Wednesday, October 26, 2011

அலுவலகத்துக்குள் சிறுநீர் கழிக்கலாமா?


அலுவலகத்துக்குள் சிறுநீர் கழிக்கலாமா?

கேள்வி: அரசு அலுவ லகங்களில் செய்யப்படும் ஆயுத பூஜை போன்ற வழி பாடுகளை சிலர் எதிர்க் கிறார்களே?

பதில்: அரசு அலுவ லகங்கள் பொது இடங்கள் என்பதால், அவற்றில் ஒரு மதத்தினருக்கு மட்டும் நம்பிக்கையுள்ள வழி பாடுகள் நடத்தப்படக் கூது. ஏனென்றால், நம் அரசு மதச் சார்பின்மைக் கொள்கையாகக் கொண்ட அரசு - என்ற அடிப்படையில் அரசு காரியாலயங்களில் ஆயுத பூஜை போன்றவை கூடாது என்கிறார்கள்.

சரி. தெருக்கள்கூட பொதுச் சொத்துதான். அது ஒரு மதத்தின ருடைய சொத்து அல்ல; அரசுக்குச் சொந்த மானது. அதில் ஆயுத பூஜை போன்றவை நடத்தப் படுகின்றனவே, அது பரவாயில்லையா? ஸ்வாமி ஊர்வலங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றனவே? அப்போது தெருக்களின் பொதுத் தன்மை கெட்டுச் சீரழிந்து விடாதா? அது பரவாயில்லையா?

மதச் சார்பின்மையை அடிப்படையாகக் கொண்ட அரசை நடத்துகிற அமைச் சர்கள், மந்திரிகளில் பலர் கோவிலுக்குச் செல்கி றார்கள்; சிலர் மசூதிக்குச் செல்கிறார்கள்; சிலர் சர்ச்சுக்கு செல்கிறார்கள். அதெல்லாம் பரவாயில் லையா? அவர்கள் எல்லாம் தனிப்பட்ட முறையில்தான் போகிறார்கள். அமைச் சர்களாகப் போகவில்லை என்றால், அந்த அமைச்சர் என்ற பதவியைக் கழற்றி வைத்துவிட்டா அங்கே செல்கிறார்கள்?

சரி, அதற்கு ஆட்சேபம் இல்லை என்றால், அரசு காரியாலயங்களில் ஆயுத பூஜை செய்பவர்கள், அர சின் சார்பாகவா அதைச் செய்கிறார்கள்? இல் லையே? தமிழக அரசு ஆயுத பூஜை செய்கிறது என்றா அறிவிக்கப்படு கிறது? அப்படியா நடத்தப் படுகிறது? இல்லையே? அங்குள்ள ஒரு சிலர் தங் களுடைய நம்பிக்கையின் படி செயல்படுகிறார்கள். அது பொது இடம், அங்கே அவையெல்லாம் கூடாது என்றால், தெருக்களிலும் அவையெல்லாம் கூடாது.
- துக்ளக் 26.10.2011

திருவாளர் சோ ராமசாமி அய்யர்வாளின் வாத(?)த்திறன் எப்படி இருக்கும் என்பதற்கு இந்த எடுத்துக்காட்டு ஒன்று போதுமே!

தெருக்களில் நடப்ப தெல்லாம் அரசு அலுவல கங்களுக்குள் நடக்கலாம் என்று கூறுகிறார். தெருக் களில் நாய்கள் போகும், பன்றிகள் போகும், நிர் வாண சாமியார்கள் போவார்கள், பைத்தியக்கா ரர்கள் போவார்கள். அதே போல அரசு அலுவலகங் களுக்குள்ளும் யாரும் போகலாம் என்று கூறு வாரோ!

தெருக்களில்கூட இஷ்டத்துக்கு யாரும் எந்தக் கோயிலையும் எழுப்பக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளதே - அதன்படி பார்த்தாலும்கூட அரசு அலுவலகங்களுக்குள் கடவுள் படங்களை மாட்டு வது பூஜை போடுவது என்பதெல்லாம் குற்றச் செயல்கள்தானே.

நடைபாதைக் கோயில் கள் அகற்றப்பட்டிருப்பது குறித்து மாநில அரசு களின் தலைமைச் செயலா ளர்கள் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகித் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதி பதிகள் கறாராக உத்தர விட்டார்களே!

அனுமதியில்லாமல் சாலைகளில், நடைபாதை களில் தமிழ்நாட்டில் கட் டப்பட்டுள்ள கோவில் களின் எண்ணிக்கை 77,450 என்றும் உச்சநீதி மன்றத்தில் தெரிவிக் கப்பட்டதே! இவற்றை யெல்லாம் வசதியாக மறந்து விடுவாரா திரு வாளர் சோ

நல்ல வேளை பொது வீதிகளில் மனிதன் சிறு நீர் கழிக்கிறான்; அது போல அரசு அலுவலகங் களிலும் கழிக்கலாம் என்று சொல்லாமல் விட் டாரே - அதுவரை க்ஷேமம் மகாக்ஷேமம் தான்!



No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...