Thursday, November 17, 2011

சிங்கப்பூர், மலேயா தமிழர்களுக்கு பெரியார் கூறிய அறிவுரை என்ன?


சிங்கப்பூர், நவ. 17- சிங்கப்பூர், மலேயா தமிழர் களுக்குப் பெரியார் கூறிய அறிவுரை என்ன என் பதை சிங்கப்பூரில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரை யாற்றினார்.
சிங்கப்பூரில் பெரியார் கண்ட வாழ்வியல் நிகழ்ச்சி 13.11.2011 அன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய சிறப்புரை வருமாறு:
அன்றைய சிங்கப்பூரின் நிலை
ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் உங்கள் எல்லோருக்கும் என் அன்பான வணக்கம். தந்தை பெரியார் அவர்கள் இந்த மண்ணுக்கு 1929லே முதல் முறையாக வந்தார்கள். அப்பொழுது இந்த சிங்கப்பூர் தனி நாடாக இல்லை. மலேயா என்ற பெயரிலே அமைந்த ஒரு பகுதியாக இருந்தது.
வெள்ளைக்காரர்கள், பிரிட்டிஷ் காரர்கள் ஆதிக்கம் இருந்தது. அப் பொழுது வரலாற்றுப்படி  1953, 1954 என்று கருதுகின்றேன். பர்மா என்ற ழைக்கப்பட்ட இன்றைக்கு மியான்மா என்று அழைக்கக்கூடிய நாட்டில் அகில உலக பவுத்தர்கள் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு மலேசியா விற்கும், சிங்கப்பூருக்கும் வந்தார் பெரியார் அவர்கள்.
நன்றி காட்டுகின்ற வகையிலே...
அப்பொழுது மிகச்சிறப்பான வரவேற்பை நன்றி காட்டுகின்ற வகை யிலே சிங்கப்பூர் மக்கள் பெரியாருக்கு வழங்கினார்கள். அது என்றென் றைக்கும் மறக்க முடியாத ஒன்றாகும்.
சிங்கப்பூர் தனி நாடு
சிங்கப்பூர் அன்றைக்கு மலாயா வுடன் இணைந் திருந்தாலும் சிங்கப் பூர் தனி நாடாக ஆனபிற்பாடும் என்றைக்குமே சிங்கப்பூர் தமிழர்கள் நன்றி மறந்தவர்கள் அல்லர். நன்றி காட்டக்கூடியவர்கள் என்ற அள விலே. தந்தை பெரியார் அவர்களை வெகுவாக ஈர்ப்பு செய்தார்கள். அவ் வளவு பெரிய வரவேற்பை கொடுத் தார்கள். இன்னும் கேட்டால் அதையே தலைப்பாக வைத்து கருத்தரங்கம் நடத்த வேண்டும். அதுவும் குறிப்பாக பெரியார் மணியம்மை பல் கலைக் கழக துணைவேந்தர், நல்.இராமச்சந் திரன் அவர்கள் இங்கு இருக்கின்றார் கள். அவர்களும் ஒப்புக்கொள்வார் கள் என்று நான் நினைக்கிறேன்.
பெரியார் விருது-சுப.திண்ணப்பன்
அதே போல தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் ஆண்டியப்பன் அவர்கள் இங்கு வந்திருக்கின்றார்;. ஆன்றவிந்த கவிஞர் பெருமக்கள், சிந்தனையாளர்கள் இந்த அரங் கத்திற்கு வந்திருக்கிறார்கள்.
எனவே பெருமைக்குரிய அய்யா பெரியார் விருது பெற்ற சுப.திண் ணப்பன் அவர்கள் குறிப் பிட்ட அந்த கருத்தரங்கத்தை நிச்சயமாக வருகிற அடுத்த ஆண்டு நாங்கள் நடத்துவ தற்கும், அதனை பல கட்டுரைகளாக்கி புத்தகங்களாக ஆக்கித் தொகுத்து கொடுப்பதற்கும், பெரியாரின் பங்களிப்பு என்ன என்பதை எடுத்துச் சொல்வதற்கும் வாய்ப்பாக அமை வோம். உங்களுடைய கருத்தாக்கத் திற்கு எங்களுடைய மனப்பூர்வமான நன்றியைத் தெரி வித்துக்கொள் கின்றோம்.  (கைதட்டல்).
விழா என்று சொன்னால் ஏதோ பெரியாருடைய பெருமைகளைப் பேசிவிட்டுப் போவதல்ல. பெரியா ருக்குப் பெருமையே எப்பொழுது வரும்? அவருடைய தொண்டர்களாக இருக்கின்ற எங்களைப் பார்த்து பெரியாரின் நிழல் என்று புதுமைத் தேனீ அவர்கள் சொன்னார்கள். அவர் இணைப்புரை வழங்குகிறார் என்று சொன்னால் அதுவே ஒரு சிறப்பு ரையாக இருக்கும் (கைதட்டல்) அவ்வளவு ஆற்றல் படைத்தவர்கள். எனவே அவர் சொல்லும் பொழுது நிறைய செய்திகளை சொல்லிவிட்டு, நிழல் என்றார்.
பெரியாருக்கு நிழலாக இருக்க முடியாது!
நாங்கள் பெரியாருக்கு நிழலாக இருக்க முடியாது.  அதே நேரத்திலே பெரியாருடைய மாணவன் நான் என்றைக்கும் பெரியாரைப் படித்துக் கொண் டிருக்கின்றவன். இன்றைக்கும் பெரியாரைப் படித்துக் கொண்டிருப் பவன். அந்த நிலையிலே பெரியாரு டைய மாணவன் என்ற முறையிலே தான் என்றைக்கும் இருக்கக் கூடிய வர்கள்.
நாங்கள் பேசிக்கொண்டிருக்கின்ற பொழுது பேராசிரியர் சுப.திண்ணப் பன் அவர்கள் இப்படி ஒரு நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்று சொல்லி அவர் களே தலைப்புக்கொடுத்துவிட்டார் கள்.
இந்த தலைப்பையே தேர்ந்தெடுத்து இளைய தலைமுறையினருக்கும் பயன்படுகின்ற வகையில் செய்யுங்கள் என்று அழகாக சொன்னார்கள்.
பெரியார் பிறந்திருக்காவிட்டால்....!
அதன்படியேதான் பல்வேறு செய் திகளை தொகுத்தளிக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். இதற் கிடையிலே தந்தை பெரியார் பிறந்திருக்கா விட்டால் என்ற ஒரே ஒரு கேள்வியை மட்டும் தமிழர்கள் எண்ணிப் பார்த்து அந்தக் கேள்விக்கு விடைகாண விரும்பினால் எவ்வளவு பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்பதை நினைக்கலாம்.
தமிழர்களுக்கு அடிப்படையிலே இருக்கின்ற இழிவைப் போக்க பெரியார் தனது தொண்டைத் தொடங் கினார். ஆனால் அவர்களுடைய சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி அவர்கள் விளக்கம் சொல்லும் பொழுது இது உலகளாவிய இயக்கம்.
மனிதநேய இயக்கம்
மனிதநேய இயக்கம். மனிதர் களுக்காகத் தொடங்கப்படுகின்ற ஒரு பகுத்தறிவு இயக்கம். மனிதனுக் குத்தான் மானமும், அறிவும் மிக முக் கியமானது என்ற அடிப்படையிலே சிறப்பாக நடைபெறுகின்ற இயக்கம் என்று அவர்கள் தொடங்கினார்கள்.
அதன் காரணமாகத்தான் புரட்சிக் கவிஞர் அவர்கள் அழகாக சொன்னார்கள். ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி
அவள் அறிந்திராத அறிவாவார்
அவள் அணிந்திராத அணியா வார்
என்று அழகாக இரண்டு வரி களிலே பெரியா ரைப் பற்றிச் சொன் னார்கள். ஓராண்டு அல்ல. ஈராண்டு அல்ல. ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி என்று ரொம்ப அழகாகச் சொன்னார்.
அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்கள் இங்கே பேராசிரியர் சுப.வீரபாண்டியன் குறிப்பிட்ட தைப் போல சமுதாய பார்வையைத்தவிர அவர் களுக்கு எப்பொழுதுமே தனிப்பட்ட பார்வை கிடையாது.
சரி பகுதியாக இருக்கிற பெண்ணினம்
சமுதாயத்திலே சரி பகுதியாக இருக்கின்ற பெண்ணினம் ஏன் அடிமைப்பட்டுக்கிடக்க வேண்டும்? சமுதாயத்திலே மிகப் பெரும்பாலோ ராக இருக்கக் கூடிய உழைப்பாளர் வர்க்கம் ஏன் கீழ் ஜாதி யாக்கப்பட்டு தொடக்கூடாதவர்களாக பார்க்கக் கூடாதவர்களாக ஆக்கப்பட்டார்கள்? என்பதைப் பார்த்து வியப்படைந் தார்கள்.
நேற்று கண்காட்சி எல்லாம் பார்த் துக்கொண்டு வருகிறபொழுது நம் முடைய நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் அவர்கள். ஒவ்வொன் றாகப் பார்த்துவிட்டு வரும்பொழுது சொன்னோம்.
உங்கள் மூதாதையர் யார்?
கேரளாவிலே மூதாதையர்கள் எந்தப் பகுதியைச் சார்ந்தவர்கள் உங்களுக்கு நினைவிருக்கிறதா என்று கேட்டபொழுது அந்தப் பகுதியைச் சொன்னார்கள். நான் அப்பொழுது அவர்களுக்கு விளக்கிச் சொன் னேன்.
வைக்கம் வீரர் என்ற பட்டத்தை தமிழ்ச் சான்றோர் திரு.வி.க. அவர்கள் அளித்தார்கள். காரணம் வைக்கத்திலே எவ்வளவு பெரிய கொடுமை நடந்தது என்பதை வரலாற்று ரீதியாக எடுத்துச் சொல்லிக்கொண்டு வந்த பொழுது அவர்களிடம் நாங்கள் சொன்னோம்.
தெருக்களிலே நாய் போயிற்று. பன்றி சுதந்திர மாகப் போயிற்று. கழுதை நடமாடியது. ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் கீழ்ஜாதி என்ற காரணத் திற்காக, நடமாட உரிமை இல்லை என்ற சமுதாய நிலை இருந்தது. நடமாட உரிமை இல்லை. என்பது மட்டுமல்ல. தீண்டாமை என்ற தொடக்கூடாத உரிமை தொட்டால் பாவம், தீட்டு என்று சொல்லுவது மட்டுமல்ல. பார்க்கக் கூடாது என்று சொன்னால் பார்த்தாலே தீட்டு.
ஜாதி பற்றி கவலை இல்லா நாடு
ருவேடிரஉயடைவைல என்பதை விட ரளேநநயடெந என்று இருந்தது. அப்படி ஒரு கொடுமை இருந்தது. நல்ல வாய்ப்பாக இந்த நாடு ஜாதியைப் பற்றிக் கவலைப் படாமல் ஒரு அற்புதமாக வளர்ந்திருக்கின்ற நாடு என்றால் அதுவே பெரியார் விரும்பிய சமுதாயம் இங்கே அமைந்திருக்கிறது.
பெரியார் பெருவெற்றி பெற்றிருக் கிறார். அவர்கள் ஒவ்வொரு முறையும் வந்தது. அவர்கள் விதைத்தது வளர்ந் தோங்கியிருக்கிறது. காய்த்துக் கனிந் திருக்கிறது என்பதற்கு அடையாள மாக மிகச்சிறப்பாக காணலாம்.
தமிழர்கள் முதலிலே வந்த பொழுது அவர்கள் கூலிகளாக வந்தார்கள். மற்ற நாடுகளில் கணினித் துறையில் கை நிறைய சம்பளம் இன்றைக்குத் தமிழர்கள் வாங்கு கிறார்கள். எனவே இன்றைய இளைய சமுதாயத்தினருக்குப் பழைய சமுதாய நிலை தெரியாது.
எனவேதான் உங்களைப் பழைய காலத்திற்குக் கூட்டிக்கொண்டு போக வேண்டும். வரலாற்றைப் பின்னோக் கிக் காட்ட வேண்டும் என்று விரும்பு கிறோம்.
தோட்டத் தொழிலாளர்களாக அன்றைக்குச் சென்றார்கள்
அன்றைக்கு நம்மவர்கள் என்று மலேயா, பர்மா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு தோட்டத் தொழி லாளர்களாகத்தான் வந்தார்கள். ஒரு சிலர் வாணிபத்துறையிலே இருந் தார்கள். அப்படிப்பட்ட நிலை இன்றைக்கு இல்லை. மிகப் பெரிய அளவுக்குப் படித்தவர்கள் குறை வாகத்தான் இருந் தார்கள்.
தந்தை பெரியார் அவர்கள் அந்த நிலையிலே ஒவ்வொருவருடைய அன்பை பெற்ற நேரத்திலே அவர்கள் அற்புதமான ஒரு கருத்தைச் சொன் னார்கள். பெரியாருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று கூட கேட்பார்கள். புரியாத காரணத்தால் பெரியவர்களுக்கு முதுகுடிமக்களுக் கெல்லாம் தெரியும்.
பெரியார் இல்லையானால் பெரி யாருடைய தொண்டு இல்லாமல் இருக்குமேயானால் இந்த மண்ணை இவ்வளவு வளப்படுத்தியிருக்க முடி யாது என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
சிங்கப்பூர் மலேயாவுடன் இணைந்திருந்தது
அய்யா அவர்கள் 1954, 1955லே வந்தார்கள். சிங்கப்பூர் நாடு மலாயா நாட்டுடன் அப்பொழுது இணைந் திருக்கிறது. அப்பொழுது அய்யா அவர் களுக்கு பெரிய வரவேற்பு கொடுத்தார்கள். மலேயாவில் பெரியார் என்று ஒரு நூலைக்கூட கண்காட்சியில் வைத்திருந்தார்கள்.
இந்த மண்டபம் வள்ளல் கோவிந்தசாமி பிள்ளை பெயராலே அமைந்திருக்கின்ற மண்டபம் இந்த மண்டபம் யாருடைய பெயரால் அமைந்திருக் கிறதோ அந்த கோவிந்தசாமி பிள்ளையே பெரியார் அவர்களுக்கு வரவேற்பு கொடுத்து பிரமுகர்கள் எல்லாம் சேர்ந்து உட்கார்ந்திருக்கின்ற படம் உள்பட இதிலே பதிவாகியிருக்கின்றது.
அய்யா அவர்களுடைய பல கருத்துக்களை, பழைய குறிப்புகளை எல்லாம் தேடிப் பார்த்தேன். ஏனென் றால் பேராசிரியர் கட்டளையிட்டார். அதுவும் பெரியார் பணி முடிக்கக் கூடிய அளவுக்கு பெரியார் விருதுக் குரியவர். அவர்கள் சொன்னால் பயனுள்ளதாக இருக்கும். 1955 ஜனவரி 8ஆம் தேதியன்று வானொலிக்கு அழைத்துப் போய் இந்த மக்களுக்கு என்ன செய்தி சொல்லிவிட்டு புறப்படுகிறீர்கள் என்று கேட்டார் கள். அந்த செய்தி தமிழ் முரசு இதழிலே எடுத்துப் போட்டிருக்கின்றார்கள். விடுதலை இதழிலும் எடுத்துப் போட்டிருக் கின்றார்கள்.
பெரியார் கூறிய செய்தி
பெரியார் அவர்கள் திரு.கோ. சாரங்கபாணி, திரு.கோ.ராசாராம் அவர்களுடன் மலேயா ரேடியோ நிலைத்திருக்குச் சென்றார்கள். ரேடியோ நிலையத்தின் இந்தியப் பகுதி அதிகாரி திரு.ஜோசப் அவர்கள் தலைவர் பெரியார் அவர்களை வர வேற்று, அந்த ரேடியோ நிலையத்தின் பல பகுதிகளை சுற்றிக் காண்பித் தார்கள். பிறகு பெரியார் அவர்களை நிலைய அதிகாரி அவர்கள் மக்களுக்கு செய்தி அளிக்கும் படியாக கேட்டுக் கொண்டார்கள். பெரியார் அவர்கள் பேசுகிறார் (அன் றைக்கு மலாயா நாடு என்று பெயர்) இந்த நாட்டிற்கு நான் இரண்டாவது தடவையாக வந்தேன்.
இங்கு எல்லா இடங்களிலும் மக்கள் என்னை அன்போடு வர வேற்றது என்னால் என்றும் மறக்க முடியாது. ஆனால் தமிழ் மக்கள் இதுதான் முக்கியமானது. இன் றைக்கும் பெரியார் தேவைப்படுகிறார் என்பதற்கு இதுதான் அடையாளம். பெரியாருடைய கருத்து எந்த அளவுக் குப் பக்குவப்படுத்தப் பட்டிருக்கிறது என்பதற்கு அடையாளம் இதுதான்.
ஒற்றுமையுடன் வாழ வேண்டும்
தமிழ் மக்கள் தங்களிடையே உள்ள மூடப்பழக்க வழக்கங்களையும் ஜாதி வேற்றுமைகளையும் விட் டொழித்து மிக்க ஒற்றுமையுடன் அன்புடன் வாழ வேண்டுமென்பது என்னுடைய விருப்பமாகும். அல்லது என்னுடைய ஆசையாகும். நீங்கள் உங்களுடைய வருவாயை உங்கள் குடும்பத்திற்கும் (பெரியார் அவர்களுக்கு மக்கள் மீது இருந்த சமூக கவலையைப் பாருங்கள் மக் களுக்குச் சொல்லுகிறார்கள்). உங் களுடைய குழந்தைகளின் கல்விக்கும் செலவழித்தது போக மீதியை நன்கு சேமித்து எதிர்காலத்தில் சுதந்திரமான வருவாய் ஏற்படுத்திக்கொள்ளத் தக்க (அதாவது ஒவ்வொருவரும் சொந்தக் காலில் நிற்கக் கூடிய அளவுக்குப் பக்குவமாக வேண்டும் என்ற அறிவு ரையை அவர்கள் நடைமுறையில் சொல்லி அவர் கள் சொந்தக் காலில் நிற்கக்கூடிய அளவிற்கு எதிர் காலத் தில் இருக்க வேண்டும்.) வகையில் தொழிலைச் செய்பவர்களாக வர வேண்டும் என்பதாகப் பேசினார்கள்.
பெரியார் அவர்கள் ஊருக்குப் புறப்படுகிற நேரத்திலே இந்தச் செய்தியைச் சொல்லுகிறார்கள். இந்த நகரத்திலே இருக்கக் கூடிய அத் துணை பெரியவர்களும் வரவேற்பு கொடுக்கிறார்கள். அப்பொழுது இருந்த சி.வி.ஓட்டலில்தான் ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டிருக் கிறார்கள். பெரியார் சொன்ன அறிவுரை இந்த மக்களுக்கு எவ்வளவு பயன்பட்டிருக்கிறது பாருங்கள். இன்றைக்கு இவ்வளவு நல்ல வாழ்க் கையை வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள். நல்ல வாழ்க்கைத் தரம் இருக்கிறது.
சுதந்திரமான வாழ்க்கைத்தரம் இருக்கிறது. மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டான வாழ்க்கைத் தரம் இருக் கிறது என்று சொன்னால் அதிலே பெரியாருடைய அறிவுரையின் தாக் கம், அதனுடைய பங்களிப்பு எப்படி யிருக்கிறது என்பதற்கு இதோ மற் றொரு பகுதியை சுட்டிக்காட்டுகின் றேன்.  பெரியார் பேசிய ஒரு பகுதியை சொல்லுகின்றோம். பெரியார் பேசு கிறார். கேளுங்கள்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...