Tuesday, November 8, 2011

அண்ணா தி.மு.க. ஆட்சியில் அய்யா, அண்ணா படங்கள் குப்பையிலே! பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!


பூவிருந்தவல்லி, நவ.8-ராமாபுரம் மண்டல பகுதி அலுவலகத்தில் இருந்த தேசிய தலைவர்களின் படங்கள் அகற்றப்பட்டதை கண்டித்து பொது மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தலைவர்களின் படங்கள்

திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ராமாபுரம் ஊராட்சி 154, 155 என 2 வார்டுகளாக பிரிக்கப்பட்டு சென்னை மாநகராட்சியோடு இணைக்கப்பட்டது. இதில் 155 ஆவது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சேகர் மற்றும் 154ஆவது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ரஞ்சனிராஜேந்திரன் ஆகியோர் வார்டு கவுன்சிலர்களாக வெற்றி பெற்றனர்.

இந்த நிலையில் ராமாபுரம் ஊராட்சி அலுவலகம் தற்போது சென்னை மாநகராட்சி மண்டல பகுதி அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. இதில் அலுவலக கூட்டம் நடைபெறும் அறையில் பெரியார், காந்தி, அம்பேத்கர், திருவள்ளுவர், அண்ணா, காமராசர் உள்ளிட்ட தலைவர்களின் படங்கள் மற்றும் இதற்கு முன்பு ராமாபுரம் ஊராட்சி மன்ற தலைவர்களாக பதவி வகித்தவர்களின் படங்கள் மாட்டி வைக்கப்பட்டிருந்தன.

நேற்று திடீரென அறையில் இருந்த படங்கள் அகற்றப்பட்டு முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் படமும், 155ஆவது வார்டில் வெற்றி பெற்ற சேகரின் படமும் மட்டுமே வைக்கப் பட்டிருந்தது. தலைவர்களின் படங்கள், அலுவலகத்தில் பழைய பொருட்களை போட்டு வைக்கும் அறையில் கிடந்தன. இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த தகவல் அந்த பகுதி மக்களிடையே காட்டுத்தீ போல் பரவியதை அடுத்து ஏராளமான பொதுமக்கள் அலுவலகத்தின் முன்பு குவிந்தனர். இந்த செயலை கண்டித்து அலுவல கத்தை இழுத்து மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். வார்டு கவுன்சிலர் சேகரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினார்கள்.

இது குறித்து வளசரவாக்கம் காவல்  நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஆய்வாளர் சரவணபிரபு, துணை ஆய்வாளர் கணேஷ் தலைமையில் காவல் துறை யினர் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மாநகராட்சி மண்டல அதிகாரிகள் சுசீந்திரநாத், கணேஷ் ஆகியோர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அறையில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள் மீண்டும் அதே இடங்களில் வைக்கப்படும்.

இது குறித்து நட வடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி யளித்ததை அடுத்து பொதுமக்கள் அலுவலகத்தை திறந்து விட்டு கலைந்து சென்றனர்.

அண்ணா நூலகம் இடமாற்றம் - அண்ணா படம் குப்பையிலே அ.தி.மு.க. ஆட்சி கவனம் செலுத்துமா?


.
 

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

உங்கள் கருத்துக்கள்




1000 எழுத்துகள் மீதமுள்ளன


Security code
Refresh




முந்தைய இதழ்கள் 

< நவம்பர் 2011 >
தி செ பு வி வெ சன ஞா
  1 2 3 4 5 6
7 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30        
Banner

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...