வெளிநாட்டுத் தமிழர்களும் விடுதலை இதழும்
வெளி நாட்டில் வாழுந்தமிழர்கள் பலர் "விடுதலை" இதழ் படிக்கின் றோம். பலர் தமிழ்நாட்டில் படிப்ப தற்கு முன்னரே கூட இணையத்தில் படித்து விடுகின்றோம்.
"விடுதலை" 50,000 சந்தாக்கள் சேர்க்க வேண்டும் என்று தமிழகத்தில் அனைவரும் முயற்சி செய்து ஆங்காங்கே 500, 1000, 2000 என்று உறுதியளித்துப் பெற்று வருகின்றனர்.
தனது இளவயது கனவுகளை ஒதுக்கி வைத்து விட்டுத் தந்தை பெரியார் அவர்களின் கட்டளையை ஏற்று ஆனால் ஊதியம் பெற மறுத்து ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்கள் ஆசிரியர் பொறுப்பேற்று 50 ஆண்டுகள் ஆகப் போகின்றன!
நான் விடுதலை படிக்க ஆரம்பித்திலிருந்து எனது தன்னம் பிக்கை வளர்ந்துள்ளது, மூடப் பழக்கங்கள், நம்பிக்கைகள் குறைந்துள்ளன, தமிழ் சொல் வளமும், பல கருத்து வளங்களும் வளர்ந்துள்ளன.பல கட்டுரைகள் முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரை கள் போல உள்ளன. அறிந்திராத பல செய்திகள் படிக்கும் போது வியப்பூட்டுகின்றன. பெரியார் பிஞ்சு ஒவ்வொரு குழந்தையும் பெற்றோரும் படிக்க வேண்டியது. உண்மை உண்மையிலேயே ஆங்கில ரீடர்ஸ் டைஜஸ்ட் மாதிரி தமிழர்களுக்குப் பயன்படும் வெளியீடு. எங்கள் புத்தகக் குழுவில் நான் பல செய்திகளைப் பகிர்ந்துள்ளேன். இதைச் சொல்லியுள்ளது வேறு யாருமல்ல. பிள்ளையாரிலிருந்து பெரியாருக்கு முன்னேறியுள்ள எனது வாழ்விணையர் மருத்துவர் சரோஜா அவர்கள் தான். ஆனால் அதற்காகும் அஞ்சல் செலவைப் பார்த்து இவ்வளவு ஆகிறது, இருந் தாலும் இணையத்தில் படிப்பதை விட காகிதத்தில் படிப் பதையே விரும்புகின்றேன்.ஆகவே அதற் கான தொகையை அனுப்புகிறேன் என்கிறார்.
நீங்கள் இணையத்தில் விடுதலையை எவ்வித கட்டணமு மின்றி படியுங்கள். ஆனால், விடு தலைக்கான சந்தா தொகையை அனுப்பி விடுங்கள். அதைக் கொண்டு ஊரில் உள்ள உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக் கும் நாங்கள் விடுதலை உண்மை பெரியார் பிஞ்சு மாடர்ன் ரேசன லிஸ்ட் ஆகியவற்றை அனுப்புகின் றோம். ஆகவே, உங்கள் உறவுகளுக் கும், நண்பர்களுக்கும் சிறந்த பரிசாக சந்தா அனுப்பும்படி அனைவரையும் வேண்டிக் கொள் கின்றேன். சந்தா தொகையுடன் அவர்களது முகவரிகளை எழுதி அனுப்புங்கள்.
இதற்கான தொகையை இணை யத்திலேயே அனுப்புவதற்கான paypal வசதியும் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.
முகவரி : மேலாளர், விடுதலை,
50 ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை 600007
தமிழ்நாடு, இந்தியா.
50 ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை 600007
தமிழ்நாடு, இந்தியா.
மேலும் விவரங்களுக்கு:
- டாக்டர் சோம.இளங்கோவன்
No comments:
Post a Comment