Monday, November 21, 2011

உலகிலேயே மிகப் பெரிய நகரம் எது?

தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
உலகிலேயே மிகப் பெரிய நகரம் எது?
சிக்கலான கேள்வியாக இருந்தாலும், உலகிலேயே மிகப் பெரிய நகரம் ஹானலூலுதான். ஹவாய் நாட்டு சட்டத்தின் மூலம் 1907 இல் ஹானலூலு மாவட்டமும், நகரமும் (இரண்டும் ஒன்றே) உருவாக்கப்பட்டன.   இந்த மாவட்டத்தின் முக்கிய தீவான ஓஹூ மட்டுமன்றி, எஞ்சியிருக்கும் 2400 கி.மீ. (1,500 மைல்) தூரம் பசிபிக் பெருங்கடலில் பரவலாக அமைந்திருக்கும் வடமேற்கு ஹவாய் தீவுகள் அனைத்தையும் உள்ளடக்கியது இந்த மாவட்டம்.
இதன் பொருள் என்னவென்றால் வேறு எந்த நகரத்தையும் விட மிகப்பெரிய 5,509 சதுர கி.மீ. (2,127 சதுர மைல்) கொண்ட நிலப்பரப்பைக் கொண்டதாக ஹானலூலு இருக்கிறது என்பதுதான். என்றாலும் அதன் மக்கள் தொகை 876, 156 மட்டுமே. இந்த நகரத்தில் 72 விழுக்காடு  பரப்பு கடல்நீரில் மூழ்கியுள்ளதாகும். இந்த உலகின் அதிக மக்கள் தொகை உள்ள நகரம் மும்பையாகும். இங்கு 128 லட்சம் மக்கள் 440 சதுர கி.மீ. (170 சதுர மைல்) பரப்பில் வாழ்கின்றனர். ஒரு சதுர கி.மீ. பரப்பில் 29,024 பேர் வசிப்பது மிகவும் வியப்பிற்குரியதாகும். மொத்த பெருநகரப் பரப்பையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் டோக்கியோவாகும். இங்கு 352 லட்சம் மக்கள் 13,500 சதுர கி.மீ. (5,200 சதுர மைல்) பரப்பில் வாழ்கின்றனர்.
ஹவாய் நாட்டின் தலைநகரம் ஹானலூலு ஆகும். ஆனால் அந்த நகரம் ஹவாய் தீவின் மீது இல்லை; ஓஹூ தீவின் மீது அமைந்துள்ளது. ஓஹூ தீவு ஹவாய் தீவை விடச் சிறியதானாலும், அதை விட அதிக மக்கள் தொகை அடர்த்தியைக் கொண்டது. உலகிலேயே அதிக அளவில் மக்கள் தொகை சிதறிக் கிடக்கும் நாடு ஹவாய்தான். ஹவாய்த் தீவுக் கூட்டத்தின் ஆர்ச்சிபெலாகோ தீவுகள் உலகின் மிகப்பெரிய மலைத் தொடரின் முனையில் அமைந்துள்ளன. காபி பயிரிடும் ஒரே அமெரிக்க நாடு ஹவாய்தான். உலகில் பயிரிடப்படும் பைனாப்பிள்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானவை ஹவாயில் விளைவதுதான். உலகிலேயே அதிக அளவில் டின்களில் விற்கப்படும் கொத்துக்கறியை உண்பவர்கள் ஹவாய் மக்களே. ஓராண்டில் 70 லட்சம் டின் கறியை உண்கின்றனர்.
இந்த டின்களில் விற்கப்படும் கொத்துக்கறி இங்கு மிகவும் புகழ் பெற்றதாகும். போரின்போது இப்பகுதியில் ராணுவ வீரர்கள் அதிகமாக இருந்தது அதன் காரணமாக இருக்கலாம். மேலும் புயலடிக்கும்போது இவ்வாறு டின்களில் அடைக்கப்பட்ட கறி கைக்கு அடக்கமாகப் பயன்படும். இந்தக் கொத்துக்கறியுடன் சேர்த்து வறுக்கப்பட்ட சோறு ஹவாயின் சிறப்பு உணவாகும். 1778 இல் கேப்டன் குக் இந்த ஹவாய்த் தீவுகளைக் கண்டுபிடித்தார். தனது பயணத்திற்கு பொருளுதவி செய்த சாண்ட்விச் பிரவுவின் நினைவாக அத் தீவுகளுக்கு சாண்ட்விச் தீவுகள் என்று குக் பெயரிட்டார். 1779 இல் ஹவாயிலேயே குக் கொலை செய்யப்பட்டார்.
19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இத் தீவுகள் ஹவாய் சாம்ராஜ்யம் என்றே அறியப்பட்டிருந்தன. 1900 இல் இது அமெரிக்க அய்க்கிய நாட்டு எல்லைக்குள், அதன் 50 ஆவது மாகாணமாக சேர்ந்தது என்றாலும், இன்னமும் தங்களின் யூனியன் ஜாக் கொடியையே அது பயன் படுத்தி வருகின்றது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’  பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

1 comment:

ஞாஞளஙலாழன் said...

அரிய தகவல். அறிய வைத்தமைக்கு நன்றிகள்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...