமாக இருக்கக்கூடிய பெரியார்  சமூக சேவை மன்றத்தி னுடைய தலைவர் அன்பிற்குரிய அருமை நண்பர் கலைச்செல்வம் அவர்களே!

இந்த நிகழ்ச்சியிலே என்னுடன் பங்கு பெறுவதற்காக தமிழகத்தில் இருந்து வருகை புரிந்துள்ள மிகப்பெரிய அளவிற்கு தமிழ் இனமான பேரருவியாக கொட்டக்கூடிய பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களே! இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற சிகாகோவை தலை நகரமாக கொண்டு இயங்கு கின்ற பெரியார் பன்னாட்டு அமைப் பினைத் தோற்றுவித்த இயக்குநர் களில் ஒருவரான அன்பிற்குரிய அருமை சகோதரர் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களே, பெரியார் மணியம்மை பலகலைக் கழகத்தினுடைய  துணைவேந்தர் டாக்டர் நல். இராமச்சந்திரன் அவர்களே,

இந்த நிகழ்ச்சியிலே மிக அற்புதமான வகையில் நல்ல இரண்டு பெரியார் பெருந்தொண் டர்கள், சுயமரியாதை வீரர்கள், கொள்கையாளர்கள் என்பதிலே எந்த நிலையில் இருந்தும் மாறு படாத எளிய வாழ்வை அமைத்துக் கொண்டு பெரியார் சொன்ன சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்பதை வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கின்ற அன்பிற்குரிய விருது பெற்ற சிங்கப்பூரில்  நகைச் சுவை நடிகராக அறிமுகமாகி இருக்கக்கூடிய அருமை ஆரூர் பெரியவர் சபாபதி அவர்களே ,

அதே போல் சிங்கப்பூரிலே இவர் எவ்வளவு பேருக்கு   அறிமுகமாகி இருக்கிறாரோ அவ்வளவு அதிக மாக அறிமுகமாகாமல்  அதே நேரத்தில் ஆழமாக, அடக்கமாக தொண்டு செய்யக்கூடிய அருமை நண்பர்  விருது பெற்ற ராமசாமி அவர்களே! இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்ற அருமை தமிழ் சமுதாய சான்றோர்களே! தமிழ்க் குடும்பத்தவர்களே! தாய்மார் களே! பெரியோர்களே! நண் பர்களே உங்கள் அனைவருக்கும் மற்றும் அருமை இணைப்புரை வழங்கிக் கொண்டிருக்கின்ற அருமை தோழியர் அவர்களே! உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.

விலை மதிப்பில்லாத சொத்து


இந்நிகழ்ச்சி மிக அற்புதமாக அமைந்திருக்கிறது. இன்னும் கேட்டால் இந்த கண்காட்சி தொடக்கமே இந்நிகழ்ச்சியி னுடைய சிறப்புக்கு ஓர் அற்புத மான துவக்கம் என்று சொன்னால் அதனுடைய வெற்றிக்கு  அதுதான் முதல் அடித்தளம். எனக்கும், சுப. வீரபாண்டியன் அவர்களுக்கும், மற்ற நண்பர்களுக்கும் நாங்கள் இந்த கண்காட்சியிலே தொகுப்பு புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருக்கும்போது மிகவும் வியப்பாக இருந்தது. காரணம் எங்களுக்கே செய்தி சொல்லக் கூடியவைகளாக சில புகைப் படங்கள் அமைந்திருந்தன.  தமிழ கத்தில் கூட இப்படிப்பட்ட நல்ல சேகரிப்பு இருக்காது.

இதற்குக் காரணமான முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்  முருகு சீனிவாசன் அவர்களையும் அவர்களுடைய அன்பு செல்வ மான மலையரசி, மருமகன் கலைச் செல்வம் அவர்களையும் நாம் வெகுவாக பாரட்ட வேண்டும்.

அவர்கள் மிகவும் முயற்சி எடுத்தி ருக்கிறார்கள். இதிலே பெரியார் பிஞ்சும் இணைந்ததுதான். எனவே பிஞ்சை விட்டுவிட்டு வெறும் கனிகளை மட்டும் சொல்லு கிறோமே என்று யாரும் கவலைப் படவேண்டிய அவசியமில்லை. அந்த வகையிலே இந்த குடும்பம் ஒரு நல்ல சுயமரியாதை பல்கலைக் கழகம் என்பதற்கு அடையாள மாக வழிவழியாக போற்றிவந்தி ருக்கிறார்கள்.  மற்றவர்களெல்லாம் தங்களுடைய பாரம்பரிய சொத்து என்று நிலத்தை காட்டுவார்கள். வீட்டை காட்டுவார்கள். அல்லது வேறு ஏதாவது செல்வத்தைக் காட்டுவார்கள்.

ஆனால் இந்த குடும்பம் இதோ எங்கள் பாரம் பரிய சொத்து விலைமதிப்பில்லாத பெரியாருடைய வருகையை  நாங்கள்  ஆவணப்படுத்தியிருக்கி றோம். யார் வேண்டுமானால் இதை பார்த்துக் கொள்ளலாம் என்று  காட்டக்கூடிய வகையில் அற்புதமாக தொகுத்திருக்கிறீர்கள். அதற்காக எங்கள் நெஞ்சம் நிறைந்த பாராட்டு. உலகத் தமிழர் களின் பாராட்டு.

நான் குடும்பத்தோடு வந்த பொழுது வரவேற்பு

உள்ளூர் தமிழர்கள் மட்டு மல்ல, வெளிநாட்டுத் தமிழர்கள் மட்டுமல்ல என்பதை எடுத்துச் சொல்வதோடு, கவிஞர் இக்பால் அவர்கள் அற்புதமான ஒரு நல்ல முற்போக்கு சிந்தனையாளர் அவர்களை வைத்து இந்தக் கண் காட்சியை தொடங்கி வைத்தது இருக்கிறதே நீங்கள் எதையும் இதனை இதனால் இவன் முடிப்பான் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்  என்ற வள்ளு வர் வாய் மொழிக்கேற்ப அற்புத மாக செய்திருக்கிறீர்கள் என்பதற்கு அடையாளம்.

எனவே கவிஞர் இக்பால் அவர்கள் அடக்கமும் ஆழமும் அதே நேரத்திலே சிறந்த, சீரிய ஒரு கற்பனை வளமும், செயல்திறனும் கவிதை நயமும் உடைய கவிஞர் அவர்கள் ஆவார் கள். அவர்களும் புதுமைதேனீ அன்பழகன் அவர்களும்,  இணை பிரியாத நண்பர்கள்; எப்போதும் இரட்டையர்களாக காட்சியளிப் பார்கள்.

அப்படிப்பட்ட அற்புத மான நல்ல வாய்ப்பை இந்த கண்காட்சிமூலம் அளித்திருக் கிறீர்கள் . அதற்கு அடுத்து நல்ல தொடக்கமாக இருபெரும் சிறந்த கொள்கையாளர்களை அடையா ளப்படுத்தி இருக்கிறீர்கள். ஆரூர் சபாபதி அவர்கள் ரொம்ப நகைச்சுவை நடிகர் என்பதைவிட கொள்கையாளர்.

முதல் முறையாக நான் 1967-லே வந்தபோது சு.தெ.மூர்த்தி அவர்களும், அதே போல நடராசன் தலைவராக இருந்தவர்கள் அவர்களும், அதே போல் நண்பர் நாகரத்தினம், முருகு சீனிவாசன் அவர்களும் பல நண்பர்கள் புகைப்படங்களாக இருக்கக் கூடிய நண்பர்களும் இவை எல்லாவற்றிற்கும் மேலாக விமான நிலையத்திலே வந்து வரவேற்றவர்கள் தமிழவேள் கோ.சாரங்கபாணி ஆவார்கள்.

எங்களையும் எங்கள் குடும்பத் திலே என்னுடைய வாழ்விணை யரோடு குழந்தைகளோடு வந் தோம். அந்த நேரத்திலே அவர் களைப் பார்த்த அந்த காலகட்டத் திலே இருந்து, இன்று வரையிலே மிக மகிழ்ச்சியாக இவர்கள் உற்சாகத்தோடு இருக்கிறார்கள்.

அவர்கள் மிகப்பெரிய அள விற்கு 75 வயது முதுமையானவர் என்று சொன்னால் முதுமை தெரியாமல் எப்போதும் முதுமை வயதுக்கே தவிர நம்முடைய வாழ்வுக்கல்ல என்பதை அவர்கள் தெளிவாக காட்டி நல்ல  இளை ஞராக என்றைக்கும் இருக்கிறார்.  அதேபோல நம்முடைய ராமசாமி அவர்கள் தஞ்சை மாவட்டத்திலே குத்தாலம் என்று சொல்லக்கூடிய மயிலாடுதுறை பக்கத்திலே இருக்கக் கூடிய ஒரு கிராமத்தை சார்ந்தவர்கள். 

அவர்கள் வந்து இங்கு மிகப்பெரிய அளவிற்கு தொழில் நடத்தி முதலில் மாஸ் என்று சொல்லக்கூடிய அந்த விமான சேவையிலே அவர்கள்  ஒருகாலம் ஈடுபட்டு, பிறகு அவர்கள்  நல்ல அளவிற்கு நாணய மாற்று  தொழிலிலே இன்றைக்கு தலைசிறந்து விளங்குகிறார்கள்.

அவர்கள் செய்வது நாணயமாற்று தொழிலே தவிர நாணயத்தை என்றைக்கும் விடாத அளவிற்கு நன்றாக உயர்ந்து நிற்க கூடிய வர்கள்  அவர்கள். நம் கொள்கை யாளர் அவர்கள் மிகத்தெளிவாக இருக்கக் கூடியவர்கள். 

எனவே அந்த இருவரையும் அடையாளம் கண்டு நீங்கள் பாராட்டுவது என்பது மிகமிக அற்புதமான ஒரு நல்லவாய்ப்பு. எனவேதான் இந்த கொள்கையை எவ்வித கைம்மா றும் கருதாமல் தமிழ் சமுதாயத் திற்கு மானமும், அறிவும் உணர்வும் வரவேண்டும் என்பதற்காக தந்தை பெரியார் அவர்கள் உழைத்தார் கள்.

பெரியார் என்றைக்கும் தேவைப்படுகிறார்


அந்த உழைப்பை முன்னெ டுத்துச் செல்வதற்கு பெரியார் என்றைக்கும் தேவைப்படுகிறார். காரணம் பெரியார் மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று புரட்சி கவிஞர் அவர்கள் சொன் னார்கள். தொண்டு செய்து பழுத்த அந்த பழத்தினுடைய மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று காட்டக்கூடிய அளவிற்கு பின்பற் றும்  என்ற பொருள். ஆகவே பின்பற்றக்கூடிய அளவிலே உலகம் முழுவதும் வந்து கொண்டிருக் கிறது.

எனவே பெரியார் கண்ட வாழ்வியல்தான் எதிகாலத்தில் ஒவ்வொருவருக்கும் சிறப்பு என்று கூறி இந்த விருது பெற்றவர்களுக்கு வாழ்த்து கூறி இன்னும் பலபேரை அடையாளப்படுத்த வேண்டும். அதன்மூலம் இளைய தலை முறைக்கு புதிய மாணவர் உலகத் திற்கு, புதிய இளைஞர்களுக்கு இப்படிப்பட்டவர்களை நீங்கள் பாராட்டுவது, அறிமுகப்படுத் துவது மிகமிக அற்புதமான ஒரு செய்தி.

இவர்களெல்லாம் வேர் களை அடையாளம் கண்டு விழு துகள் பாராட்டுவது இருக்கிறதே அதுவும் பழுதில்லாத விழுதுகள் நாங்கள் என்று காட்டுவதற்காக இது அற்புதமான  நிகழ்ச்சி என்று கூறி வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி முடிக்கிறேன் வணக்கம் நன்றி... வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு! - இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி உரையாற்றினார்.

ஆரூர் சபாபதி
பெரியார் பெருந்தொண்டர் விருது பெற்ற ஆரூர் சபாபதி ஆற்றிய ஏற்புரையிலிருந்து வரு மாறு:

தனது 15வயதில் எம்.ஆர்.ராதா நாடகத்தை ஆர்முடன் பார்த்து நடிக்க கற்றுக் கொண்டு அவரது நாடக குழுவில் உதவியாளராக சேர்ந்ததை நினைவு கூர்ந்தார். தந்தை பெரியார், அன்னை மணி யம்மையார், ஆசிரியர் கி.வீரமணி, திருவாரூர் சி.முத்துகிருட்டிணன், சிங்கராயர்,  நாகை ஆர்.வி. கோபால், நீடாமங்கலம் ஆறு முகம் போன்ற தலைவர்கள் தனக்கு ஊக்கமளித்ததையும் கூறி திராவிட மறுமலர்ச்சி நாடக சபாவில் சேர்ந்ததையும் நகைச்சுவையுடன் கூறினார்.

1954இல் நாகை அவுரித் திடலில் தந்தை பெரியார் அவர் களின் 76 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கலைஞர் எழுதிய நச்சுக்கோப்பை, அந்த சாந்தா நாடகத்தில் அய்யர் வேடத்தில் ஜாதி- தீண்டாமை கொடுமைகளை விளக்கி நடித் ததை பெருமையுடன் நினைவு கூர்ந்தார். 80 வயதாகும் தனக்கு இந்த விருதினை வழங்கிய பெரியார் சமூக சேவை மற்ற பொறுப்பாளர்கள் அனைவ ருக்கும் நன்றி கூறினார்.
கே. இராமசாமி
பெரியார் பெருந்தொண்டர் விருது பெற்ற கே.இராமசாமி ஆற்றிய ஏற்புரையிலிருந்து:

78 வயதாகும் தான் பெரியா ருடைய கொள்கையை பின்பற்றி வருவதால் தான் சிறப்பாக வாழ்வ தாகவும், அனைவரும் பெரியார் கொள்கையை பின்பற்றி வாழ் நாளில் முன்னேற வாழ்த்து தெரி வித்ததுடன், தன்னை பெருமை படுத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

சமூகநீதிக்கான கி.வீரமணி விருது
அமெரிக்கா சிகாகோவை தலைமையிடமாகக் கொண்டுள்ள பெரியார் பன்னாட்டு அமைப்பு பெரியாரின் மனித நேயத்தை அகிலமெங்கும் பரப்பிட வழி செய்யும் வகைகளைக் குறிக்கோள் களாகக் கொண்டு செயல்படுகிறது. மனித நேயத்துடனும் சமூக சிந்தனையுடனும் பாடுபடுவோ ருக்கு நாடு, மொழி பாராது அவர்களுடைய பணியைப் பாராட்டும் வண்ணம் இவ் வமைப்பின் சார்பாக கி.வீரமணி சமூகநீதி விருது ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டு, பட்டயமும், ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டு கவுரவப்படுத்தப்படுகிறார்கள் அவர்கள். இவ்வமைப்பின் விருதுகுழு ஆண்டுதோறும் விருது பெறுபவரைத் தேர்ந்தெடுத்து, பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர்கள் நேரில் விருது வழங்கி பெருமைப்படுத்துகிறார் கள். 

டாக்டர் சோம. இளங்கோவன்

விருது வழங்கி சோம.இளங் கோவன் ஆற்றிய உரையிலிருந்து: உலகத்திலே எந்த நன்றியையும் எதிர்பார்க்காமல் தன்னுடைய சொந்த நேரத்தை  சொந்த செலவிலே செய்து புகழுக்காகவும், பணத்திற்காகவும் ஏங்கி நிற்கா மலும் மற்றவர்களின் சுடுசொற் களையும், கோபப்பார்வைகளை யும் ஏற்று வெற்றி நடைபோடுபவர் தான் சமூகநீதிக்காக உழைப்பவர் கள்.

அதில் முதலாவதாக உழைத் தவர் தந்தை பெரியார் அவர்கள் சிங்கப்பூரிலே உங்களுக்கு சமூக நீதி தாராளமாகக் கிடைக்கின்றது. ஆனால் இந்தியாவைப் பொறுத்த வரையில் 2011ஆம் ஆண்டிலும் நம்முடைய உரிமையை பெறு வதற்கு போராட்டங்கள் நடத்த வேண்டிய சூழ்நிலையில் தமிழர் கள் வாழ்ந்து வருவது வேதனைக் குரியதாக உள்ளது.

அதை மாற்று வதற்காகத்தான் சமூக நீதி கேட்கின்றோம்! தந்தை பெரியா ருக்குப் பின் தன்னுடைய இளமைப் பருவத்திலிருந்து குடும் பத்தை மறந்து வருமானத்தை துறந்து தனது வாழ்க்கையே பெரியார் தொண்டர்களுக்காக அர்ப்பணித்து சமூகநீதியின் முதல் போராளி அய்யா வீரமணி பெயரிலே இந்த விருது இருக்க வேண்டும் என்று விரும்பி அவரை கட்டாயப்படுத்தி ஏற்றுக் கொள்ளச் செய்தோம். சந்திரஜித் யாதவ் அவர்கள் அதற்கு உறு
துணையாக எங்களுக்கு இருந்தார். அவர்க்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

1996இல் தொடங்கி முதல் விருது முன்னாள் இந்தியப் பிரதமர் சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களுக்கும், தொடர்ந்து டில்லி சமூகநீதி மய்யத் தலைவர் சந்திரஜித் யாதவ் (1997), காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் கேசரி (1998), உ.பி. முதல்வர் செல்வி மாயாவதி (2000), மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனார் (2001), சிங்கப்பூர் பெரியார் பெருந்தொண்டர் சு.தெ. மூர்த்தி (2002) நீதியரசர் பி.எஸ்.ஏ. சாமி (2005), மியான்மர் பர்மா வீரா. முனுசாமி (2006), தமிழக மேனாள் முதல்வர் மு.கருணாநிதி (2008), பெங்களூர் பேராசிரியர் ரவிவர் மகுமார் (2009) குவைத் செல்ல பெருமாள் (2010) அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி (2011) ஆகியோ ருக்கும் மற்றும் பலருக்கும் விருது வழங்கி உள்ளோம்.

பெரியார் பெருந்தொண்டர் முருகு சீனிவாசன் குடும்பத்தில் தோன்றி தந்தையை விட ஒரு படி மேலே செயல்பட முடியும் என் பதை மலையரசி அவர்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ள பெரியார் ஒளிப்பட காட்சி வழியாக நமக் கெல்லாம் காட்டியுள்ளார். அவ ருடைய மகள் செல்வி குந்தவி தன்னுடைய சேமிப்பிலிருந்து திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு  அவர் செல்லும் போதெல்லாம் ரூ.10,000 நன் கொடை அளித்து வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

நம்முடைய கலைச்செல்வம் அவர்களுக்கு மலையரசி அவர்கள் வாழ்க்கை துணையாக மட்டுமல்லாமல் கொள்கை துணையாகவும் இருந்து இந்த சமூக நீதி தொண் டிற்கு  செயலாற்றி வருவது பாராட்டுக்குரியதாகும். தந்தை பெரியார் வழியில் நன்றி எதிர் பார்க்காமல் சமூகத்திற்கு பொதுத் தொண்டு ஆற்றுவதுதான் உண் மையான மனநிறைவை மகிழ்ச் சியை தரும். அதுபோன்று இந்த இளம் வயதிலேயே பெரியார் வழியில் தொண்டாற்றி வரும் சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் தலைவர் வீ.கலைச் செல்வம் அவர்களுக்கு பெரியார் பன்னாட்டு அமைப்புகள் சார் பிலே இந்த ஆண்டின் சமூக நீதிக்கான கி.வீரமணி விருதினை வழங்குவதில் பெரு மகிழ்வடை கின்றோம்.

விருது வாசகம்

Citation:
“K.Veeramani Award for Social Justice Presented to Mr.V.Kalaichelvam, Persident, Periyar Community Service of Singapore in recognition for his contributions to publication of Periyar’s ideals of Social Service in Singapore”.

இந்த விருதுடன் ரூ.1 லட்சத்திற் கான பணத்தாளும் அளிக்கப் பட்டது.

சிங்கப்பூர் கலைச்செல்வம்

திரு கலைச்செல்வம் தமது ஏற்புரையில் கூறியதாவது:

என்னால் முடிந்தவரை பெரியாரின் கருத்தை பகுத்தறிவு சிந்தனையை பரப்பி வருகிறேன். மானமும் அறிவும் மனிதர்க்கு  அறிவு என்ற அறிவுரைக்கேற்ப எங்களால் இயன்ற வகையில் சிறு சிறு நிகழ்ச்சி மூலம் பகுத்தறிவு கருத்துகளை பரப்பி வருகிறோம். எனக்கு இந்த விருதினை அளித்த அனைவருக்கும் நன்றி! என்று உணர்ச்சியுடன் குறிப்பிட்டார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...