Wednesday, November 23, 2011

உலகத்திலேயே அதிக குளுமையான இடம் எது?


தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
உலகத்திலேயே அதிக குளுமையான இடம் எது?
உலகத்திலேயே அதிக குளுமையான இடம் பின்லாந்துதான்.
ரோடிய உலோகத்தை பூஜ்யம் (-273o C) டிகிரி வெப்பநிலையில் 100 கோடியில் பத்து மடங்கு நிலைக்கு ஹெலின்ஸ்கி பல்கலைக் கழக தொழில்நுட்பத் துறையின் குழு ஒன்று 2000 இல் குளுமைப்படுத்தியது. ரோடியம் என்பது ஓர் அரிய  உலோகத் தனிமம். அது முக்கியமாக  கார்களின் கேடலிக் கன்வெர்டர்களில் பயன்படுத்தப்படுகிறது.


அடுத்த குளுமை மிகுந்த இடம் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் இருக்கிறது. இங்கு குளுமை மிகுந்த சோடியம் வாயுவை வுல்ஃப்கேங்க் கெட்டர்லியின் தலைமையிலான குழு ஒன்று 2003 இல் உற்பத்தி செய்தது. 2003 இல், போஸ்-அய்ன்ஸ்டீன்  கொள்கை சுருக்கத்தின் மீதான பணிக்காக,  இயற்பியலுக்கான நோபல் பரிசு கெட்டர்லிக்கு வழங்கப்பட்டது. முழுமையான பூஜ்ய வெப்பநிலைக்கு வெகு அருகில் மட்டுமே இருக்க இயன்ற  பொருளின்  ஒரு புதிய நிலை அது. சிறுவனாக இருந்தபோது லெகோ விளையாடியது அவருள் அறிவியல் பற்றிய ஆர்வத்தைத் தூண்டும் பொறியாக அமைந்தது.
இவ்வாறு சோதனைச் சாலைகளில் மிகமிகக் குளுமையான வெப்பநிலைகளை உருவாக்கியது மிகவும் குறிப்பிடத்தக்க செயல்பாடுகளாகும். ஆழம் மிகுந்த இடங்களிலும் கூட வெப்பநிலை மிக அரிதாகத்தான் -245oC க்கும் கீழே செல்லும்.
இதற்கு ஒரே விதி விலக்காக அமைந்தது 1979 இல் ஆஸ்திரேலிய வான இயலாளர்களால் அடையாளம் காணப்பட்ட பூமராங் நெபுலா என்ற வால்நட்சத்திரமாகும். பார்ப்பதற்கு அது பூமராங் அல்லது பவ்டை Bow Tie போன்று தோற்றம் அளித்தது. நமது சூரியனைப் போல் மூன்று மடங்கு அதிக எடை கொண்ட, இறந்து கொண்டிருந்த  ஒரு நட்சத்திரம் அதன் மய்யத்தில் இருந்தது.
இந்த பூமராங் நெபுலா 500,000 கி.மீ. (300,000 மைல்) வேகத்தில் கடந்த 1,500 ஆண்டுகளாக வாயுவை வெளியே பீய்ச்சி அடித்துக் கொண்டிருக்கிறது. நமது வாயில் உள்ள சிறு துவாரம் மூலம் மூச்சை நாம் செலுத்தும்போது எவ்வாறு அது குளிர்ந்து போகிறதோ, அதே போல் நெபுலாவில் இருந்து பீய்ச்சி அடிக்கப்படும் வாயு அது விரிவடையும் இடத்தின் வெப்பநிலையை விட இரண்டு பாகை குளிர்ந்து போகிறது. இதுவரை பதிவு செய்யப்பட்ட இயல்பான மிகக் குறைந்த  வெப்ப நிலையை -271oC அது எட்டுகிறது.
சூரிய மண்டலத்தில் மிகக் குறைந்த வெப்ப நிலையை  -235oC நெப்ட்யூனின் சந்திரன்களில் ஒன்றான டிரிடானின் மேல் பரப்பில் 1989 இல் செலுத்தப்பட்ட வாயேஜர் -2 விண்களம் அளவிட்டுள்ளது. பூமியில் மிகக் குறைந்த வெப்பநிலை -89.2oC 1983 இல் அண்டார்டிகாவில் பதிவு செய்யப்பட்டதாகும்.
பூஜ்ய மின்தடை கொண்ட பொருள்கள், சூப்பர் மின் கடத்திகள் ஆகியவை பற்றிய ஆய்வுக்கு குறைந்த வெப்ப நிலை ஆய்வு இன்றியமையாதது ஆகும். ஆனால் அவை அனைத்துமே குறைந்த வெப்ப நிலையில் மட்டுமே செயல் ஆற்றுபவைகளாக இருப்பது காணப்பட்டது. சூப்பர் மின்கடத்திகளை உற்பத்தி செய்யும் முயற்சி மட்டும் வெற்றி பெற்றுவிட்டால், அவை உலகத்தையே ஒட்டு மொத்தமாக மாற்றிவிடும்.
கணினிகளின் ஆற்றலை அவை பெரும் அளவில் அதிகரிக்கச் செய்துவிடும்.  மின்சார உற்பத்தி செலவினைப் பெரும் அளவில் அவை குறைத்துவிடும் என்பதுடன், சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் வாயுக்கள் வெளியாவதையும் பெரும் அளவு குறைத்துவிடும். எரிபொருள் இல்லாத வாகனங்கள், ஆபத்தான எக்ஸ்ரே படப்பிடிப்புக்கு மாற்றாக உடலின் உள் பகுதிகளைப் பார்க்கும் ஒரு புதிய வழி, எந்த மனிதரையும் கொல்ல வேண்டிய தேவையின்றி, எதிரியிடம் உள்ள மின்னணு ஆயுதங்களை அழிக்க வல்ல   E-bombஆகியவைகளை அவை அளிக்கும்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’   பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...