அரசமைப்புச் சட்டத்திற்கு ஒரு திருத்தம் கொண்டு வந்ததன் மூலம் 1976 இல் கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து மாற்றப்பட்டதன் பின்பு, கல்வித் துறையில் சட்டமியற்றும் அதிகாரம் பற்றி மத்திய, மாநில அரசுகளிடையே தவிர்க்க இயலாதபடி ஓர் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. நாடு முழுவதிலும் ஒரே மாதிரியான கல்வி முறை இருக்க வேண்டிய தேவை உள்ள போதும், மாநில அரசுகள் இந்த விஷயம் தங்களின் தனிப்பட்ட உரிமை என்று கருதி வருகின்றன. மத்திய அரசை விட தாங்கள்தான் மக்களின் கல்வித் தேவைகளை நன்றாக அறிந்திருக் கிறோம் என்ற காரணத்தை அவர்கள் கூறுகின்றனர். எனவே, கல்வி பற்றி எந்த ஒரு முக்கிய சட்டம் இயற்றும்போதும், மத்திய அரசு பயன் நிறைந்த வகையில் மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்க வேண்டுவது மிகவும் அவசியமாகிறது.
ஆனால், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபில் அவ்வாறு கருதவில்லை என்பது இழப்புக் கேடே. மாநில அரசுகளையும், கல்வியாளர்களையும் கலந்து ஆலோசிக் காமல், அலட்சியப்படுத்தி விட்டு இரண்டு முக்கியமான மசோதாக்களைக் கொண்டு வர அவர் முனைந்துள்ளார். நாடாளு மன்ற நிலைக்குழு இது பற்றி அவரிடம் குற்றம் காணும் அளவுக்கு, மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்கத் தவறிய, அவரது அணுகுமுறை இருந் தது. தொழிற்கல்வி நிறுவனங்கள், மருத்துவக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்களில் நிலவும் விரும்பத்தகாத, நியாயமற்ற பழக்க வழக்கங்களைத் தடை செய்யும் சட்ட மசோதா-2010 பற்றிய தனது அறிக்கையில் நாடாளுமன்ற நிலைக்குழு சட்டவரைவினை மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பி வைப்பதனால் மட்டுமே, மாநில அரசுகளைக் கலந்து ஆலோசித்து ஒப்புதல் பெறப்பட்டதாகக் கருதமுடியாது என்று தெரிவித்துள்ளது.
இது போன்ற நீண்ட அறிவுரையை, உயர்கல்வி நிறுவனங்களுக்கு இணைப்புச் சான்றிதழ் வழங்குதை கட்டுப்படுத்தும் தேசிய அமைப்பு சட்ட மசோதா-2010 இன் மீதும் நாடாளுமன்ற நிலைக் குழு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருக்கு வழங்கியுள்ளது.
தனது அறிக்கையில் நாடாளுமன்றக்குழு தெரிவித்து உள்ளதாவது:
உயர்கல்வித் துறையில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக அண்மையில் அறிமுகப்படுத்த உத்தே சிக்கப்பட்டிருந்த மற்ற சட்ட மசோதாக் களைப் போலவே, இந்த சட்ட மசோதா பற்றியும் மாநில அரசுகளையோ, கல்வியாளர்களையோ பொருள் பொதிந்த வகையில் கலந்து ஆலோசிக்க மனிதவள மேம்பாட்டுத் துறை தவறிவிட்டது என்று நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உயர்கல்வித் துறையில் சீர்திருத்தங் களை அறிமுகப்படுத்துவதில் கபில் சிபல் வேண்டுமானால் வேகமாகச் செயல்படு பவராக இருக்கலாம்.
ஆனால் இது போன்ற முக்கியமான பிரச்சினைகளில் மாநில அரசுகளை அலட்சியப்படுத்தி, அவற்றை கலந்து ஆலோசிக்காமல் செயல்படுவது, கூட்டாட்சித் தத்துவத் திற்கு எதிரானது மட்டுமல்லாமல், அவர் எந்த நோக்கத்திற்காக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார்களோ அந்த நோக்கத்திற்கே அது பெரும் இடையூறாக ஆகிவிடும் இதன் முக்கியமான காரணம் என்னவென்றால், இந்த சீர்திருத்தங் களில் பெரும்பாலானவற்றை நடைமுறைப் படுத்தவேண்டியவை மாநில அரசுகளும், மற்ற கல்வி நிறுவனங்களும், கல்வியாளர் களுமே என்பதுதான்.
(நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 17-10-2011)
No comments:
Post a Comment