Tuesday, November 1, 2011

பெரியார் சொன்ன குட்டிக்கதை


ஒரு சிறு கதையை உங்களுக்குக் கூறுகின்றேன். ஒரு எஜமான் குதிரைமேல் போனான். ஆள் ஒருவன் பாதுகாப்புக்குப் பின்னே போனான். குதிரைமீது உள்ள மூட்டை ஒன்று விழுந்துவிட்டது; அது எஜமானனுக்குத் தெரியாது. ஆனால் வேலையாள் பார்த்தும் எடுக்காமல் வந்துவிட்டான்.

எஜமான் கேட்டான் எங்கே மூட்டை என்று, எஜமான் மூட்டை அங்கேயே விழுந்துவிட்டதே என்றான். அட மடையா ஏண்டா விட்டுவிட்டு வந்தாய்? ஏன் எடுத்து வரவில்லை? என்றான் எஜமான். நீங்கள்தான் எடுத்து வரும்படி சொல்லவில்லையே என்று வேலையாள் சொன்னான். மடையா இனி எது விழுந்தாலும் எடுத்து வா என்றான். வேலையாளும் சரி ஆகட்டுங்க என்றான்.

மற்றொரு தடவை எஜமான் குதிரையில் போகும்போது குதிரை லத்தி போட்டது. உடனே வேலையாள் அவைகளையெல்லாம் வேட்டியில் மூட்டை கட்டிக் கொண்டு போய் எஜமான்! கீழே விழுந்த இவைகளை எல்லாம் கொண்டு வந்து இருக்கின்றேன் என்றான்.
அதற்கு எஜமானன் ஏண்டா மடப் பயலே இப்படி இதையெல்லாம் கட்டிக் கொண்டு வந்து இருக்கின்றாய்? என்றான். அதற்கு அவன் ஏனுங்க எஜமான் நீங்கள் தானே விழுகின்ற எதையும் விடாமல் எடுத்துவாடா என்று கூறினீர்கள் என்றான்.

அதற்கு எஜமானன் மூட்டை விழுந்ததற்குச் சொன்னால் அதற்காக இப்படியா செய்வது போடா மடையா என்று கூறினான்.

அவன் என்ன பண்ணுவான் அவன் புத்தி அப்படி. அவன் புத்தி வளர்ச்சியடையும்படியான பக்குவம் அவனுக்கு அளிக்கப்படவில்லை.

அதுபோலத்தான் இன்று நமது சமுதாயத்தின் அறிவின் நிலையும் உள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...