Sunday, November 13, 2011

இடிமின்னல் அல்லது சூரியனைச் சுற்றி வரும் சிறு கோள் - இவற்றில் எதனால் கொல்லப்படும் ஆபத்து அதிகமாக உள்ளது?



முட்டாள்தனமாகத் தோன்றினாலும்,  சூரியனைச் சுற்றி வரும் சிறுகோளினால் உயிரிழக்கும் ஆபத்து, இடிமின்னல் தாக்கும் ஆபத்தைப் போல் இருமடங்காக இருக்கிறது.
சூரியனைச் சுற்றி வரும் சிறிய கோள்கள் இப்போது  பூமிக்கு அருகில் உள்ள பொருள் கள் (Near Earth Object -NEO)  என்று அழைக்கப்படுகின்றன. 10 லட்சம் ஆண்டு களுக்கு ஒரு முறை இது பூமியைத் தாக்கு கிறது. புள்ளிவிவரக் கணக்கின்படி இத்தகைய தாக்குதல் எப்போது வேண்டு மானாலும் நடக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆபத்து நிறைந்த ஒரு NEO 2 கி.மீ. (1.2 மைல்)க்கும் அதிகப்படியான விட்டத் தைக் கொண்டது. இதன் தாக்குதலால் ஏற்படும் அதிர்ச்சி பத்துலட்சம் மெகாடன்  TNT அளவினதாக இருக்கும். அதனால் ஏற்படக் கூடிய உயிரிழப்பு 100 கோடிக்கு மேல் இருக்கக்கூடும். அதனால் எந்த ஓர் ஆண்டிலாவது அத்தகைய தாக்குதலில் நீங்கள் உயிரிழக்கும் வாய்ப்பு 60 லட்சத்தில் ஒன்று என்ற விகிதத்தில் உள்ளது.
இங்கிலாந்தில் இடிமின்னலால் எந்த ஓர் ஆண்டிலாவது உயிரிழக்கும் வாய்ப்பு ஒரு கோடியில் ஒன்று என்ற விகிதத்தில் உள்ளது. இந்த விகிதம் நச்சுப் பாம்புக் கடியினால் உயிரிழக்கும் வாய்ப்பு உள்ள அதே விகிதத்தில் இருப்பதாகும்.
10 கோடி மின்சார விளக்குகள் எரிந்து அணைவதன் ஒளிக்குச் சமமானது இடிமின்னல் என்னும் ஒரு மாபெரும் மின்சாரப் பொறியாகும். சில பொறிகள் (மின்வெட்டுகள்) 1,00,000 ஆம்பியர் 20 கோடி வோல்ட் மின்சாரம் என்னும் உச்ச அளவை எட்டி, 30,000C வெப்பத்தை ஏற்படுத்துகின்றன. இது சூரியனின் மேற்பரப்பில் நிலவுவதை விட அய்ந்து மடங்கு அதிக வெப்பநிலையாகும். இத்தகைய மின்னல் வினாடிக்கு10 கோடி அடி வேகத்தில்  அல்லது மணிக்கு 1.15 கோடி கி.மீ. வேகத்தில் பாயக் கூடியது.
ஒவ்வொரு மின்னலும் உண்மையில், ஒவ்வொன்றும் வினாடியில் 10 லட்சத்தில் ஒரு பங்குக்கும் குறைவான நேரம் மட்டுமே நீடிக்கும்  பல பொறிகளைக் கொண்டது. இவ்வாறு அவற்றின் செயல்படு நேரம் மிகமிகக் குறைவாக இருப்பதால், மின்னலின் ஆற்றல் மதிப்பும் மிகமிகக் குறைவானதேயாகும். ஒரு பொறியினால் ஒரு வீட்டு ஒரு நாள் உபயோகத்திற்கான மின்சாரத்தை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். இத்தகைய மின்னல்கள் பூமியை ஒவ்வொரு நாளும் 80 லட்சம் முறை அல்லது ஒரு வினாடிக்கு 50 முறை தாக்குகின்றன.
கடற்கரை ஓரங்களில் இத்தகைய தாக்குதல்கள் சர்வ சாதாரணமாக ஏற்படக்கூடியவையாகும். ஆண்டு ஒன்றுக்கு   சதுர கி.மீ. பரப்பில் இரண்டு என்ற விகிதத்தில் இவை இருக்கும். அதிகப்படியான அழிவுகளை அது ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. இவற்றால் தூண்டப் படும் மின்சாரம் விரைவில் கடல் பரப்பில் மறைந்து போகிறது. கடுமையான மின்னலுடன் கூடிய வேகமான புயல்கள் வீசும்போது, திமிங்கிலங்கள் மகிழ்ச்சியுடன் பாடிக் கொண்டிருப்பது காணப்பட்டது.
ஆனால் மனிதர்கள் மின்னலால் அதிக அளவில் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். வாய்ப்பு விதிகளின்படி அவர்கள் உட்படவேண்டிய தாக்குதலைப் போன்று பத்து மடங்கு அதிகமான தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.
பெண்களை விட ஆண்கள், ஆறு மடங்கு அதிகமாக மின்னலால் தாக்கப்படுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும், மூன்றில் இருந்து ஆறு இங்கிலாந்து நாட்டினரும்,  100 அமெரிக்கர்களும் கொல்லப்படுகின்றனர். மின்சாரத்தை எளிதாகக் கடத்தும் கோல்ஃப் உலோகக் கம்புகள், கரிம இழையினால் தயாரிக்கப் பட்ட மீன்பிடிக்கும் தூண்டில்கள், வயர்களால் பின்னப்பட்ட மார்புக் கச்சைகள் ஆகியவை அவர்களது உடலுடன் தொடர்பு கொண்டிருப்பதே இதன் காரணம்.

ஒரு வெட்ட வெளியில் இடிமின்னலுடன் கூடிய புயலில் சிக்கிக் கொள்ளும்போது,   மரங்கள் இருக்கும் இடத்தை விட்டு விலகி வெகு தொலைவில், தரையில் கவிழ்ந்து  படுத்திருப்பதே பாதுகாப்பானதாகும்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’  ‘  பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...