யாகசாலை பூஜை: 22 பக்தர்கள் பலியான கொடுமை கடவுள் காப்பாற்றவில்லையே!
ஹரித்துவார், நவ.9- ஹரித்துவார் அருகே கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலியானார்கள். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மன் மோகன்சிங் மற்றும் சோனியா காந்தி ஆகியோர் அனுதாபம் தெரிவித்து உள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவார் அருகே கங்கை நதிக் கரையோரம் சாந்திதீப் காட் என்ற இடத்தில் சாந்திகஞ்ச் ஆஸ்ரமம் உள்ளது. இதன் நிறுவனர் ஆச்சார்யா பண்டிட் சிறீராம் சர்மா. `சர்வதேச காயத்ரி பரிவார்' என்ற அமைப்பையும் இவரே நிறுவியவர்.
இவரது நூற்றாண்டு விழாவுக்கு காயத்ரி பரிவார் அமைப்பினர் ஏற்பாடு செய்து இருந்தனர். அதன்படி விழா கடந்த சில நாள்களாக நடந்து வந்தது.
விழாவின் உச்சக் கட்ட நிகழ்ச்சி யாக நேற்று யாகசாலை பூஜைகள் நடந்தன. இந்த பூஜை மற்றும் யாகத்தில் இமாச்சலப்பிரதேச மாநில முதலமைச்சர் பிரேம்குமார் துமால், மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், பா.ஜனதா தலைவர் நிதின் கட்காரி உள்பட ஏராளமான பிரமுகர்களும், வட மாநிலங்களைச் சேர்ந்த பல லட்சம் பக்தர்களும், வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டனர்.
நேரம் அதிகம் ஆக, ஆக மக்கள் யாகசாலை பந்தலுக்குள் முண்டி யடித்துக் கொண்டு செல்ல முயன்றனர். ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் முண்டியடித்துக்கொண்டு செல்ல முயன்றதால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
தலைதெறிக்க ஓடினார்கள்
அப்போது, யாகசாலையில் இருந்து கடுமையான புகை மூட்டம் ஏற்பட்டது. இந்தப் புகையில் சிக்கி பலர் மூச்சு திணறினார்கள். இதனால் அவர்கள் பீதியில் அலறியடித்துக் கொண்டு யாகசாலையை விட்டு வெளியேற தலைதெறிக்க ஓடினார்கள்.
இந்த நெரிசலில் சிக்கி 22 பேர் பலியானார்கள். அவர்களில் 14 பேர் பெண்கள். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்த பிரதமர் மன்மோகன்சிங் நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். படுகாயம் அடைந்தவர்களுக்கு நன்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ள அவர், காயம் அடைந்தவர்கள் விரை வில் குணமடையவும் வாழ்த்து தெரி வித்துள்ளாராம். அத்துடன் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.ஒரு லட் சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கவும் மன் மோகன்சிங் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியும் இந்த சம்பவம் பற்றி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்ததாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது. மேலும், விபத்தில் பலியானவர் களின் குடும்பத்தினருக்கு அவர் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத் தையும் தெரிவித்து இருப்பதாகவும், சம்பவ இடத்துக்கு உடனடியாக அதி காரிகள் விரைந்து சென்று நிவா ரணப்பணிகளை மேற்கொள்ளுமாறு அவர் உத்தரவிட்டு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
இந்த விபத்து பற்றிய தகவல் கிடத்ததும் மாவட்ட ஆட்சியர் டி.செந்தில் பாண்டியன் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று விசா ரணை நடத்தினார். மருத்துவமனைக் குச் சென்று அங்கு சிகிச்சை பெறு கிறவர்களை பார்த்து அவர் ஆறுதல் கூறினார். சம்பவம் குறித்து கூடுதல் ஆட்சியர் ஜி.எஸ்.ரவாத் நீதி விசா ரணை நடத்த உத்தரவிட்டு இருப்ப தாகவும், அவரது அறிக்கை கிடைத்த வுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அங்கு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
10 ஆம் தேதிக்குள் விழாக்குழுவினர் அந்த இடத்தை விட்டு காலி செய்ய வேண்டும் என்றும், அதற்குள் அனைத்து பக்தர்களையும் அவரவர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக் கும் வகையில் உடனடியாக அவர் களை அனுப்பும் பணிகளை தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- அண்ணா தி.மு.க. ஆட்சியில் அய்யா, அண்ணா படங்கள் குப்பையிலே! பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!
- அ.தி.மு.க. அரசுமீது விஜயகாந்த் சரமாரி குற்றச்சாற்று
- இலங்கைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள்
- ஹிட்லர் மோடியின் கொலை வெறியாட்டம் ஒவ்வொன்றாய் அம்பலத்துக்கு வருகிறது 4 பேர் என்கவுண்டரில் பலி!
- சிவகங்கை மாவட்டத்துக்கு புதிய தீயணைப்பு கோட்டம்: முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு
No comments:
Post a Comment