அதிக உயரம் கொண்ட மலை செவ்வாய் கிரகத்தில் இருக்கிறது.
சூரிய மண்டலத்தில் நாம் அறிந்துள்ள பிரபஞ்சத்திலேயே அதிக உயரம் கொண்ட மலையாக இருப்பது ஒலிம்பஸ் மலை என்னும் எரிமலை ஆகும்.
22 கி.மீ. உயரமும் (14 மைல்) 624 கி.மீ. (388 மைல்) சுற்றளவும் கொண்ட இந்த ஒலிம்பஸ் மலை எவரெஸ்ட் மலையைப் போன்று மூன்று மடங்குள்ளது. அதன் அடிபாகம் அரிஜோனா மாநிலம் முழுவதையுமோ அல்லது பிரிட்டிஷ் தீவுகள் அனைத்தையுமோ போன்ற பரந்த பரப்புடையது. அதன் எரிமலை வாய் 72 கி.மீ. (45 மைல்) சுற்றளவு கொண்டது; 3 கி.மீ. (ஏறக்குறைய 2 மைல்) ஆழம் கொண்ட இது லண்டன் மாநகரையே விழுங்க வல்லது.
இந்த ஒலிம்பஸ் மலை, ஒரு மலை என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற மக்களின் கருத்துக்கு ஏற்ப இருப்பதல்ல. தண்ணீர் வற்றிப் போன கடல் போன்ற ஒரு பெரிய பீடபூமியைப் போன்று அந்த மலையில் உச்ச இருந்தது. அதன் பக்கங்களும் அதிக சரிவானவையாக இல்லை. ஒன்று முதல் மூன்று டிகிரி வரையிலான அதன் ஏற்றத்தின் காரணமாக, அந்த மலையில் ஏறும்போது உங்களுக்கு உடல் வேர்க்கவும் செய்யாது.
வழக்கமாக மலைகளின் உயரத்தைக் கொண்டுதான் நாம் அவற்றை அளவிடுகிறோம். அவற்றின் அளவை வைத்து நாம் அவற்றை மதிப்பிட்டால், ஒரு மலைத்தொடரில் ஒரு மலையை மற்ற மலைகளில் இருந்து தனிமைப்படுத்திக் காண்பது என்பது அர்த்தமற்றது. அப்படிப்பார்த்தால் எவரெஸ்டு மலை ஒலிம்பஸ் மலையை ஒன்றுமில்லாததாகச் செய்துவிடும். ஏறக்குறைய 2400 கி.மீ.(1,500 மைல்) தூரம் உள்ள ஹிமாலயா-காரகோரம்-ஹிந்துகுஷ்-பாமீர் என்னும் ஒரு மாபெரும் மலைத் தொடரின் ஒரு பகுதியே எவரெஸ்ட் மலை.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் Te Book of General Igorace பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)
No comments:
Post a Comment