Wednesday, November 9, 2011

இதுவரை கோவில் நெரிசலில் சிக்கி 1000-த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாவு


இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில், கோவில் மற்றும் சமயம் சார்ந்த இடங்களில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

2011, ஜன. 14: ஆம் தேதி சபரிமலை, புல்மேட்டில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 104 பேர் பலி; 60 பேர் காயம்.

2010, மார்ச் 4: உத்தரபிரதேசம் மாநிலம் பிரதாப்கார்த் எனும் இடத்தில், கிரிபலு மகாராஜா ஆசிரமத்தில் உணவு வழங்கும்போது நெரிசல் ஏற்பட்டது. இதில் 63 பேர் பலி; 15 பேர் காயம்.

2008, செப். 30:  ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரி லுள்ள சாமுண்டா தேவி கோவில் விழாவின் போது, குண்டு வைக்கப்பட்டுள்ளது என புரளி கிளப்பப்பட்டது. இத னால் ஏற்பட்ட நெரிசலில், 250 பேர் பலி; 60 பேர் காயம்.

2008, ஆக. 3: இமாச்சல பிரதேசம் நைனா தேவி கோவிலில் வெடிகுண்டு புரளி கிளப்பப்பட்டது. இதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 150 பேர் பலி; 230 பேர் காயம்.

2008, ஜூலை: ஒடிசா மாநிலம், பூரி ஜெகன்நாதர் கோவில் தேரோட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில், 6 பேர் பலி; 12 பேர் காயம்.

2008, மார்ச் 27:  மத்தியபிரதேச மாநிலம், கரிலா கிராமத்தில் உள்ள கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் 8 பேர் பலி; 10 பேர் காயம்.

2008, ஜனவரி: ஆந்திராவில் உள்ள துர்கா மல்லேஸ் வரா கோவில் விழாவின் போது நெரிசலில் சிக்கி 5 பேர் பலி.

2007, அக்டோபர்: குஜராத் மாநிலம் பவகாத் கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் பலி.

2006, நவம்பர்: பூரி ஜெகன்னாதர் கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலி.

2005, ஜனவரி: மகாராஷ்டிரா மாநிலம், மந்தர் தேவி கோவில் விழாவின்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 340 பேர் பலி.

2003, ஆகஸ்ட்: நாசிக்கில் நடந்த கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலி; 125 பேர் காயம்.

1999, ஜன., 14: சபரிமலை பம்பை நதி கேம்ப் அருகில் ஏற்பட்ட நெரிசலில் 50 பேர் பலி.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

உங்கள் கருத்துக்கள்




1000 எழுத்துகள் மீதமுள்ளன



Security code
Refresh




முந்தைய இதழ்கள் 

< நவம்பர் 2011 >
தி செ பு வி வெ சன ஞா
  1 2 3 4 5 6
7 8 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30        

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...