உலகில் அதிகமாக உள்ள சாதாரணமான பொருள் என்ன?
தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
உலகில் அதிகமாக உள்ள சாதாரணமான பொருள் என்ன?
உலகில் அதிகமாக உள்ள சாதாரணமான பொருள் என்ன?
உயிர்க்காற்று, கரியமில வாயு, நைட்ரஜன் வாயு, தண்ணீர் என்று நீங்கள் நினைத்திருந்தால் அது தவறு.
மக்னீசிஷியம், சிலிக்கான் மற்றும் உயிர்க்காற்று ஆகியவற்றின் கலவையான, பெரோவ்ஸ்கைட் என்ற கனிமம்தான் உலகில் அதிக அளவில் உள்ள பொருள்களில் பாதி அளவு இருக்கிறது. உலக உருண்டையின் பெரும் பகுதி இதனால் உருவானதே. இவ்வாறு கூறினாலும், அதனை மெய்ப்பிக்க அதன் மாதிரியை விஞ்ஞானிகள் எவரும் இதுவரை எடுத்தது இல்லை.
1839 இல் ரஷ்ய கனிமஇயலாளர் பிரபு லெவ் பெரோவ்ஸ்கியின் பெயரிடப்பட்ட இந்த கனிமம் ஒரு கனிமக் குடும்பத்தைச் சேர்ந்தது. சாதாரண வெப்ப நிலையில் மின்சாரத்தை எந்தவிதத் தடையுமின்றி எளிதில் கடத்த இயன்ற மிகச் சிறந்த மின்கடத்தி இந்த கனிமம் என்பதை அவர்கள் மெய்ப்பிக்கக்கூடும்.
அவ்வாறு நேர்ந்தால், மிதக்கும் ரயில்கள் மற்றும் கற்பனை செய்தும் பார்க்க இயலாத வேகத்தில் இயங்கும் கணினிகள் கொண்ட உலகமாகவே உண்மையிலே இது ஆகிவிடும். தற்போதுள்ள மிகச்சிறந்த மின்கடத்திகள் உபயோகமற்ற முறையில் மிகக் குறைந்த வெப்ப நிலையில் செயலாற்றுபவையே ஆகும். இதுவரை பதிவான மிக அதிக வெப்பநிலையே -135டி ஊ ஆகும்.
பெரோவ்ஸ்கைட் மட்டுமன்றி, பூமியின் அடர்த்தி மெக்னீஷிய-ஆக்சைட்டாலும் ஆனது என்றும் கருதப்படுகிறது. இது மெடோரைட்டுகளில் காணப்படும் ஒரு மக்னீஷிய ஆக்சைடாகும். பூமியின் அடர்த்தி அதன் மேல்பரப்புக்கும், மய்யத்திற்கும் இடையில் உட்கார்ந்திருப்பதாகும். அது திடப் பொருள்தான் என்று பொதுவாக ஊகிக்கப்பட்டாலும், உண்மையில் அது மிக மெதுவாக நகரும் திரவம் என்று சில விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இவைகள் எதனைப் பற்றியும் எவ்வாறு நம்மால் அறிய முடிகிறது? எரிமலைகளால் வெளியே தூக்கி எறியப்படும் கற்களும் பூமியின் மேல்அடுக்கு, அதாவது முதல் 200 கி.மீ. (125 மைல்) ஆழத்தில் இருந்து வருபவைதான். பூமியின் கீழ் அடுக்கு ஆரம்பிப்பதே பூமியின் மேற்பரப்பில் இருந்து 660 கி.மீ. (400 மைல்) ஆழத்தில் இருந்துதான். நில அதிர்வு அலைகளை பூமியின் அடிக்கு செலுத்தி, அவை எதிர்கொள்ளும் தடைகளைப் பதிவு செய்வதற் மூலம் பூமியின் உட்புறத்தின் அடர்த்தி மற்றும் வெப்பநிலையை மதிப்பிடலாம்.
கனிமங்களின் கட்டமைப்பு பற்றி நாம் ஏற்கெனவே அறிந்திருப்பவைகளுடன் இதனை ஒப்பிட்டுப் பார்க்கலாம். அக்கனிமங்களின் மாதிரிகளை பூமியின் கடினமான மேற்பகுதியிலிருந்தும், விண்கற்களிலிருந்தும் நாம் பெற்றிருக்கிறோம். மிக உயர்ந்த அளவு வெப்பநிலையை அடையும்போதும், மிக அதிக அழுத்தம் கொடுக்கப்படும் போதும், இந்த கனிமங்களுக்கு என்ன நேர்கின்றன என்பதையும் அறியக் கூடும். ஆனால், அனைத்து அறிவியல் துறைகளிலும் இருப்பது போலவே, உண்மையில் இதுவும் ஒரு அறிவார்ந்த, சிறந்த ஊகமாக மட்டுமே இருப்பதாகும்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)
No comments:
Post a Comment