Sunday, October 16, 2011

பசி கொண்டு இரு, மதியீனமாய் இரு!


(ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவுனர். ஸ்டீவ் ஜாப்ஸ்ன் 2005 ஆம் ஆண்டு   பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் முன்னிலையில் நிகழ்த்திய உருக்கமான  ஆங்கில உரையின் தமிழாக்கம் இது.)
"என்னுடைய 17 ஆம் வயதில், நான் படித்த வரிகள், "ஒவ்வொரு நாளையும் உங்களின் இறுதி நாளென்று வாழ்ந்தால், ஒரு நாள் நீங்கள் நினைத்தது சரியென்று தோன்றும்". இவ்வரிகள் என்னை ஈர்த்தது, கடந்த 33 வருடங்களாக தினம் காலையில் முகம் பார்க்கும் கண்ணாடியை பார்த்து என்னை நான் கேட்பது, " இந்நாள் என்னு டைய இறுதி நாளாக இருந்தால், இன்று என்ன செய்ய வேண்டுமோ, அதை நான் செய்தாக வேண்டுமா?". பின்வரும் வரிசையான நாள்களில் எப்பொழுதெல்லாம் இக்கேள்விக்கு பதில் "இல்லை" என்று வருகிறதோ, அப்பொழுது, என் வாழ் வில் குறிப்பிடப்படாத ஒன்றை நான் மாற்றியமைக்க வேண்டும், என்பது எனக்கு புரிந்தது.
விரைவில் மரணம் என்ற விடயம், என் வாழ்வை மாற்றி யமைக்க நான் கண்ட மிகமுக்கிய கருவி எனலாம். ஏனென்றால், வாழ்வின் அனைத்து எதிர்பார்ப்பு களும், பெருமைகளும், குழப்பத் தின் பயன்களும் இறப்பின் முகப் பில் இருப்பதால், உண்மையான முக்கியமானவைகளை மட்டும் என் வாழ்வில் எனக்கு விட படுகின்றன. இழப்பைப் பற்றிய சிந்தனையிலிருந்து வெளிப்பட, எதிர்க்க, "நீ விரைவில் மாண்டு விடுவாய்" என்ற எண்ணமே சிறந்த வழி.
ஒரு வருடம் முன்பு என் உடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்ததை அறிந்தேன். அன்றொரு காலை 7:30 மணியளவில் மருத்துவ கண்ணோட்டத்திற்கு (Scan) சென்று இருந்தேன், என்னுடைய கணையத்தில் கட்டி இருப்பதை சரியாக காணமுடிந்தது.
கணையம் என்றால் என்ன வென்று கூட எனக்கு தெரியாது. இது குணப்படுத்த இயலாத புற்றுநோய் என்று பரிசோதித்த மருத்துவர் கூறினார், மற்றும் மூன்றிலிருந்து நான்கு மாதங்கள் வரைதான் உடல் தாக்குப்பிடிக்கும் என்றார். ஆதலால் உங்கள் கடமை களை விரைந்து முடியுங்கள் என்று கூறினார். உயிரிழக்க தயா ராகுங்கள் என்றார் போலும். உங்கள் குழந்தைகளுக்கு பத்து வருடங்களில் செய்ய வேண்டியதை, சில மாதங்களில் செய்ய வேண்டும். இறுதியாக அனைவரிடமும் விடைபெறு கின்றேன் என்று சொல்ல வேண்டும் என்பது நிதர்சனம்.
ஒரு நாள் உடல் உள்நோக்கி (Endoscopy) மூலம், ஊசி நுனியின் வாயிலாக என் கணையத்திலிருந்து சில பாதிக்கப்பட்ட உயிரணுக்கள் எடுக்கப்பட்டன. அந்த செல் களை பரிசோதித்த மருத்துவர், "இந்த வகையான கணைய புற்றுநோயை குணபடுத்த இயலும்" என்று கூறியதாக என் மனைவி என்னிடம் அறிவித் தார். அறுவை சிகிச்சைக்கு உட்பட்டேன், இன்று நலமாக உள்ளேன். மரணத்தை உணர்ந்த நான், சில காலம் இனி வாழலாம் என்பதை யும் உணர்ந்தேன். இறப்பு ஒருவகை யில் பயனுள்ளதாக இருந்தாலும், அது ஒரு முழுமையான அறிவார்ந்த கோட் பாடு என்று, இவ்வாறு வாழ்கின்ற நிலையில் உங்களுக்கு உறுதியாக கூறிக்கொள்கின்றேன்:
உலகில் யாரும் இறக்க விரும்புவ தில்லை, சொர்க்கம் இருப்பதாக நம்பி, அங்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர் கூட இறக்க விரும்புவ தில்லை. எதாக இருந்தாலும் மரணம் என்பது நமது பயணத்தின் இறுதி முடிவு. யாரும் இதிலிருந்து தப்பித்து விலகிட இயலாது. அதனால் தான், மரணம் என்பது உயிரியக்கத்தின் உன்னத கண்டுபிடிப்பாகும். மரணம் என்பது உயிர் மாற்று முகவர். பழையவை கழிந்து புதியவை புகுத் தலாகும். இப்பொழுது புதியவையாக இருக்கலாம், ஆனால் படிப்படியாக காலப்போக்கில் பழமைப்பட்டுவிடும். மன்னிக்கவும், முரணாக இருந்தாலும் உண்மையே.
உங்கள் வாழ்வு வரையறுக்கப்பட் டது. மற்றவரின் வாழ்வாக அதை வீணாக்காதீர். யாரோ ஒருவரின் சிந்தனையில் மாட்டிக் கொள்ளாதீர். பிறரின் அபிப்பிராயக் கூச்சலில் உங்கள் அகக்குரலை விட்டுவிடாதீர். இவைகளில் முக்கியமானது, உங்கள் உள்ளுணர்வை பின்தொடர துணிவு கொள்ளுங்கள். அதற்கு தெரியும் உங்களுக்கு எது வேண்டும் என்று, மற்றவைகளெல்லாம் இரண்டாம் நிலை தான்.
என் இளமைக் காலத்தில், தி ஹோல் எர்த் கேட்டலாக் (The  Whole Earth Cataloue) என்ற தொரு வியக்கத் தக்க உலக பொது கருவூலம் ஒன்று என் தலைமுறையில் இருந்தது. மென்லோ பார்க்கில் இருக்கும் பண்பொத்தவரான ஸ்டீவர்ட் ப்ராண்ட் (Stewart Brand),அதை தன் கவிதை வடிவில் படைத்துள்ளார். 1960 ல் நிகழ்ந்த ஒன்று, தன்னுடமை கணிணி மற்றும் மேசை பதிப்பு களுக்கு முன்பு வந்தது. வெறும் தட் டச்சு, கத்தரி மற்றும் முனைவாக்கி புகைப்படக்கருவி (Polarois Camera) போன்றவைகளால் உருவாக்கப் பட்டது. கூகுள் இணையத்தை காகித வடிவில் காண்பது போல். அதாவது, 35 வருடங்களுக்கு முன்பு விளைந்த ஒரு சீர்மையான சீரிய சிந்தனை.
ஸ்டீவர்ட் மற்றும் அவர் குழுவின் பலப் பதிப்புகளில், இறுதி பதிப்பு 1970ல் வெளியிடப்பட்டது. அப்பொ ழுது, நான் உங்கள் வயதொத் திருந்தேன். அப்பதிப்பின் பின்புறம், ஒரு காலை நேர புறவழிச்சாலையின் படம் பதியப் பட்டிருந்தது. நீங்கள் ஓர் தீரமிக்கவராக இருந்தால், அதை காணும் போது ஒரு இலவச சாலைப் பயணம் செய்ய வேண்டுமென்று தோன்றும். "பசிகொண்டு இரு. மதியீனமாய் இரு" (Stay Hungry)  என்ற வரிகள் அப்படித்தின் கீழ் போடப்பட்டிருந்தது. அவ்வரிகள் ஸ்டீவர்ட் குழுவின் பிரயாவிடை விடுகையாகும். "பசி கொண்டு இரு. மதியீனமாய் இரு", என்ற வரிகள் என்றுமே எனக்காக நான் எடுத்துக்கொண்டவை. பட்டதாரிகளாகிய உங் களுக்கு நான் இப்பொழுது சொல்வதும் அதுதான். பசிகொண்டு இரு. மதி யீனமாய் இரு. அனை வருக்கும் மிக்க நன்றி."
(என்று தன் உரையை முடித்தார், ஸ்டீவ் ஜாப்ஸ்)
இதுபோன்றதொரு சீரிய சிந்தனையாளரின், கண்டு பிடிப்பாளரின், நற்பண்புடையவரின் வரிகளை கேட்கும் பொழுது, நாமும் அம்மனிதர் போல் ஒரு உயர்வை அடையவேண்டும் என்ற எண்ணம் நம் மனதில் துளிர்க்க வில்லை என்றால், நாம் ஆறறிவு கொண்ட உயிரல்ல. பசியாய் இருப்பவர் தான் உணவை தேடுவர், அதுபோலவே தன் வாழ்வின் நிலையை உயர்த பசி கொண்டு தேடி வேண்டியவற்றை பெற வேண்டும். மதியீனமாய் இருப்பவர் தான் அறிவை நோக்கி செல்வர், தன் அறியாமையை போக்க போக்க தான் இவ்வுலகை அறிவர். "நாம் புத்தியீனமாக இருக்கிறோம் விரைவில் அறிவை பெற வேண்டும்" என்று நினைத்து தேடிக்கொண்டே, கெட்டிக்கராத் தனத்தை வளர்க்க வேண்டும் என்பது அவ்வரிகள் மூலம் எனக்கு புரிந்தவை. நன்றி.
(ஆதாரம்: வீடியோ http:/www.youtube.com/watch?v=c5aY6rMbOBo மற்றும் தி ஹிந்து, பக்கம்:13, நாள்: 7.10.2011).
தகவல்: இரா. திலீபன்.
கண்ணந்தங்குடி கீழையூர், உரத்தநாடு

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...