Sunday, October 16, 2011

திருக்குறளின் பெருமைக்கு அறிஞர்களின் சான்றுகள்


சுயமரியாதைக்காரர்களும் திராவிடர் கழகத்தாரும் ஏன் குறளைப் பாராட்டு கிறார்கள் என்பது குறளைப் பற்றி பல பெரியோர்கள் கொடுத்திருக்கும் அபிப்பிராயத்தில் இருந்து உணரலாம்.
1. நாஸ்திகராகிய திருவள்ளுவர் கடவுள் வாழ்த்து கூறி இருக்கும் திறத்தை நாம் வியந்து போற்றாமல் இருக்க முடியாது.
நூல் முழுவதிலும் இந்துக்களுக்கு உரிய மூடநம்பிக்கைகள் பலவற்றிலிருந்து தாம் விடுபட்டிருப்பதை அவர் நன்கு விளக்கி யுள்ளார்.
- ரெவரண்ட் எலிஜஹூல் டி.டி
2. கருத்திலும் போக்கிலும் ஒப்புயர்வற்ற நூல்களில் தலையாயது திருக்குறள்.
சிற்சில வகுப்பினர்க்கு மட்டும் உரிய வாய்ப்பு உண்மைகளைப் பொருள்படுத்தா மலும் மனுநூலிலும் ஏனைய பல சாஸ்தி ரங்களிலும் காணப்படும் பல பொருத்த மற்றவைகள் நீக்கப்பட்டும் பொலிகிறது.
- ரெவரெண்ட் டபிள்யூ.ஹெச். ட்ரு
3. பார்ப்பனர்கள் பின்பற்றி வந்த சடங்கு மலிந்த பல தெய்வ வணக்கத்தைக் கண்டிப் பதற்கு தன் சொல்வன்மையையும், எழுத்து வன்மையையும் காட்டிவந்த பெரியார்கள் பலருக்கு ஒத்தவர்.
குறள் திராவிடரின் மனப்போக்கையும், உயரொழுக்கத்தையுமே நாடி நிற்பதாகும். நெருப்பினாலும், போரினாலும் இரக்கமற்ற கொடுமையினாலும் பார்ப்பனர் இந்தியாவில் புத்தமதம் பரவாதபடி அழித்தனர்.
-  சார்லஸ் ஈ.கவர்
4. பார்ப்பனர்களுக்கு அந்தணர் என்பது ஒரு சிறப்புப் பெயர். அவர்கள் அப்பெயரால் அழைக்கப்படுவதற்குத் தகுதி அல்லர் என்று குத்தலாக ஆசிரியர் கூறுகிறார். பார்ப்பனர் களுடைய தெய்வங்களை வஞ்சப் புகழ்ச்சியாக சுட்டிக் கூறி உள்ளார்.
-  ஈ.ஜே.ராபின்சன்
5 இப்போது வழங்குகிற பரிமேலழகர் உரையானது குறளின் இயல்களும் முறையும் திருவள்ளுவர் கருத்துக்கு மாறாயினவாகும்.
_ அரசன் சண்முகனார்
6. பண்டைத் தமிழரது கடவுள் கொள் கையை நன்கு அறிந்து கொள்ளுவதற்கு திருக்குறளே தக்க கருவியாகும். ஆரியக் கருத்துகள் சிலவே இந்நூலில் கண்டாலும் அவை பெரிதும் தழுவிக் கொள்ளவில்லை.
-  கா.சுப்பிரமணிய பிள்ளை எம்.ஏ.எம்.எல்.
7. ஆரியர் தரும சாஸ்திர முறை வேறு; தமிழறநூல் மரபு வேறாகும். வள்ளுவர் திருக்குறள் தமிழ் மரபு வழுவாது எடுத்து விளக்கும் தமிழ் நூல்.
- ச.சோமசுந்தர பாரதியார் எம்.ஏ.பி.எல்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...