Monday, October 17, 2011

பெரியாரும், அம்பேத்கரும் எதிர்நீச்சல் போட்ட புரட்சியாளர்கள்!

சென்னை உணவுக் கார்ப்பரேசனில் (FCI) அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா பெரியாரும், அம்பேத்கரும் எதிர்நீச்சல் போட்ட புரட்சியாளர்கள்!

தமிழர் தலைவர் புகழாரம்

சென்னை, அக்.17- தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் ஒரு நாணயத் தின் இரு பக்கங்கள் - எதிர்நீச்சல் போட்ட புரட்சிக்காரர்கள் என்று புகழாரம் சூட்டினார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.

சென்னையில் உள்ள மத்திய அரசின் துறை யான உணவுக் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா - வட்டார அலுவலகத்தில் (கிரீம்ஸ் சாலையில்) 15.10.2011 அன்று மாலை 4 மணிக்கு பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கரின் 120ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது.

தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களை முக்கிய சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர்.

ஏராளமான இருபால் ஊழியத் தோழர்களும், தோழியர்களும் உற்சாகத்துடன் கலந்து கொண் டனர். தமிழ்நாடு அலுவலக பொது மேலாளர் திரு. எம். ஜெகதீசன் அவர்கள் தலைமை தாங்கி, டாக்டர் அம்பேத்கரின் சிறப்புகளையும் தொண்டி னையும் எடுத்துக் கூறியதுடன், இவ்விழாவிற்கு பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் கொள்கை வாரிசான கி. வீரமணி அவர்களை அழைப்பதுதான் சாலப் பொருத்தம்; அவர் வந்து தான் விழா நடைபெற வேண்டும் என்று உறுதிப் படத்  தோழர்களிடம் கூறினேன். அவர்களும் ஒப்புக் கொண்டு வந்தமைக்கு நன்றி என்று கூறி தலைமை உரையாற்றினார்.

கொள்கையே முக்கியம்!

துணைப் பொது மேலாளர் திருமதி சகுந்தலா அவர்கள் சிறப்பானதொரு வரவேற்புரையை நிகழ்த்தி அனைவரையும் வரவேற்றார்.

அடுத்து முன்னிலையேற்ற தெற்கு மண்டல பொது மேலாளர் ஒய்.கே. குஞ்சு அவர்கள் பேசும்போது, அவருக்கு விழா எடுக்கும் நாம் அவருடைய படத்திற்கு மாலை அணிவித்தால் மட்டும் போதாது. அவரது கொள்கைகளைப் பின்பற்றிட வேண்டும் என்று கூறி சில மணித் துளிகள் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

அதற்கடுத்து நிதித்துறை பொது மேலாளரான திரு. அரிவிக்கிராமன் அவர்கள் மிகவும் தெளிவாக பாபாசாகேப் விழாவை நாம் ஏன் கொண்டாட வேண்டும் என்பதை விளக்கியதோடு, அவரது லட்சியங்களை நாம் மனதிற் தாங்கி, வாழ்க்கையில் முன் எடுத்துச் செல்ல வேண்டும் என்று குறிப் பிட்டார். மற்றும் முக்கிய பொது மேலாளர்கள் என். ஜெகதீசன், அறிவு விக்கிரமன்,  துணை உயர் அதி காரிகள் திருவாளர் யாதவ், பதக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தமிழர் தலைவருக்குச் சிறப்பு
விழாக் குழவின் சார்பிலும் விழாத் தலைவர், செயலாளர், ஆகியோர் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி ரோஜா மாலை சூட்டி, ஏராளமான கிளைகள், உணவுக் கார்ப்பரேஷன் அமைப்புகள் சார்பிலும் சால்வை அணிவித்து மிகவும் பெருமைப் படுத்தினர்.

தமிழர் தலைவர் உரை

இறுதியாக விழாவின் முக்கியப் பேருரையை நிகழ்த்திய தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தன்னை பெரியாரின் தொண்டன் என்று அறிமுகப் படுத்தி வரவேற்றமைக்கு மிகுந்த நன்றி தெரிவித்ததோடு, தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் - இருவரும் எதிர்நீச்சல் அடித்து வென்று காட்டிய சமூகப் புரட்சியாளர்கள்.

அரசியல் புரட்சி, பொருளாதாரப் புரட்சியை விட மிகவும் தொல்லையானது. சமூகப் புரட்சிப் பணி. அதனை எதிர்ப்பு கண்டு சலிக்காமல் தொடர்ந்த தலைவர்கள் அவர்கள் வெறும் சமூக சீர்திருத்தவாதிகள் அல்லர்; சமூகப் புரட்சி யாளர்கள்.

வைக்கம் போராட்டம் ஏற்படுத்திய தாக்கம்!
1924இல் வைக்கம் போராட்டத்தை வரவேற்ற அம்பேத்கர் தமது மூக்கநாயக் ஏட்டில் (ஊமையர்களின் குரல்) எழுதியதோடு, அதைப் பின்பற்றியே 1927,28இல் மகாராஷ்டிரத்தில் நாசிக் அருகே மகத் குளத்தில் இறங்கும் போராட் டத்தையும், கலாராம் கோயில் போராட்டங் களையும் நடத்தினார்.

1927இல் மனுநீதியை எரித்தார். ஜாதியை ஒழிக்க வழி என்ற உரையை நிகழ்த்தாமலேயே ஜாட்பட் தோரக் மண்டல மாநாட்டில் ஏற்பட்ட சங்கடத்தை அறிந்து டாக்டர் அம்பேத்கருக்கு ஆதரவு தெரிவித்து அவ்வுரையை தனக்கு அனுப்பி வைக்குமாறு தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கரைக் கேட்டுக் கொண்டார்.

அவரும்   மகிழ்ச்சியோடு அனுப்பி வைத்தார். 1932-இல் அதை மொழிபெயர்த்து வெளியிட்டு பல்லாயிரக் கணக்கில் பரப்பச் செய்து, அம்பேத்கர் பெயர் தமிழ் நாட்டில் பரவலாக புகழ் பெற அந்நூலும், பணியும் காரணமாக இருந்தது.

மூன்றுமுறை சந்திப்பு!

அதற்குப்பின் 1940,44,53, (பர்மா)  ஆகிய மூன்று முறை முறையே பம்பாயிலும், சென்னை யிலும், பர்மா, ரங்கூனிலும் (உலக பவுத்தர் மாநாடு) இரு தலைவர்களும் சந் தித்து கருத்து, கொள்கை பரிமாற்றம் செய்தனர்.

ஜாதி-மனுதர்ம அமைப்பை ஒழிக்க கடவுள், மதம், சடங்கு சம்பிர தாயத்தை எதிர்த்த அம்பேத்கர் ஹிந்துமத பஞ்சம இழிவிலிருந்து நீக்கி சுயமரியாதை பெற்ற மனிதனாக  - பகுத்தறிவு சமத்துவ நெறியான பவுத் தத்தைப் பின்பற்றினார்.

ஜாதி படிக்கட்டு முறை

தந்தை பெரியார் 1954இல் பர்மாவில் அம் பேத்கரிடம் சொன்னார் பல லட்சம் தோழர்களுடன் சென்று சேருங்கள் என்று, இதே அக்டோபர் 15இல் தான் நாகபுரியில் அய்ந் தரை லட்சம் தாழ்த்தப்பட்ட சகோதரர்களுடன் தீட்சா பூமீ என்று அழைக்கப் படும் இடத்தில் புத்த மார்க்கத்தில் இணைந்தார்!

அதன் மூலம் பஞ்சம நிலைமாறி மனிதம் பெற்றார் என்பது போன்ற கருத்து களையும் தமிழர் தலைவர் விளக்கியதோடு, அம்பேத் கர் விளக்கிய படிக்கட்டு ஜாதி முறையினால்தான் (Graded Inequality) ஜாதிக் கலவரங்கள் நடைபெறு கின்றன. ஜாதியை ஒழிக் காமல் தீண்டாமையை ஒழிக்க முடியாது. பெண்ண டிமைக்கும்கூட மனுமுறை தான் (பெரும் பாலான மதத்தில்) அடிப் படையாக இருக்கிறது என்று மகளிர் உரிமைக் காகவே அவர் மத்திய சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார்.

இன்று மகளி ருக்கு தனிச் சொத்துரிமை சம உரிமை யாகவே மலர்ந் துள்ளது. சமூகப் புரட்சி யில் இது ஒரு முக்கிய சாதனை என் றெல்லாம் விளக்கி, உலக அறிஞர் அவர், வெறும் தாழ்த்தப் பட்ட சமுதாய மக்களுக்கு மட்டும் தலைவர் என்ற சிமிழுக் குள் அவரை அடைத்து விடக் கூடாது என்று கூறி, பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகள் தான் நம்மை மனிதர்களாக, சுயமரி யாதை உள்ளவர்களாக்கும் என்று விளக்கினார். சமூக நீதி ஏடான விடுதலையை அனைவரும் படியுங்கள் என்றும் கூறினார். ஆபிர காம் ஏஞ்சல்ஸ் நன்றி கூறினார்.

விழா மாலை 5.30 மணியளவில் முடிவுற்றது. தோழர்கள் மகிழ்ச்சியோடு கழகத் தலைவரை வழிய னுப்பினர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...