Tuesday, November 1, 2011

கிரிக்கெட் திருவிழா!


தமிழ்நாட்டில் கிட்டிப்புள் என்னும் மறுவிளையாட்டுதான் கிரிக்கெட். கிரிக்கெட் விளையாட்டை ஆங்கிலேயர்கள்தான் பெரிதும் வளர்த்தனர். அதற்கு ஒரு முக்கியமான காரணமும் உண்டு, பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் அடங்கிய நாடுகளில் சுதந்திரப் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டபோது அதனை மழுங்கடிக்க இதனை ஒரு ஆயுதமாகப் பயன் படுத்தினர். அடிமை நாடுகளுடைய மக்களிடம் இதில் மிகுதியான ஆர்வத்தை ஏற்படுத்தி அவர்களை ஆடும்படி செய்தனர். இருபது ஓவர், ஒரு நாள்போட்டி என்பதெல்லாம் இப்போது உருவாக்கப்பட்டதுதான்.

அப்போது அய்ந்து நாட்கள் விளை யாடும் டெஸ்ட் மட்டுமே இருந்தது. உலகிலேயே அதிக நாட்களும், அதிக நேரமும் எடுத்துக் கொள்ளும் போட்டியாக இது இருந்தது. அடிமை நாடுகளின் இளைஞர்களிடம் இந்த விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத் துவதன் மூலம் சுதந்திரப் போராட்ட உணர்வுகளை மறக்கடிக்கலாம் என ஆஙகிலேயர்கள் கருதினர்.

உலகில் 200--க்கும் மேற்பட்ட நாடுகள் இருந்தபோதிலும் 15 நாடுகள் மட்டுமே கிரிக்கெட் விளையாடு கின்றன. அதிலும் இந்தியா, பாகிஸ் தான், பங்களாதேஷ், இலங்கை, ஆஸ் திரேலியா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்திய தீவுகள் என அனைத்து நாடுகளும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் அடிமை களாய் இருந்த நாடுகள்.

அய்ரோப்பிய நாடுகளில் உலகின் எந்த ஒரு நாட்டின் விளையாட் டையும் எளிதாகக் கற்றுக் கொண்டு அதில் முன்னணி வகிக்கின்றன. உதாரணமாக எமது தேசிய விளை யாட்டாகிய ஹாக்கியை அவர்கள் கற்றுக் கொண்டு பல்லாண்டுகளாக இந்தியாவின் மணிமகுடமாக இருந்த வெற்றி விளையாட்டிற்கு இப்போது அவர்கள் தலைமை தாங்குகின்றனர். அதுபோலவே வல்லரசு நாடுகளாகிய அமெரிக்கா, ரஷ்யா போன்றவை ஒலிம்பிக்கில் பல விளையாட்டுகளில் தங்கப்பதக்கங்களை குவிக்கின்றன. ஆனால் ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற முன்னேறிய நாடுகளோ கிரிக்கெட் விளையாட்டின் பக்கம் தலை வைத்துப் படுப்பதில்லை. இதற்குக் காரணம் என்ன?

கடமை கண் போன்றது. காலம் பொன் போன்றது என்று சொல்லு வார்கள். முத்தமிழ்காவலர் கி-.ஆ.பெ. விசுவநாதம் அய்யா அவர்கள் இதனை மறுத்துரைப்பார், காலம் போன்றது அல்ல, அது உயிர்  போன்றது என்பார். பொன்னை இழந்தால் உழைப்பால் அதனைப் பெறமுடியும். ஆனால் காலத்தை நழுவ விட்டால் அது திரும்ப வரவே வராது அல்லவா! எந்த ஒரு முன்னேறும்  நாடும், நேர நிருவாகத் திற்கு அதிக முக்கியத்துவம் அளிப் பார்கள். நாட்டின் முக்கிய செல்வமாகிய இளைஞர்களின் நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். அதனால்தான் அந்த நாடுகளில் கிரிக்கெட்டிற்கு எவ்வித முக்கியத்துவமும் அளிப்பதில்லை. உலகில் 200-க்கு மேற்பட்ட நாடுகளில் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஏனெனில் அவ் விளையாட்டு முன்பாதி 45 நிமிடம் பின் பாதி 45 நிமிடத்தில் முடிவடைந்து விடுகிறது, ஒலிம்பிக்கிலும் கிரிக்கெட் டிற்கு இடம் அளிக்கப்படுவதில்லை. ஒருசமயம் எண்ணெய் வள நாடுகள் ஒன்றுகூடி நம்நாட்டு இளைஞர்கள் வலிமை மிக்கவர்கள், அதனால் அவர்களுக்கு கிரிக்கெட்டை கற்றுக் கொடுத்தால் உலகளவில் பிரபலமடை வார்கள் என்று ஆலோசனை நடந்தது. ஆனால் ஒபர்ஸ் எனப்படும் எண் ணெய் வள நாடுகளின் கூட்டமைப்பு இதற்கு ஆதரவு அளிக்கவில்லை. நம் தேசத்தில் எண்ணெய் வளம் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு உட் பட்டது.

இளைஞர்களே நாட்டின் நிரந்தர செல்வம். அவர்கள் தங்கள் நேரத்தை கடும் உழைப்பில் செலவிடவேண்டுமே தவிர, இம்மாதிரி பொழுதைப்போக்கும் விளையாட்டில் ஈடுபடுத்தலாகாது. வேண்டுமானால் விளையாடும் நாடுகளில் உள்ள வீரர்களை இங்கு விளையாடச் சொல்லிப் பார்த்துக் கொள்ளலாம். அதுதான் ஷார்ஜா கிரிக்கெட். ஆனால் அந்த நாட்டினர் விளையாட அனுமதி இல்லை. சில நாடுகள் தங்கள் நாட்டில் கிரிக்கெட்டிற்கு எவ்வித முக்கியத் துவமும் அளிக்காததுடன் மற்ற நாடு களில் விளையாடும் போட்டிகளையும் தங்கள் நாட்டுத் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்புவதில்லை.

இந்தியாவின் மக்கள் தொகை 120 கோடி. உலகிலேயே அதிக இளைய சமுதாயத்தைக் கொண்ட நாடு இந்தியா! அவர்களை கல்வியிலும் தொழிலிலும் ஈடுபடுத்தும் நாடு. வெகுவிரை-வில் முன்னேறி உலகின் தலைசிறந்த வல்லரசுகளில் ஒன்றாகத் திகழும். ஆனால் மத்திய- மாநில அரசுகளும் மக்கள் தொடர்பு சாத னங்களும் வேறு எந்த விளையாட்டிற் கும் இல்லாத முக்கியத்துவத்தை இந்த விளையாட்டுக்கு மட்டும் அளிப்பது எவ் விதத்திலும் நாட்டிற்கு உகந்தது இல்லை.

பெருமளவு பணம் புரளும் இந்த விளையாட்டில் ஊழலுக்கும் பஞ்ச மில்லை. மேட்ச் பிக்சிங் என்று முன் கூட்டியே சூதாட்டத்திற்கு ஏதுவாக விளையாட்டை அமைத்து மக்களை முட்டாள் ஆக்குகின்றனர்!

பணம் பெற்றுக்கொண்டு இவ்வாறு விளை யாடியது உண்மைதான் என தென் ஆப்பிரிக்கா முன்னாள் கேப்டன் பகிரங்கமாக ஒப்புக்கொண்டது அனைவரும் அறிந்ததே. இவ்வாறு ஆடியதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு வீரர்கள் பணம் பெற்றுக் கொண்டு போலியாக ஆடக்கூடாது என கடுமையாக எச்சரிக்கை செய்தது.

இந்தியாவின் பாரம்பரியமான ஹாக்கி விளையாட்டில் இந்தியா கொடிகட்டிபறந்தது-. மூன்றுமுறை ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்றுத் தந்தார் தயான் சந்த் என்ற இந்தியாவின் மாவீரர். இந்த கிரிக்கெட் போட்டியில் நன்றாக விளையாடிய டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என பலரும் பரிந்துரைக் கிறார்கள். முதலில் தாயான்சந்துக்கு அல்லவா அந்த விருதை அளிக்க வேண்டும். டெண்டுல்கரின் ஒருநாள் வருமானம் 1/2 கோடி என தெரிவிக் கப்படுகிறது. இதில் எவ்விதப் பெருமையும் இல்லை.

வசதி உள்ள அவர் தனது ஒவ்வொரு நாள் வருவா யிலும் 50 லட்சத்தை தான் வைத்துக் கொண்டு அல்லது 1 கோடியை கூட தான் வைத்துக் கொண்டு மீதியை ஏழைகளுக்கு கொடுக்கிறார் என்றால் அது வல்லவா பெருமை. இருப்பினும் அவரிடம் விளையாட்டுத் திறமையுடன் சிறந்த பண்பும் உண்டு. அவரது தந்தையாரின் அன்புக் கட்டளைப்படி மதுவினை தொடாது இருப்பதுடன் எவ்வளவு வருவாய் வந்தாலும் மது வுக்கான விளம்பரங்களில் நடிப்ப தில்லை என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறார். 

அகில இந்திய அளவில் பூரண மதுவிலக்கு பிரச்சாரம் செய் வதற்கு அவர் முற்றிலும் தகுதியானவர் ஆவார். மது ஒழிப்புப் பிரச்சார இந்திய தூதராக அவர் செயல்பட்டால் அந்த மனித நேயத்திற்காக அவருக்கு தாராளமாக பாரத ரத்னா விருது அளிக்கலாம்.

பாரத ரத்னா விருது பெற முற்றிலும் தகுதியான மற்றொரு விளையாட்டு வீரரும் இந்தியாவில் அதிலும் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த வர் என்பதில் நாம் மிகவும் பெருமைப்படலாம். உலகிலேயே அறிவுத்திறன் மிக்க விளையாட்டாக பல நூற்றாண்டுகளாக விளையாடப் பட்டு வருவது சதுரங்கம். இது இந்தி யாவில் மன்னர்களால் விளையாடப் பட்டு வெளிநாடுகளுக்குச் சென்றது என்றும் சொல்வார்கள்.

இத்தகைய சிறப்புமிக்க விளையாட்டில் அமெரிக்கா, அய்ரோப்பா, ரஷ்யா நாடுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. அந்த ஆதிக்கத்தை முற்றாக முறியடித்து உலக சாம்பியன் ஆனார் நமது திரு.விஸ்வ நாதன் ஆனந்த். அந்த பட்டத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண் டுள்ளார். அத்தகைய மாபெரும் விளை யாட்டு வீரருக்கு இந்தியப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் கொடுத்ததற்குக் கூட சில சிக்கல்கள் எழுந்தன.

கேரம் விளையாட்டில் உலகப் பட்டம் வென்றவரும் ஒரு தமிழச்சி தான். அந்த இளவழகிக்குப் பாராட்டு தெரிவிக்க அவரது வீட்டிற்குச் சென்றபோது குடிசை போன்ற சிறய வீட்டில் வசித்தது கண்டு பிரமித்துப் போனேன். அந்த அளவிற்கு ஏழ்மை யான குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். பேட்மிட்டனில் பிரகாஷ் படுகோனே, டென்னிசில் திரு.ரமேஷ் கிருஷ்ணன், திரு.விஜய் அமிர்தராஜ், திருமதி சானியா மிஸ்ரா, இரட்டையர் திரு மகேஷ்பூபதி, பயஸ் இவர்கள் எல்லாம் சர்வதேச அளவில் சாதனை படைத் துள்ளார்கள். பில்லியட்ஸ் போன்ற விளையாட்டிலும், ஓட்டப்பந்தயத்திலும் மில்காசிங், திருமதி பி.டி.உஷா ஆகி யோர் உலகம் கவர்ந்த விளையாட்டு வீரர்கள்.

கபடி எனப்படும் சடுகுடு விளை யாட்டில் இந்தியா தான் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. திறமையான பல விளையாட்டு வீரர்கள் வெளிநாட்டிற்குப் பயிற்சிக்குச் செல்லப் பணம் இல்லாமல் தவிக்கின்றனர். இவ்வளவு மக்கள் தொகை கொண்ட நமது இந்தியா ஒலிம்பிக்கில் ஒரு தங்கம் கூட வெல்ல முடியாததற்குக் காரணம், அரசும் தனியார் நிறுவனங்களும் திறமைமிக்க வீரர்களை ஊக்குவிக் காததுதான். கிரிக்கெட்டிற்கு செலவிடும் பணத்தில் ஒரு பங்கில் இம்மாதிரி விளையாட்டிற்குப் பயிற்சி அளித்தாலே இந்தியா ஒலிம்பிக்கில் பல தங்கங்களை வெல்லமுடியும்.

ஒரு சிறிய சம்பவம். அலுவலகத்தில் இருந்து எனது அறைக்கு அதற்குரிய வாடகை பேசி வந்தேன். கீழே இறங்கியதும் அந்த ஆட்டோ ஓட்டுநர் அன்பாக அய்யா மேலும் ஒரு 50 ருபாய் கொடுக்க முடியுமா என்று கேட்டார். ஏன் இப்படி கேட்கிறாய் என்ற போது அய்யா இன்று முழுவதும் நீங்கள் ஒருவர் தான் சவாரி. அத்துடன் நான் காலையிலேயே ஆட்டோ எடுத்து வந்துவிட்டேன். வரும்போது ஒரு கடையில் தொலைக்காட்சி கிரிக்கெட் விளையாட்டை ஒளிப்பரப்பிக் கொண்டு இருந்தார்கள். விளையாட்டு முடியும் வரை அங்கேயே இருந்ததால் வேறு எங்கேயும் செல்ல முடியவில்லை என்றார்.

உலகப் போட்டியை இந்தியாவில் ஒரு கோடி பேர் பார்த்ததாக பெருமைப் பட்டுக் கொள்கிறோம். அவர்கள் 10 கோடி மணித்துளிகள் வீணாவதை யாரும் உணர்வதில்லை. இது எத்தனை மாதங்கள், எத்தனை வருடங்களுக்கு சமம் என்பதை நீங்களே கணக்கு போட்டுப் பாருங்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கான உழைப்பு வீணா கிறது என்பதை மக்களும் அரசாங்கமும் உணர வேண்டாமா? இதனால் தான் வல்லரசு நாடுகளை வளர்ந்து வரும் நாடுகளோ, வளர துடிக்கும் நாடுகளோ, கிரிக்கெட் விளையாட்டை ஆதரிப்ப தில்லை.

ஆகையினால் நான் பகிர்ந்து கொள்ளும் கருத்து இரண்டுதான். 1.கிரிக்கெட்டை விட பழைய விளையாட்டுகளில் நம் வீரர்கள் உலக சாதனை படைத்திருந்தும் அந்த விளை யாட்டுகளோ அதன் வீரர்களுக்கோ உரிய அளவில் ஆதரவோ கவுரவமோ அளிக்கப்படுவதில்லை. அவ்வாறு அளிக்கப்பட்டால் ஒலிம்பிக்கில் இடம்பெற முடியாத  கிரிக்கெட் ஒன்றே இந்தியாவின் சிறந்த விளையாட்டு என்பது போல் அரசும் மக்கள் தொடர்பு சாதனங்களும் ஊக்குவிப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.

2. வளர்ந்து வரும் எந்த நாட்டிற்கும் நேர நிருவாகம் என்பது மிக முக்கியமானது. அதிலும் பெரும் மக்கள்தொகை கொண்ட இளைய சமுதாயத்தைப் பெரும்பான்மையாகக் கொண்ட நம் நாட்டிற்கும் உழைப்பே உயர்வைத்தரும் என்பதை நோக்கமாகக் கொண்டு நேரத்தை வீணடிக்கும் எந்த விளையாட்டிற்கும் அரசு அனுமதி அளித்தல் கூடாது.

கிரிக்கெட்டும் 20 ஓவர் கொண்டதாக மற்ற எல்லா விளையாட்டிற்கும் சமமான ஆதரவும்; ஊக்கமும் அளிக்கப்பட வேண்டும். இந்திய இளைஞர்களே மைக்ரோசாப்ட் போன்ற நிறுவன வளர்ச்சிக்கு பெரிதும் காரணம் என அந்த நிறுவனத்தின் தலைவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர்.

அப்படிப்பட்ட திறன் கொண்ட உழைப்பில் ஆர்வம் கொண்ட இந்திய இளைஞர்கள் நேரத்தை வீணாக்காமல், ஒன்றுபட்டு உழைப்பார்களே ஆனால் இந்தியா உலகிலே தலைசிறந்த நாடாகும் என்பதில் அய்யம் இல்லை. ஆதித்தனாரால் வளர்க்கப்பட்ட சடுகுடு என்னும் கபடி ஒலிம்பிக் விளையாட் டில் சேர்த்துக் கொள்ள பரிசீலிக்கப் படுகிறது என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
தகவல் :சி.நடராசன், சென்னை 40
(நன்றி: அன்புப்பாலம், செப்டம்பர் 2011

1 comment:

SURYAJEEVA said...

அனைத்து விளயாட்டுக்கலுமே மக்களை திசை திருப்பும் நடவடிக்கையே.. gladiator படம் அதனை அற்புதமாக எடுத்து உரைக்கும்

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...