அன்பார்ந்த விடுதலை வாசகர்களே!
உலக இதழியல் வரலாற்றில் ஆசிரியர் பொறுப்பில் 50 ஆண்டுகள் பணியாற்றிய சாதனைக்குரியவராக விளங்கும் ’விடுதலை’ ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் பணியைப் பாராட்டும் விதமாக, அதையும் தமிழினத்திற்கே பயன்படும் விதத்தில் 50000 விடுதலை சந்தாக்களைத் திரட்டித்தர தீர்மானித்துள்ளோம் என்பதை அறிந்திருப்பீர்கள். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பணியில் பங்கெடுக்க எங்களுக்கும் வாய்ப்பு வேண்டும் என்ற நம் இணைய வாசகர்களின் வேண்டுகோளுக்கேற்ப, இணையத்தின் மூலமாகவே தங்களுக்கோ (இந்தியா மற்றும் அயல்நாடுகள்), தங்கள் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கோ அல்லது தாங்கள் விரும்பும் நூலகம், படிப்பகம், பள்ளிக்கூடம், மன்றங்கள், சங்கங்கள் உள்ளிட்ட வெகுமக்கள் பயன்பாட்டு இடங்களுக்கோ அன்பளிப்பாகவும் வழங்கலாம்.
இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி, ’விடுதலை’யை எட்டுத் திக்கும் கொண்டுசேர்க்கும் பணியில் நாமும் ஈடுபடுவோம்! தமிழின விடுதலையை வென்றெடுப்போம்!!
தந்தை பெரியார்
ஒழுக்கக்கேடானதும், மூட நம்பிக்கைகளை வளர்க்கக் கூடியதும், தமிழ் மக்களுக்கு சமுதாயத்திலும், அரசியலிலும், உத்தியோகத் துறையிலும் கேடு அளிக்கக் கூடியதுமான காரியங்களை வெளியாக்கி, அக்கேடுகளைப் போக்குவதற்காகப் பாடுபடும் பத்திரகை விடுதலை.விடுதலை பத்திரிகை இல்லாதிருந்தால் மேற்கண்ட துறைகளில் ஏற்படும் கேடுகளை ஏன் என்று கேட்க நாதியில்லாமல் போயிருக்கும்.
(விடுதலை, 16.6.1964)
No comments:
Post a Comment