பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் மோடியா, அத்வானியா என்று ஊடகங்களும் பி.ஜே.பி.யினரும் பல செய்திகளை உலவ விட்டு வந்தனர்.
பிரதமருக்கான வாக்காளர் நான் அல்லன் என்று சொல்லிக் கொண்டிருந்த அத்வானி திடீரென்று ரத யாத்திரை புறப்படுவேன் என்றார்.
பிரதமர் பதவிக்குப் போட்டியிட அத்வானி தயாராகி விட்டார் என்று பேசப்பட்டது. இதன் காரணமாக டில்லியில் நடைபெற்ற பி.ஜே.பி.யின் தேசிய செயற்குழுக் கூட்டத்தைப் புறக்கணித்தார் பிரதமர் பதவி என்னும் கற்பனையில் மிதக்கும் நரேந்திர மோடி.
குஜராத்திலிருந்து ரத யாத்திரை புறப்படுவதாக தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. அது திடீரென்று பீகாரிலிருந்து புறப்படும் என்று மாற்றி அறிவிக்கப்பட்டது.
மோடியின் முதல் எதிரியான பீகார் முதல் அமைச்சர் நிதீஷ்குமார் ரத யாத்திரையைத் தொடங்கி வைப்பார் என்றவுடன் மோடி ஆத்திரத்தின் உச்சிக்கே தாவி விட்டார்.
பிரதமர் வேட்பாளர் நான் அல்லன் என்று சொல்லி வந்த அத்வானியோ, ரத யாத்திரை புறப்பட்ட இரண்டொரு நாளில் குரலை மாற்றிக் கொண்டு விட்டார். உடல் நிலை சீராக இருந்தால் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் ஆவேன் என்று ஆழம் பார்த்து விட்டார் (Feeler).
இதன்மூலம் பிரதமர் பதவிக்கான நெடுநாள் ஆசை என்னும் பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது.
அடுத்த கட்டம் ஆரம்பமாகி விட்டது. விரைவில் பரபரப்பூட்டும் உள்குத்து விசேஷ காட்சிகளை தாமரைத் திரையில் காணத் தவறாதீர்கள்!
No comments:
Post a Comment