Sunday, November 20, 2011

குஜராத் படுகொலை இப்பொழுதுதான் தொடக்கம்!


2002 பிப்ரவரியில் குஜராத் மாநிலம் கோத்ராவில் ரயில் பெட்டி எரிக்கப்பட்டதில் 59 கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சிறுபான்மை மக்களான முஸ்லீம்களுக்கு எதிராக அரச பயங்கரவாதம் எனும் தலைமையில் ஆயிரக்கணக்கில் வேட் டையாடப்பட்டனர்; கொன்று குவிக்கப்பட்டனர். சிறுபான்மை மக்களின் வீடுகளும், வணிக நிறுவனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன - இடித்துத் தரைமட்டமாகவும் ஆக்கப்பட்டன.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார்கள் கொடுக்கப்பட்டும் அவை குப்பைக் கூடையில் வீசி எறியப்பட்டன.

உச்சநீதிமன்றமே இந்தப் போக்கைக் கண்டித்துள்ளது. குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடியை நீரோ மன்னனுக்கு ஒப்பிட்டுக் கூறியது.

14 வழக்குகளை மறு விசாரணைக்கு உட் படுத்திய உச்சநீதிமன்ற அமர்வு (25.3.2008). 5 பேர் கொண்ட விசாரணைக் குழுவையும் நியமித்தது. இந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவில் (ளு.ஐ.கூ) குஜராத்தைச் சேர்ந்த மூன்று அய்.பி.எஸ். அதிகாரிகள் கீதா ஜொஹ்ரி, சிவானந்த் மற்றும் ஆஷிஸ் பாட்டியா ஆகியோர் இடம் பெற்றனர். மேலும் ஓய்வு பெற்ற சி.பி.அய். இயக்குநர் ஆர்.கே. இராகவன், உ.பி.யைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி சி.பி. சாத்பதி ஆகியோரும் இடம் பெற்றனர்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அர்ஜித் பசாயத், பி. சதாசிவம், ஆஃப்தாப் ஆலம் ஆகிய நீதிபதிகளைக் கொண்ட அமர்வு இந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்தது.

ஸர்தார் புரா என்னும் ஊரில் புகுந்து சங்பரிவார் வெறிக் கும்பல் துவம்சம் செய்தது. முஸ்லிம் மக்களின் வீடுகளுக்கு தீ வைத் தனர். கூட்டுப் படுகொலைகளைச் செய்தனர். சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்பட்டன.

வீடுகளைப் பூட்டி தீ வைத்து கும்பல் கும்ப லாக முஸ்லீம் குடும்பங்கள் எரிக்கப்பட்டன.

22 பெண்கள், எட்டு மாத சிசு உள்பட 33 முஸ்லீம்கள் உயிரோடு கொளுத்தப்பட்ட கொடுமையை என்ன சொல்ல! இந்த வழக்கில் 76 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையின்போதே இருவர் இறந்து விட்டனர். ஒருவர் சிறுவர் என்பதால் அவர் மீதான வழக்குச் சிறார் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

மீதமுள்ள 73 பேர் மீதான வழக்கு 2009 ஜூலை முதல் நடத்தப்பட்டது. மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.சி. சிறீவஸ்தவா இந்த வழக்கில் 31 சங்பரிவார் வெறியர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கினார்.

கூட்டுப் படுகொலையில் பலியான குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி ஆணை பிறப்பித்தார்.

இந்தத் தண்டனை போதுமானதல்ல என்று கருத்து நிலவினாலும், குஜராத் கொலைக்குக் காரணமானவர்கள் இப்பொழுதுதான் சட்டத்தின் வலைக்குள் சிக்கித் தண்டனை பெற ஆரம்பித்துள்ளனர். அடுத்தடுத்து இது தொடரக் கூடும்.

இறுதியில் இதற்கெல்லாம் மூல காரண மான முதல் அமைச்சர் நரேந்திரமோடியும் தண்டிக்கப்பட்டால்தான் இந்தியாவில் நீதிக்கு மரியாதை இருக்கிறது என்கிற நிலைப்பாடு உறுதிப்படுத்தப்படும். குஜராத் படுகொலையே இந்தியாவின் இறுதியானதாக இருக்கட்டும் இருக்க வேண்டும்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...