Tuesday, November 8, 2011

நன்றி! மிக்க நன்றி!!

நன்றி! மிக்க நன்றி!!


முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் - வேலூர் மண்டல திராவிடர் கழகத் தலைவர் - பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் நிருவாகக் குழு உறுப்பினர் செய்யாறு மானமிகு பா. அருணாசலம் அவர்களின் பிறந்த நாள் விழாவை யொட்டி ஆண்டு தோறும் சென்னை பெரியார் திடலுக்கு குடும்பத்தினருடன் வருகை தந்து அய்யா, அம்மா நினை விடங்களில் மலர் வளையம் வைத்து, கழகத் தலை வருக்குச் சால்வை அணிவித்து இயக்கத்திற்காக நன்கொடையை வழங்கி மகிழக்கூடிய தொண்டறம் கொண்ட தூயவர்.

தமக்குப் பிறகும் இயக்கப் பணிகளைத் தொடர்ந்து நடத்திட - இயக்கத்திற்காகப் பாடுபட - அவர்தம் அருமை மகன் மானமிகு அ. இளங்கோவன் அவர்களை அருளிய எடுத்துக்காட்டான இயக்கக் கொள்கைக்குச் சொந்தக் காரர். இன்று அவரின்  86ஆம் ஆண்டு பிறந்த நாள். வழக்கம் போல் இந்நாளில் பெரியார் திடலுக்கு வருகை தந்து தமிழர் தலைவரைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றார்.

இதில் சற்றும் எதிர்பாரா விதமாக இயக்கத்திற்கும், விடுதலைக்கும் நான் ஆற்றி வருவதாகக் கூறி தொண்டினைப் பாராட்டும் வகையிலும் உற்சாகப்படுத்தும் தன்மையிலும் ரூபாய் ஒரு லட்சத்தை கழகத் தலைவர் மூலம் எனக்கு வழங்கினார். சற்றும் எதிர்பாராத நான் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானேன். அந்த இடத்திலேயே சற்றும் தாமதியாமல் கழகத் தலைவரிடம் கழகத்திற்காகத் திருப்பி அளித்தேன்.

நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் பிறகு பார்க்கலாம்! என்று தடுத்துவிட்டார் நமது அன்புக்குரிய தலைவர்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் பாராட் டைக் கண்டு பயப்படக் கூடியவன் நான். இந்த இயக்கத்தில் பாராட்டுப் பெற்றவர்களின் கதையை ஓரளவுக்கு அறிந்து வைத்திருக்கக் கூடியவன். தந்தை பெரியார் கொள்கைகள் திராவிடர் கழகத்தின் மூலம் நமது தமிழர் தலைவர் அவர்களின் மூலமாகவேதான் கொண்டு செலுத்தப்பட  முடியும் - வெற்றி பெற முடியும் என்பதில் மிகத் தெளிவாக - திட்டவட்டமாக - செறிவாக உறுதியுடன் நிலை கொண்டவன் கூட!

இன வரலாற்றின் மிக உயர்ந்த இந்தப் பகுத்தறிவுப் பயணத்தில் சிறிதளவாவது எனது பங்களிப்பு கிடைத் திருக்குமானால்,  அங்கீகாரமும் கிடைக்குமேயானால் இதை விட பெரிய சன்மானம் எதுவாக இருக்க முடியும்?

உலக வரலாற்றில் எந்த இதழுக்கும், ஏட்டுக்கும் ஒருவர் 50 ஆண்டு காலம் ஆசிரியராக இருந்தவர் கிடையாது.

நமது ஆசிரியர் அவர்கள், தந்தை பெரியாரின் சமூகப் புரட்சிப் போர் வாளாகிய விடுதலை ஆசிரியராக 50ஆம் ஆண்டில் (1962-2012) அடி எடுத்து வைக்கும் கால கட்டத்தில் விடுதலைக்கு 50 ஆயிரம் சந்தாக்கள் அளிப்பது என்ற தீர்மானத்தை திருச்சி பொதுக் குழுவில் முன்மொழிந்தேன். (11.9.2011)

இந்தப் பணியில் வேறு எந்தக் காலக் கட்டத்திலும் நமது தோழர்கள் காட்டி வந்ததைவிட பேரார்வத்தை காட்டி முனைப்புடன்  செயல்பட்டு வருவது மகிழ்ச்சிக்குரிய பெரிய நற்செய்தியாகும்.

மிகப் பேரன்பு கொண்டு பெரியார் பெருந்தொண்டர் செய்யாறு மானமிகு பா. அருணாசலம் அவர்கள் எனக்கு அளித்த ரூபாய் ஒரு லட்சத்தை விடுதலை சந்தாவுக்காக அர்ப்பணிக்கிறேன் என்பதை மிக்க மகிழ்ச்சியுடனும், நெகிழ்ச்சியுடனும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு சிறப்பு, திறன், விளம்பரம், அறிமுகம், அங்கீ காரம் என்று ஏதாவது இருக்குமானால் இவற்றிற்கெல்லாம் முழுப் பொறுப்பும், உரிமையும் உடையவர் நமது தலைவர் ஆசிரியர் அவர்கள்தாம்! அவர்களுக்கு இதனை ஒப்படைக்கிறேன். நெருக்கடி நிலை காலத்தில் என்னை எழுத உத்தரவு பிறப்பித்தவர் அன்னை மணியம்மையார்.

இயக்கத்திற்கு என்னை ஆற்றுப்படுத்தியவர் மயிலாடு துறை அண்ணன் மானமிகு கோ. அரங்கசாமி அவர்கள்.

அய்யா, அம்மா, ஆசிரியர் இம்மூவருக்கும் கீழ் பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததைவிட வேறு பெருமை -மிகச்  சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு உண்டோ!

என்மீது அன்பு செலுத்தி, நன்கொடை அளித்து ஊக்கப்படுத்திய அய்யா அருணாசலம் அவர்களுக்கும், அவர் மகன் இளங்கோவன் அவர்களுக்கும் எனக்கு அளிக்கப்பட்ட நன்கொடையை என் விருப்பத்துக்கே விட்ட (விடுதலை சந்தாக்களுக்காக) எனது தலைவர், எமது தலைவர், தமிழர் தலைவர் அவர்களுக்கும் நன்றி! நன்றி!!

அய்யா அருணாசலம் அவர்கள் நூறாண்டுகள் வாழ்க! வாழ்கவே!!
- கலி. பூங்குன்றன்
பொதுச் செயலாளர்
திராவிடர் கழகம்

(குறிப்பு: என்னைப்பற்றி முதன் முதலாக நான் எழுத வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன் - மன்னிக்கவும்)


.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

உங்கள் கருத்துக்கள்




1000 எழுத்துகள் மீதமுள்ளன


Security code
Refresh




முந்தைய இதழ்கள் 

< நவம்பர் 2011 >
தி செ பு வி வெ சன ஞா
  1 2 3 4 5 6
7 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30        
Banner

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...