Friday, October 28, 2011

சீனாவில் உலகத் தொழில் நுட்ப கல்வியாளர் மாநாடு


பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் கி.வீரமணி பங்கேற்று அறிவார்ந்த விளக்கம்
உலக பொறியியல் தொழில் நுட்பம், சுற்றுச்சூழல் எதிர்காலம் பற்றி விவாதிப்பு


பெய்ஜிங், அக்.28- உலகத் தொழில் நுட்பக் கல்வித் தலைமையாளர்கள் மாநாடு சீனத் தலை நகரான பெய்ஜிங்கில் நடைபெற்றது. இம்மாநாட்டில் வருங்காலத்தில் உலகில் பொறியியல் தொழில் நுட்பம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொறியியல் கல்லூரிகளின் எதிர்காலம் ஆகியவை விவாதிக்கப்பட்டன.

இம்மாநாட்டில் பல நாட்டு கல்வியாளப்  பெருமக்கள் கலந்து கொண்டனர். மேலும் ஷாங்காய் நகரத்தில் தமிழ்க் குடும்பங்களின் ஏற்பாட்டில் - பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தருக்கு உற்சாக வரவேற்பும் - விருந்தும் அளித்து மகிழ்ந்தனர். இது பற்றிய செய்தி வருமாறு:
சீனாவில் கல்வியாளர் மாநாடு

சீனாவில், அக்டோபர்,  20,21,22, 23 ஆகிய நான்கு நாள்கள் சீனத் தலைநகரமான பெய்ஜிங் நகரில் - உள்ள 110 ஆண்டு கால மூத்த பல்கலைக் கழகமான பீகிங் பல்கலைக் கழகத்தில், உலக தொழில் நுட்பக் கல்வித் தலைமையாளர்கள் கலந்து கொண்டு, வருங்காலத்தில் உலகில் பொறியியல், தொழில் நுட்பம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொறியியல் கல்லூரிகளின் எதிர்கால வளர்ச்சி பற்றிய ஆய்வுகள் - கலந்துரையாடல்கள் நடத்த பன்னாட்டுக் கல்வியாளர்கள் கலந்து கொண்ட மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சீனா, அமெரிக்கா, கனடா, இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஜப்பான், தைவான், அய்ரோப்பிய நாடுகள் முதலிய பற்பல நாட்டு பொறியியல் மற்றும் தொழில் கல்வி - பல்கலைக் கழகத் துணை வேந்தர் கல்வியாளர்கள், கல்லூரி முதல்வர் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் கி. வீரமணி

இந்திய குழுவில் சுமார் 60-க்கு மேற்பட்டவர் (அதில் தமிழ்நாட்டவர்கள் 40 பேர் அளவில்) கலந்து கொண்டனர்.

அதில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி. வீரமணி, திருமதி மோகனா வீரமணி, துணைவேந்தர் டாக்டர் நல். இராமச்சந்திரன், பன்னாட்டு கல்வி தொடர்பாளர் பேரா. உ. பர்வீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வானொலிப் பேட்டி

இதை அறிந்து சீன பன்னாட்டு வானொலி தமிழ்ப் பிரிவினர் வேந்தர் கி. வீரமணி அவர்களையும் துணைவேந்தரையும் அழைத்து 23-10.2011 அன்று வானொலி நிலையத்தில் (தமிழ்ப்பிரிவு 49 ஆண்டுகளாக இயங்குகிறது) திருவாளர்கள் வாணி, மைக்கேல், கிளாடியஸ் ஆகியோர் பேட்டிகண்டு (70 நிமிடங்கள்) ஒலிபரப்ப ஏற்பாடு செய்துள்ளனர்.
அதன்பிறகு 25.11.2011 அன்று இந்திய உணவகத்தில், ஷாங்காய் நகரத்தில் உள்ள ஷாங்காய் சங்கமம் ஏற்பாட்டில் தமிழ்க் குடும்பங்கள் பலவும், கலந்து கொண்டு அன்பான வரவேற்பை, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகவேந்தர், துணைவேந்தர் ஆகியோருக்கு பல்துறை அலுவலர்கள் வரவேற்பு - விருந்து கலந்துரையாடலாக நடத்தி மகிழ்ந்தனர்.

இதில் இந்திய தூதரக் கான்சல் திரு. எஸ். பாலச்சந்திரன் அய்.எஃப்.எஸ்., திரு. ராஜகோபால் மற்றும் பற்பல துறை கல்வியாளர்கள்,  வணிகப் பெருமக்கள்  கலந்து கொண்டு உரையாடி மகிழ்ந்தனர்.

அனைவரிடமும் உரையாடி இரவு 10 மணிக்கு நிகழ்வு முடிந்தவுடன் திரும்பினர்.

19ஆம் தேதி சீனா புறப்பட்டு, பெய்ஜிங், ஷாங்காய் நிகழ்வுகளில் கலந்து கொண்டு 27.10.2011 (நேற்று) இரவு தமிழர் தலைவரும், உடன் சென்றவர்களும் சிங்கப்பூர் வழியாக சென்னை வந்தடைந்தனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...