புதுடில்லி, அக். 16- ராமாயணம் பற்றி காலஞ்சென்ற அறிஞரும், மொழி யியல் வல்லுநருமான ஏ.கே.ராமானுஜம் எழுதிய புகழ் பெற்ற ஒரு பாடத்தை வரலாற்றுப் பாடத் திட்டத்தில் இருந்து நீக்குவது என்ற முடிவினை அண்மை யில் டில்லி பல்கலைக் கழகத்தின் அகடமிக் கவுன்சில் மேற்கொண்டது. வரலாற்றுத் துறையின் கடுமையான எதிர்ப்புக்கும் இடையே மேற்கொள்ளப் பட்டுள்ள இந்த முடிவால், தங்கள் இனத்தைச் சேர்ந்த கல்வியாளர்களே தங்களை ஏமாற்றிவிட்டனர் என்று பல்கலைக் கழகத்தின் பெரும்பாலான கல்வியாளர்களை உணரச் செய் துள்ளது.
முன்னூறு ராமாயணங்கள் அய்ந்து எடுத்துக்காட்டுகள், மொழி மாற்றம் பற்றி மூன்று சிந்தனைகள் என்ற தலைப்பிலான இக்கட்டுரை வரலாறு ஹானர்ஸ் பட்டப் படிப்புக்கான பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. நமது நாட்டிலும், வெளி நாடுகளிலும் உலவுகிற 300 வகையான ராமாயணங்களைப் பற்றி அக்கட்டுரை கூறுவதால், இந்துத்துவவாதிகளின் எதிர்ப்புக்கு அது உள்ளாகியது. கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று பல்கலைக் கழகத்தின் அகடமிக் கவுன்சிலில் இந்தப் பாடத்தை பாடத்திட்டத்தி லிருந்து நீக்குவது என்ற தீர்மானம் வாக்குக்கு விடப்பட்டபோது, வந்திருந்த 120 உறுப்பினர்களில் 9 பேர் மட்டுமே அதனை எதிர்த்தனர்.
நிச்சயமாக இது கல்வியாளர்கள் மேற்கொண்ட, கல்வி பற்றிய ஒரு முடிவல்ல. ஆனால், வலதுசாரிகளின் நிர்பந்தத்திற்கு கல்வி நிறுவனம் பணிந்து போகிறது என்பதற்கான சரியான எடுத்துக்காட்டேயாகும் இது. தங்களது தரத்தில் அகடமிக் கவுன்சில் பேரளவிற்கு சமரசம் செய்து கொண்டு, பெரும்பாலான மக்களின் ஆதரவு பெற்ற கொள்கை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்ற செய்தியை மாணவர் சமூகத்திற்குத் தெரிவித் துள்ளது என்று அகடமிக் கவுன்சில் உறுப்பினர் ராகேஷ் குமார் கூறுகிறார். அந்தத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த ஒன்பது உறுப்பினர்களில் அவரும் ஒருவர் ஆவார்.
வரலாற்றுத்துறையின் ஒப்புதல்
தற்போதுள்ள வரலாற்றுத் துறைத் தலைவர் பேரா. ஆர்.சி.தாகரன் ராகேஷ் குமாரின் கருத்தையே எதிரொ லிக்கிறார். கல்விக் கண்ணோட்டத் தில் இந்தக் கட்டுரை தரம் உயர்ந்த ஒன்றாகும். வரலாறு என்ற ஒரு பாடத்தைப் பொறுத்தவரை நமது மாணவர்களுக்கு இந்தக் கட்டுரை மிகவும் முக்கியமானது என்று வரலாற் றுத் துறை இதற்கு முன் இரண்டு முறை ஒரு மனதாகத் தீர்மானங்களை நிறை வேற்றியுள்ளது. ஆனால் அகடமிக் கவுன்சிலின் தீர்மானம் எங்களைக் கட்டுப்படுத்தவே செய்யும். இது பற்றி மேற்கொண்டு நாங்கள் செய்யக் கூடியது எதுவுமில்லை என்று அவர் கூறுகிறார்.
இந்தக் கட்டுரை மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக டில்லி உயர்நீதி மன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பின்னர் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தால் எடுத் துக் கொள்ளப்பட்டது. நிபுணர்களின் கருத்தை அறிந்து இந்த விவாகரத்தை அகடமிக் கவுன்சிலின் முடிவுக்கு வைக்குமாறு பல்கலைக் கழகத்தை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது. இந்த நிபுணர் குழு உறுப்பினர்களின் பெயர்கள் ரகசியமாக வைத்துக் கொள்ளப்பட்டன. நான்கு உறுப்பினர் களில் மூன்று உறுப்பினர்கள் இந்தக் கட்டுரை பற்றி மகிழ்ச்சியே தெரி வித்தனர். ஆனால் நாலாவது உறுப் பினர், இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு அது கடினமாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தார். மத உணர்வுகளைப் புண்படுத்தும் செய்தி எதுவும் இக்கட்டுரையில் இருப்ப தாக இந்த நிபுணர்கள் கூறவில்லை என்று எதிர்த்து வாக்களித்த மற்றொரு உறுப்பினர் பேரா.ரேணுபாலா கூறு கிறார்.
இதுபற்றி வாக்கெடுப்பு நடத்துவதற்கான அவசியமே இல்லை. இக் கட்டுரையின் கல்வித் தரம், தகுதியின் அடிப் படையில் அது தொடர்ந்து பாடத்திட்டத்தில் வைத்துக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். நமது கலாச்சாரம் எவ்வாறு பன்முகப்பட்டதோ, அதே போன்று நமது புராணக் கதைகளும் பன்முகப் பட்டவை. இந்த மாணவர்களுக்கு 18 வயதாகும் போது தேர்தலில் வாக்களிக்க நாம் உரிமை அளித்துள்ளோம். அப்படி இருக்கும்போது சிந்திப்பதற்காக உரிமையை ஏன் அவர்களுக்கு அளிக்கக்கூடாது என்று அவர் கேட்கிறார்.
ஏ.பி.வி.பி.யின் வன்முறை!
ராமானுஜன் கட்டுரையை பாடத்திட்டத்தில் பயிலச் செய்வதை எதிர்த்து பா.ஜ.க.வின் ஆதரவு பெற்ற அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் தொண்டர்கள் 2008 ஆம் ஆண்டில் வரலாற்றுத் துறை அலுவலகத்தில் நுழைந்து வன்முறைத் தாக்குதல்களை நடத்தினர்; அப்போதைய துறைத் தலைவர் பேரா.எஸ். இசட்.எச்.ஜப்ரி என்பவர் தன்னைக் காத்துக் கொள்ள தனது அலுவலகத்திற்குள் ளேயே ஒளிந்து கொள்ள வேண்டியதாயிற்று. என்னுடைய கருத்துக்கு என்ன மதிப்பிருக் கிறது? அகடமிக் கவுன்சில் இந்தத் தீர்மானத் தை நிறைவேற்றியுள்ளபோது, வரலாற்றுத் துறையினால் வேறு எதுவும் செய்ய முடியாது என்று அவர் கூறுகிறார்.
இதற்கிடையில், இக்கட்டுரை நீக்கப்பட்ட முறை பற்றி கல்வியாளர்கள் கோபமடைந் துள்ளனர். நிபுணர் குழுவின் கருத்துக்கோ, வரலாற்றுத் துறையின் கருத்துகளுக்கோ அல்லது தீர்மானத்தை எதிர்த்த உறுப்பினர்கள் முன்வைத்த வாதங்களுக்கோ அவர்கள் எந்த மரியாதையும் அளிக்கவில்லை. பல்கலைக் கழகத்தின் நலன் கருதி இந்தக் கட்டுரை பாடத் திட்டத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று அகடமிக் கவுன்சிலுக்கு துணை வேந்தர் கூறினார். உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர். மாறுபட்ட கருத்துக்கோ, குரலுக்கோ இங்கு இடமேயில்லை என்ற செய்தியை, இந்த முடிவு மாணவர்களுக்குத் தெரிவிக்கிறது என்று செயற்குழு உறுப்பினர் அபா தேவ் ஹபீப் கூறுகிறார். இந்தக் கட்டுரை பற்றி வேறுபட்ட கருத்து நிலவியபோதும், 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற அகடமிக் கவுன்சில் கூட்டத்தில் இக்கட்டுரை தொடர பலத்த ஆதரவளித்தவர் இவர்.
தான் ஒரு கல்வியாளராக இருந்தும், இது போன்ற ஒரு பிற்போக்குத்தனமான செயலில் ஈடுபட்ட துணை வேந்தரின் நிலைப்பாட்டில் நாங்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்துள் ளோம். இது போன்ற பாடங்களை நீக்குவது, ஒரு வகையான பாசிசத்துக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும். இது போன்றதொரு முடிவை எந்த ஒரு கல்வியாளரும் மகிழ்ச்சியுடன் ஏற்கவே மாட் டார் என்று அவர் கூறினார்.
தான் ஒரு கல்வியாளராக இருந்தும், இது போன்ற ஒரு பிற்போக்குத்தனமான செயலில் ஈடுபட்ட துணை வேந்தரின் நிலைப்பாட்டில் நாங்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்துள் ளோம். இது போன்ற பாடங்களை நீக்குவது, ஒரு வகையான பாசிசத்துக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும். இது போன்றதொரு முடிவை எந்த ஒரு கல்வியாளரும் மகிழ்ச்சியுடன் ஏற்கவே மாட் டார் என்று அவர் கூறினார்.
ஆனால், பல்கலைக் கழக அலுவலர்களோ, இது ஒரு பிரச்சினையே அல்ல என்றும், உச்ச நீதிமன்றத்திற்கு பதில் கூறவேண்டியிருந்ததால், இது பற்றி அகடமிக் கவுன்சிலின் முடிவுக்கு வைக்கப்பட்டது என்று கூறுகின்றனர். ராவ ணன் சீதையின் தந்தை, ராமனும் சீதையும் உடன்பிறந்தவர்கள் என்பது போன்றவைகளை இக்கட்டுரை தெரிவிக்கிறது. நமது மாணவர் களுக்கு அத்தகையவைகளைக் கற்பிக்க நாங்கள் விரும்பவில்லை என்று பெயர் தெரி விக்க விரும்பாத பல்கலைக் கழக ஊழியர் ஒருவர் கூறினார்.
கல்வியாளர்களின் கேலி!
வரலாற்றாசிரியர்களும், கல்வியாளர்களும் இந்த வாதத்தைக் கேலி செய்து ஒதுக்குகின் றனர். ஏ.கே.ராமானுஜன் அவர்களின் புகழ் பெற்ற மாபெரும் கட்டுரை டில்லி மத்தியப் பல்கலைக் கழகத்தால் தடை செய்யப்பட்டுள்ளது நம் அனைவருக்கும் பெரும் அவமானத்தை ஏற்படுத்துவதாகும் என்று கன்னட எழுத் தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி இந்து நாளிதழுக் காகக் கூறினார். வால்மீகி ராமாயணத்தைப் போற்றிப் புகழும் - பழைமையில் மிகுந்த நம்பிக்கை கொண்ட - நமது கல்வியாளர்களும் கூட, அத்துடன் பல வேறுபட்ட ராமாயணப் பாடங்களும், கதைகளும் நாட்டில் உள்ளன என்பதை நன்கு அறிந்தே உள்ளனர் என்று அவர் கூறுகிறார்.
இந்த ஆண்டு ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர் சந்திரசேகர் கம்பர், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு பட்ட கலாச்சாரங்களால் பலமுறை திருத்தி, மாற்றி எழுதப்பட்டுள்ளவை ராமாயணம் மற்றும் மகாபாரதப் பாடங்கள் . இத்தகைய பல்வேறுபட்ட பாடங்களைப் பற்றிய கற்றறிந்த பேரறிஞர் ஒருவரது ஆய்வைக் கூட சகித்துக் கொள்ள முடி யாத நிலை கல்விக் குடும்பத்தினர் அனை வராலும் கண்டிக்கப்பட வேண்டியதாகும் என்று கூறுகிறார்.
அவமானம்! அவமானம்!!
பேரா. அனந்தமூர்த்தி மேலும் கூறுகிறார்: ஷ்ருதி, ஸ்மிருதி, புராணங்களிடையே ஒரு வேறுபாட்டினை இந்தியா எப்போதுமே செய்து வந்துள்ளது. மாறுபட்ட நம்பிக்கையாளர்களுக்கு ஏற்ற மாறுபட்ட ஷ்ருதிகள், வேதங்கள், குரான், மற்றும் இதர மத நூல்களைப் போன்று பெரிய மாற்றங்கள் செய்யப்படாமல் இருந்து வந்துள் ளன. ஆனால், இதற்கு மாறாக ஆற்றல் வாய்ந்த ஸ்மிருதிகளும், புராணங்களும் அந்தந்தக் காலத்துக்கும், கலாச்சாரத்துக்கும் ஏற்ப மாற்றங்களைப் பெற்றே வந்துள்ளன. மகாபாரதத் தின் அனைத்துப் பிரச்சினைகளையும், ஒரு போர் நடைபெறாமலேயே, தீர்த்துவைக்கும் உரிமையை பாஷா போன்ற மாபெரும் கவிஞர்கள் எடுத்துக் கொண்டனர். ஆனால் நவீன உலகில் மத நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் வியாபாரமாக்கப்பட்டு, கேவலப்படுத்தப்படுவது, இழிவு படுத்தப்படுவது வியப்பளிப்பதாக இருக் கிறது. ராமாயணம் பற்றிய ராமானுஜன் அவர் களின் கட்டுரை தடை செய்யப்பட்டுள்ளது, ஜைனர்கள், புத்தர்கள் மற்றும் பல நாடோடிப் பாடகர்கள், கவிஞர்கள், ஆசிரியர்களை அவமானப்படுத்துவதாகும்.
(நன்றி: இந்து ஆங்கில நாளிதழ், 15-10-2011)
No comments:
Post a Comment