Saturday, October 1, 2011

விடுதலையை வாங்கிப் படியுங்கள் இனமானக் கேடயத்தை ஓங்கிப் பிடியுங்கள்


காகிதம் உட்பட விலையேற்றம் - விளம்பரம் அறவேயில்லை தவிர்க்க முடியாத நிலையில் விடுதலை தனி இதழ் ரூபாய் நான்கு


விடுதலையை வாங்கிப் படியுங்கள் இனமானக் கேடயத்தை ஓங்கிப் பிடியுங்கள்
புதிய அம்சங்களோடு விடுதலை வெளிவரும்!

விடுதலை ஆசிரியர் விடுத்துள்ள வேண்டுகோள் அறிவிப்பு

தவிர்க்க முடியாத காரணத்தால் விடுதலை தனி இதழ் 4 ரூபாயாகவும் ஆண்டு சந்தா ரூபாய் 1200 ஆகவும் உயர்த்தப்படுகிறது என்ற அறிவிப்போடு விடுதலையை வாங்கிப் படியுங்கள் - இனமானக் கேடயத்தைத் தாங்கிப் பிடி யுங்கள் என்று வேண்டுகோள் அறிக்கையை விடுத்துள்ளார் விடுதலை ஆசிரியர் கி. வீரமணி அவர்கள். அவர் வெளியிட் டுள்ளஅறிக்கை வருமாறு:

விடுதலை நாளேட்டின் வீரவரலாற்றில் - 77 ஆண்டு காலத்தில் - 50 ஆயிரம் சந்தாக்களை அளிக்க கழகக்குடும்பத்தவரும், பகுத்றிவாளர்களும், இன உணர்வாளர்களும் ஆன பெரு மக்கள் உலகத்தின் பற்பல நாடுகளில் உள்ளவர்கள் முதல் ஆர்வம் கரைபுரண்டு ஓட, ஓடி ஓடி சந்தாக்களை திரட்டும் பணி - ஒரு புரட்சி சகாப்தமாகவே நிலைபெறும் என்பது உறுதி.
நாடெங்கும் வீடெங்கும் பரவட்டும் விடுதலை!

விடுதலை நாடெங்கும் வீடெங்கும் பரவினால், அறியாமை இருட்டு அழிந்து, அறிவு ஒளி பெருகி, தன்மானம் தழைத்தோங்கிடும் என்பது உறுதி.

முனைந்து மும்முரமாய் தேனீக்களாக சுறுசுறுப் புடன் பணியாற்றி, இலக்கு நோக்கிய ஏவுகணை களாகும் என்னருந் தோழர்களுக்கு, தோழியர் களுக்கு எமது தலை தாழ்ந்த அன்பு வணக்கமும் நன்றியும்! இன்னொரு முக்கிய கசப்பான அறிவிப்பை மிகவும் தயக்கத்துடன் நமது வாசக நேயர்களுக்கு முன் வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு நமது ஏட்டின் நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது.

31.4.2003 வரை 4 பக்கத்துடன் வெளிவந்த விடுதலை ஏடு 02.05.2003 முதல் ஒரே நேரத்தில் பல வண்ணத்தில் 8 பக்கங்கள் அச்சு செய்யக்கூடிய புதிய வெப் ஆஃப்செட்  - Multi Colour Web Offset அச்சு இயந்திரத்தின் மூலம் பல வண்ண வடிவமைப்பில் 

6 பக்கத்துடன் வெளிவர தொடங்கியது.

15.05.2009 முதல் மேலும் 2 பக்கங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு 8 பக்கத்துடன் விலை மாற்றமின்றி (ரூ.3/- விலை யிலேயே) வெளிவந்து கொண்டிருந்தது.

திருச்சி பதிப்பு: அனைத்து வாசகர்களுக்கும் விரைந்து விநியோகம் செய்திடவும், வட்டார செய்திகள் வெளியிட வசதியாகவும் 17.09.2007 முதல் இரண்டாம் பதிப்பாக விடுதலை திருச்சி பதிப்பு வெளி வரத் தொடங்கி இன்று தனது 5ஆம் ஆண்டில் வீரநடை போட்டு வருகிறது.

தவிர்க்க முடியாத விலையேற்றம்

விடுதலை ஏடு அச்சிடப்படும் செய்தித்தாள் காகிதம் (சூநறள யீயயீநச) விலை கடந்த பல மாதங் களாக டன் ஒன்றுக்கு 24,000 ரூபாயிலிருந்து 32,000 ரூபாயாக உயர்ந்து விட்டது. அதுபோலவே மற்ற மை முதலிய தேவையான அச்சுப் பொருள்கள், மேலாண்மைச் செலவுகள் பல மடங்கு அதிகரித்து விட்டன.

கடந்த ஆண்டைவிட, ஒவ்வொரு மாதமும் கூடுதல் செலவு சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவாகும் நிலை - (சிக்கனமாக நடத்தியே இந்த நிலை) விளம்பர வருவாய்  என்பதோ அறவே இல்லாத ஏடு நம் ஏடு என்பது வாசகர்கள் அறியாத தல்லவே!
காரணத்தையும் வாசகர்கள் அறிவார்கள்.

தனி இதழ் ரூபாய் நான்கு

இந்த இக்கட்டானநிலையால், விடுதலை 8 பக்கங்களை குறைக்கலாமா என்கிறபோது, கழகத் தோழர்களும், வாசகர்களும் கூடாது; கூடவே கூடாது. விலையை உயர்த்துங்கள். பக்கங்களைக் குறைக்காதீர் என்று கட்டளை இட்டு விட்டார்கள்!

மற்ற நாளேடுகளும் - விளம்பர வருவாய் உள்ள ஏடுகள்கூட -விலையை ஏற்றிவிட்ட நிலையில், நமக்கு வேறு வழியில்லை. பொறுத்தருள்க, பேராதரவு தருக!

இன்று முதல் (அக்டோபர் ஒன்றாம் தேதி முதல்)

புதிய சந்தா விவரம்
தனி இதழ் ரூ.4/-
அரையாண்டுச் சந்தா ரூ.600
ஓராண்டுச் சந்தா ரூ.1,200
(பழைய சந்தாத் தொகைகள் இதற்கேற்ப இனி கணக்கிடப்படும்).

ஒரு குவளை தேநீர்கூட இப்பொழுது 5 ரூபாய் ஆயிற்றே!  - எண்ணிப் பாருங்கள்!
ஆதரவு தாரீர்!

புதிய புதிய அம்சங்கள்! (News paper) விடுதலை மேலும் அணிபூட்டி, மெருகேற்றப்படும்!

விலை மதிக்க முடியாத விடுதலைக்கு ஆதரவு தாரீர்!

விடுதலையை வாங்கிப் படியுங்கள்

இனமானக் கேடயத்தை ஓங்கிப் பிடியுங்கள்!
கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...