விடுதலை சந்தா இயக்கம் பிரபல நாவலாசிரியர் பொன்னீலன் வாழ்த்துகிறார்
பேரன்புடையீர்,வணக்கம். நாத்திகம் 27.10.2011 இதழ் முதல் பக்கத்தில், அட நாத்திகர்களே! என்னும் தலைப்பில், சபரிமலையில் நடப்பதாக குறிப்பிடப்பட்ட செய்தியைப் படித்தேன். தென்னகச் சமூகங்களின் பரிதாப நிலை கண்டு வருத்தம் ஏற்படுகிறது.தமிழ்ச் சமூகம் அறிவு, அறம், உழைப்பு இவற்றை அடிப்படையாகக் கொண்டது. வைதீகம் அதற்கு நேர் எதிரானது. நம்பிக்கைகள், சடங்குகளின் ஆதிக்கங்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்டது.ஆழ்ந்து கவனித்தோமானால், இந்திய சமுதாயத்தின் வரலாறு என்பதே அறிவு, உழைப்பு, அறம் ஆகியவற்றின் மீது நம்பிக்கை சடங்கு ஆதிக்கம் ஆகியவை படிப்படியாகக் கொண்ட வெற்றிகளின் வரலாறு என்பதை உணர முடியும். நம்முடைய மொத்த வீழ்ச்சியே, அறிவு, உழைப்பு, அறம் ஆகியவற்றின் வீழ்ச்சிதான்.நம்பிக்கைகளும், சடங்குகளும், ஆதிக்கமும் வலுப்பெற்று வருவதின் அடையாளமே அய்யப்பன் கோயிலிலும். வாழ்வைப் பாதுகாப்பதற்கு மருத்துவம் தேவைப்படுவதை நேரில் கண்ட பிறகும், அய்யப்பனின் ஆற்றலால் எதுவும் மக்களுக்குச் செய்ய முடியவில்லை என நேரடியாகப் பார்த்த பிறகும், மக்கள் மூட நம்பிக்கைகளில் மூழ்கி, அய்யப்பன் சன்னிதானத்துக்கு அலைவது அதிசயம்தான். ஆனால், அதுதான் இன்றைய நடைமுறை!மூட நம்பிக்கைகளுக்கும், சடங்குகளுக்கும், ஆதிக்கத்துக்கும் எதிரான போராட்டம் மிகக் கடினமானது. இன்னும் இன்னும் விரிவுபடுத்தவேண்டியது. புதிய புதிய அணிகளுக்கிடையே செய்திகள் பரவவேண்டும். விடுதலை இந்தப் பணியை மேலும் விரிவாகச் செய்ய முயற்சிக்கிறது. விடுதலை சந்தா இயக்கம் இதற்கு முதல் வாசலைத் திறக்கிறது. என் அன்பான நல்வாழ்த்துகள்.
அன்புடன்,- பொன்னீலன்
(சாகித்ய அகாடெமி விருது பெற்ற நாவலாசிரியர்)
ஏத்தாமொழி (குமரி மாவட்டம்)
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:- விடுதலை மலரும், சந்தாக்களும்!
- ஆசிரியருக்குக் கடிதம்
- கல்விப் பிரச்சினை
- வெளிநாட்டுத் தமிழர்களும் விடுதலை இதழும்
- புதிய வெளிச்சங்கள் இப்படி நட அப்படி நடக்காதே!
அண்மைச் செயல்பாடுகள்
விடுதலை சந்தா இயக்கம் பிரபல நாவலாசிரியர் பொன்னீலன் வாழ்த்துகிறார்
பேரன்புடையீர்,
வணக்கம். நாத்திகம் 27.10.2011 இதழ் முதல் பக்கத்தில், அட நாத்திகர்களே! என்னும் தலைப்பில், சபரிமலையில் நடப்பதாக குறிப்பிடப்பட்ட செய்தியைப் படித்தேன். தென்னகச் சமூகங்களின் பரிதாப நிலை கண்டு வருத்தம் ஏற்படுகிறது.
தமிழ்ச் சமூகம் அறிவு, அறம், உழைப்பு இவற்றை அடிப்படையாகக் கொண்டது. வைதீகம் அதற்கு நேர் எதிரானது. நம்பிக்கைகள், சடங்குகளின் ஆதிக்கங்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்டது.
ஆழ்ந்து கவனித்தோமானால், இந்திய சமுதாயத்தின் வரலாறு என்பதே அறிவு, உழைப்பு, அறம் ஆகியவற்றின் மீது நம்பிக்கை சடங்கு ஆதிக்கம் ஆகியவை படிப்படியாகக் கொண்ட வெற்றிகளின் வரலாறு என்பதை உணர முடியும். நம்முடைய மொத்த வீழ்ச்சியே, அறிவு, உழைப்பு, அறம் ஆகியவற்றின் வீழ்ச்சிதான்.
நம்பிக்கைகளும், சடங்குகளும், ஆதிக்கமும் வலுப்பெற்று வருவதின் அடையாளமே அய்யப்பன் கோயிலிலும். வாழ்வைப் பாதுகாப்பதற்கு மருத்துவம் தேவைப்படுவதை நேரில் கண்ட பிறகும், அய்யப்பனின் ஆற்றலால் எதுவும் மக்களுக்குச் செய்ய முடியவில்லை என நேரடியாகப் பார்த்த பிறகும், மக்கள் மூட நம்பிக்கைகளில் மூழ்கி, அய்யப்பன் சன்னிதானத்துக்கு அலைவது அதிசயம்தான். ஆனால், அதுதான் இன்றைய நடைமுறை!
மூட நம்பிக்கைகளுக்கும், சடங்குகளுக்கும், ஆதிக்கத்துக்கும் எதிரான போராட்டம் மிகக் கடினமானது. இன்னும் இன்னும் விரிவுபடுத்தவேண்டியது. புதிய புதிய அணிகளுக்கிடையே செய்திகள் பரவவேண்டும். விடுதலை இந்தப் பணியை மேலும் விரிவாகச் செய்ய முயற்சிக்கிறது. விடுதலை சந்தா இயக்கம் இதற்கு முதல் வாசலைத் திறக்கிறது. என் அன்பான நல்வாழ்த்துகள்.
அன்புடன்,
அன்புடன்,
- பொன்னீலன்
(சாகித்ய அகாடெமி விருது பெற்ற நாவலாசிரியர்)
ஏத்தாமொழி (குமரி மாவட்டம்)
(சாகித்ய அகாடெமி விருது பெற்ற நாவலாசிரியர்)
ஏத்தாமொழி (குமரி மாவட்டம்)
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- விடுதலை மலரும், சந்தாக்களும்!
- ஆசிரியருக்குக் கடிதம்
- கல்விப் பிரச்சினை
- வெளிநாட்டுத் தமிழர்களும் விடுதலை இதழும்
- புதிய வெளிச்சங்கள் இப்படி நட அப்படி நடக்காதே!
No comments:
Post a Comment