Wednesday, November 23, 2011

நாடாளுமன்றம் நடத்தவா - முடக்கவா?


கடந்த ஆண்டு நாடாளுமன்ற குளிர் காலத் தொடர் முற்றிலும் முடக்கப்பட்டு விட்டது. இவ்வாண்டு குளிர் காலத் தொடருக்கும் அதே கதிதான் என்று நினைக்கும் அளவுக்கு, தொடக்கமே சான்று கூறுகிறது.
நாடாளுமன்றமாக இருந்தாலும் சரி, சட்டமன்றங் களாக இருந்தாலும் சரி, மக்களால் தேர்ந்து எடுக்கப் படும் பிரதிநிதிகள் மக்கள் பிரச்சினைகளைப் பேசுவ தற்கும் எடுத்துக் கூறுவதற்குமே!
எந்தப் பிரச்சினையாகவே இருக்கட்டுமே, எதிர்க் கட்சி முறையாக எடுத்துரைத்து, ஆளும் கட்சியைக் கடுமையாக விமர்சிக்கட்டுமே!
குற்றப் பத்திரிகை வழங்கவேண்டியது எதிர்க் கட்சிகளின் கடமை என்றால், அதற்குரிய பதில் அளிக்க வேண்டியது ஆளும் கட்சியின் கடமையாகும். இதுதான் நாகரிகமான மனிதர்களாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு அடையாளமாகும்.
நாங்கள் எடுத்து வைக்கும் பிரச்சினைகளை ஏற்றுக் கொள்ளவில்லையானால், நாங்கள் நினைப் பது நடக்க வில்லையென்றால், எங்களுடைய விருப்பம் நிறைவேற்றப் படவில்லையானால், நாடாளுமன்றத்தை நடத்த விட மாட்டோம் - முடக்குவோம் - கூச்சலிடு வோம் என்று சொல்லுவதும், செய்வதும் எந்த வகையில் அறிவுடைமையானது - நாகரிகமானது - பண்புடைமையானது?
மக்களுக்கு வழி காட்ட வேண்டிய மக்களின் பிரதிநிதிகள் இப்படி நாடாளுமன்றத்தில் நடந்து கொள்வார்களேயானால், குடிமக்களின் நிலைமை என்ன? அரசன் எவ்வழி, அவ்வழி குடிமக்கள் என்பார் களே - அது  ஜனநாயக நாட்டிலும் ஆட்சி எவ்வழி - நாட்டு மக்களின் வழியும் அவ்வழியே என்ற நிலைதானே!
வீதிகளில் மக்கள் வீண் கலவரம் செய்கிறார்கள். நாட்டில் அமைதிக்கு அச்சுறுத்தல் நடக்கிறது - அமைதி தேவை, தேவை என்று அறிவுரை கூறிட, ஆட்சியாளர்களுக்கோ அரசியல்வாதிகளுக்கோ சொல்லும் தகுதி உண்டா?
அதுவும் சபாநாயகரைச் சூழ்ந்து கொண்டு கூச்சல் போடுவது, அவைக்குள்ளேயே அமர்ந்து சண்டித்தனம் செய்வது - மற்றவர்கள் தங்கள் கருத்துகளைக் கூற விடாமல் கூச்சல் போடுவது என்பதெல்லாம் எந்த வகையில் உன்னதமானது - உதாரணமானது?
இதில் குறிப்பிட்ட ஒரு கட்சியை மட்டும் குறை கூறுவதில் பயனில்லை. ஆளும் கட்சியாக இருக்கும் போது புத்தர் போல உபதேசம் செய்வதும், அவர்களே எதிர்க் கட்சி வரிசையில் அமரும்போது அதற்கு மாறாக அமளிதுமளியில் ஈடுபடுவதும் சரியானதுதானா?
இவ்வளவுக்கும் ஒவ்வொரு தொடர் தொடங்கப் படும் பொழுதும் சபாநாயகர் என்ன செய்கிறார்? நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலை வர்களையும் அழைத்து கூட்டத் தொடர் அமைதி யாகவும், அர்த்த முள்ளதாகவும் நடத்தப்பட ஒத்துழைப் புக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள் கிறார். எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோரின் கருத்துகள் கேட்கப் படுகின்றன.
இவ்வளவு நடந்த பிறகும், மறுநாளே கூட்டத்தை முடக்கும் அளவுக்கு மோசமான வகையில் நடந்து கொள்வது வேதனைக்குரியது - கண்டனத்திற் குரியது.
ஜனநாயகம் என்பது காலிநாயகம் என்று தந்தை பெரியார் கூறியதற்கான பொருள் இப்பொழுதுதான் புரிகிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?
மாத சம்பளம் ரூ.80,000. அலுவலகப் படி மாதம் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம். நாடாளுமன்ற அமர்வுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1000. தொகுதிப்படி மாதம் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம். மனைவியுடன் விமானத்தில் பறக்க 40 முறை இலவசம். இலவச வீட்டு வாடகை, 50 ஆயிரம் யூனிட் மின்சாரம் இலவசம்; தொலைப்பேசி இலவசம் (உள்ளூர்); 1,70,000. 5 ஆண்டுகளுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பின ருக்காக ஆகும் செலவு ரூ.ஒரு கோடியே 60 லட்சம்.
534 உறுப்பினர்களுக்கு ஆகும் செலவினம் ரூ.855 கோடி.
இந்த நிலையில்,
மக்கள் பணத்தை மக்களின் பிரதிநிதிகள் நாசப்படுத்தலாமா?
இத்தகைய மக்களுக்குத் துரோகம் செய்யலாமா? வழிகாட்ட வேண்டியவர்கள் வழி தவறிப் போகலாமா என்பதுதான் நமது கேள்வி.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...