Sunday, October 16, 2011

தடி எடுத்த தண்டல்காரர்கள்!


தடி எடுத்த தண்டல்காரர்கள்!


பிரசாந்த் பூஷன் பட்டப்பகலில் இந்தியாவின் தலைநகரில் சிறீராம்சேனா என்னும் காவிக் காலிகளால் தாக்கப்பட்டார் (12.10.2011) தொலைக்காட்சி மூலம் இந்த காட்டுமிராண்டித்தனம் உலகம் முழுவதும் அம்பலமானது - அன்றோடு அந்தக் கதை முடிந்துவிடவில்லை.
குற்றவாளிகள் நேற்று முதல் நாள் (13.10.2011) புதுடில்லி நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றபோதும், அதே சிறீராம் சேனா காலிகள் அன்னாஹசாரே ஆட்களை அடித்துத் துவைத்துள்ளனர்.
நேற்று டில்லி மாஜிட்ரேட் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் நிறுத்தப்பட்டனர்.
குற்றவாளிகள் சார்பாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. காவல்துறை தரப்பில் ஜாமீன் கொடுக்கப்படக் கூடாது என்று ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
அதையும் மீறி அவர்களுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது அத்துமீறி நுழைந்த குற்றத்தைத் தவிர அவர்கள் செய்த குற்றங்கள் அனைத்தும் ஜாமீனில் வெளிவரக் கூடியவைகளே என்று நீதிபதி கூறியுள்ளார். இந்தக் கொடுமையை என்ன சொல்ல!
கத்திக் குத்து நடந்திருந்தால்தான் ஜாமீன் மறுக்கப்பட்டு இருக்குமோ!
ஒரு மூத்த வழக்கறிஞர் பட்டப் பகலில் கொலை வெறியோடு தாக்கப்படுகிறார். இந்தியா முழுமையும் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டு இருக்கின்றனர். தலைவர்கள் எல்லாம் கண்டிக்கின்றனர். இந்தப் பரபரப்பான உணர்ச்சி வயப்படக் கூடிய சூழலில் குற்றவாளிகளுக்கு ஜாமீன் சர்வ சாதாரணமாக வழங்கப்படுகிறது. ஆனால் மற்றவர்கள் விஷயத்தில்...?
பால்தாக்கரே போடும் சபாஷ்!
சிவசேனா தலைவர் பால்தாக்கரே என்ன சொல்லியிருக்கிறார்? காஷ்மீர் இந்தியாவின் மகுடம்; அதை வெட்டி ஏறிந்து விட வேண்டுமென்று பிரசாந்த்பூஷன் பேசியுள்ளார். அதற்காகத்தான் சரியான பரிசு அவர்களுக்குக் கிடைத்துள்ளது. தேச விரோத கருத்துத் தெரிவித்துள்ள பிரசாந்த்பூஷனுக்குப் பூ போட்டா அர்ச்சனை செய்வார்கள்? என்று வினா தொடுத்துள்ளார் மகாராட்டிர மாநில சண்டியர் பால்தாக்கரே!
மாற்றுக் கருத்தினைச் சொல்லுவதற்குக்கூட இந்த நாட்டில் உரிமை கிடையாதா? அப்படி  யாராவது கூறினால், அடி உதைதானா? அவர்கள்கூறும் இந்து ராஷ்டிரா என்பது என்ன என்று இப்போது புரிகிறதா?
பால்தாக்கரேமீது நீதிபதி கிருஷ்ணா ஆணையம் சுமத்திய குற்றங்கள்மீது வழக்குத் தொடுக்க முடியாமல் மாநில அரசு மூச்சுத் திணறுகிறது.
இப்படி பச்சையாக வன்முறையை ஆதரிக்கும் கும்பல் -மதவெறியை விசிறி விட்டு மக்கள் மத்தியில் பிளவுகளை உற்பத்தி செய்து நாளும் கலகம் விளைவிக்கும் பாசிஸ்டுகள் மறுபடியும் ஆட்சிக் கட்டிலில் ஏறத் துடிக்கிறார்கள். தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் ஆகிவிட்டான். அடியாட்களுக்கு ஜே போடுகிறார்கள் எச்சரிக்கை! எச்சரிக்கை!!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...