Monday, November 21, 2011

ராஜாஜியின் அறிக்கையும் நாவலரின் பதிலடியும்


வி.பி. இராமனும் நாவலரின் நண்பர் பார்ப்பன எதிர்ப்பு பின்னர் கைவிடப்பட்டது என்றெல்லாம் அனிச்சம் பூவெடுத்து ஒத்தடம் கொடுத்து எழுதுகிறதே துக்ளக்

அந்தக் கால கட்டத்திற்குப் பிறகு 1971இல் நாவலர் இரா. நெடுஞ்செழியன் என்ன பேசினார்? (18.4.1971 அன்று சென்னையில் பேசிய உரையிலிருந்து ஒரு பகுதி இதோ)

நான் அப்போதே சொன்னேன் தேர்தல் முடிந்துவிடும்; நீங்கள் துவக்கிய உணர்ச்சி மறையாது என்று. இன்று பார்க்கிறோம்; தேர்தல் முடிந்ததும் அது அடங்கியதா?

நெடுஞ்செழியனுக்குத் தோல்வி என்றவுடன் பார்த்தசாரதி கோவில் பக்கம் வெடிகள் போட்டு மகிழ்ச்சியைக் கொண்டாடினார்களே, தித்திப்பு வழங்கினார்களே, அதற்கு என்ன அடையாளம்? அதன் பின்னால் இருந்தவர் யார்?

ஒரு சில இடங்களில் இந்த உணர்ச்சி பயன்பட்டாலும் மொத் தத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட உங்கள் தோல்வியைக் குறித்து உணர்ந் தீர்களா? கிளப்பி விடுவது சுலபம். ஆனால் இன்று கொழுந்து விட்டெரிகிறது!

ஒவ்வொரு செய்கைக்கும் ஒவ் வொரு உணர்ச்சிக்கும் பொருள் என்ன? எல்லாம் சேர்ந்த ஒரு இனம் தி.மு.க. ஆட்சிக்கு வருவதை அடி யோடு அழிக்க  தடுக்க விரும்புகிறது என்பதுதானே?

டெஸ்ட் பண்ணினீர்களே என்ன ஆயிற்று? மூட்டிவிட்ட தீ இன்று எங்கே போய் நின்று இருக்கிறது?

நாங்கள் வெற்றி பெற்றால் தர்மம் தோற்றுவிட்டது. நீங்கள் வெற்றி பெற்றால் தர்மம் வென்றது என்றாரே அது நேர்மையா?

தேர்தல் முடிந்தபிறகு இன்னமும் ராஜாஜி விஷத்தைக் கக்குகிறாரே கல்கித் தலையங்கத்தை நண்பர் வீரமணி படித்துக் காட்டிப் பேசினாரே எனக்கு முன்பு!

மதம், சம்பிரதாயக் கட்டுப்பாடுகள் தெய்வ பக்தி இவற்றின் முழு எதிரி என்று தம்மை முழு மூச்சுடன் பகிரங் கப்படுத்திக் கொள்பவரின் திருமுன் னரே அவரது ஆசியும் அனுக்கிரகமும் பெற்றுப்பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருக்கிறது தமிழக மந்திரிசபை என்று எழுதுகிறார் ராஜாஜி. அவைகள் இல்லாத தந்தை பெரியாரோ 93 வயது வாழுகிறார்! தினம் தினம் சுற்றிப் பிரச்சாரம் செய்கிறாரே!

ஆஸ்திகர்களோ, ராஜாஜியோ இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்? அவர் மேலும் எழுதினார்:

இனித் தமிழகம் ஆஸ்திகர்கள் வாழத் தகுதி இழந்து விட்டது; இந்த ராஜ்யத்தைவிட்டே வெளியேறி விட வேண்டும் என்று சிலமகா புருஷர்கள் உட்பட பலர் எண்ணத் தொடங்கி விட்டார்கள் என்று எழுதுகிறாரே!

நண்பர் வீரமணி கேட்டது மாதிரி எப்போது புறப்படப் போகிறீர்கள்? அது எப்போது எங்கே புறப்படப் போகிறீர்கள்?

அமைதி தவழும் மேற்கு வங்காளத்திற்கா? ஸ்திரமான அரசியல் நடக்கும் கேரளத்திற்கா? ஆந்திரத்திற்கா? இந்து, முஸ்லீம் ஒற்றுமை பொங்கும் மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கா? எங்கே போகப் போகிறீர்கள்? நீங்கள் இப்படி எழுதினால் மற்றவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்க மாட்டார்களா?

யார் யார் அந்த மகா புருஷர்கள் பட்டியலிலே இருக்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரிய வேண்டாமா? சங்கராச்சாரியாரும், ராஜாஜியும் அந்தப் பட்டியலில் உண்டா?

எங்களுடன் சேர்ந்து வாழ்வது என்றால் அவ்வளவு அருவருப்பு ஏன்? எங்களோடு சேர்ந்து வாழ முடியாது என்ற அளவுக்கு அவ்வளவு பெரிய ஆபத்து என்ன ஏற்பட்டது? ஏன் நீங்கள் இவ்வளவு இழிந்த நிலைக்குப் போனீர் கள்? இதற்கு முழுப் பொறுப்பையும் ராஜாஜிதானே ஏற்று ஆக வேண்டும்? ராஜாஜி, அவர் குரலை ஒலித்த பத்திரிகை, அவரது கட்டளையை - வேதவாக்காக ஏற்றுக் கொண்டு நடந்த அவரது இனத்தவர்களான பிரா மணர்கள் இது பற்றிச் சிந்திக்க வேண்டாமா?

ஜாதி அடிப்படையிலே மனிதனை அவனது செயல்களை எடை போடக் கூடாது என்பது எங்கள் கொள்கை, நீங்கள் அதை ஒப்புக் கொள்ளவில்லை. மாறாக அதனை இப்படிக் கிளப்பிவிட்டு எங்களைத் தோற்கடித்து விடலாம் என்று நினைத்தீர்கள், நாங்கள் தோற்றுவிட்டோம் என்றால் எங்க ளுக்கு என்ன நட்டம்! இந்தக் கொள்கை மடிந்து போகுமா? நாங்கள் மூலையில் போய் முக்காடு போட்டுக் கொள் ளுவோமா? என்று நாவலர் பேசினாரே!

நாவலரின் இந்த உரைக்கு என்ன பதில்? பார்ப்பன உணர்வோடு பார்ப்பனர்கள் நடந்து கொள்வதை மறைத்துவிட்டு, அதனை எதிர்த்துப் பதிலடி கொடுக்கும் போது பதறுவது ஏன் பார்ப்பனரே என்பது தான் எங்கள் கேள்வி.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...